பிரீமியம் ஸ்டோரி
ஈஸி 2 குக்

ஓட்ஸ் ரவா தோசை

தேவையானவை: வறுத்த ரவை, வறுத்து பொடித்த ஓட்ஸ், பச்சரிசி மாவு - தலா கால் கப், பச்சைமிளகாய் - 2, புளித்த தயிர் - 1 கப், சீரகம், முழு மிளகு, கொத்தமல்லி, ஃப்ரூட் சால்ட் - தலா 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஈஸி 2 குக்

செய்முறை: பாத்திரத்தில் ரவை, ஓட்ஸ் பவுடர், பச்சரிசி மாவு, உப்பு, கொத்தமல்லி, சீரகம், மிளகு, பச்சைமிளகாய், புளித்த தயிர், ஃப்ரூட் சால்ட் போட்டு தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்குக் கலந்துகொள்ளவும். சூடான தோசைக்கல்லில், மாவை ரவா தோசைபோல ஊற்றி, வெந்ததும் எடுக்கவும்.

பலன்கள்:
குறைந்த கலோரி கொண்டது. நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் அனைவரும் சாப்பிட ஏற்றது. இதய நோயாளிகளுக்கு நல்லது.

மென்த்தி பச்சடி


தேவையானவை:
வெந்தயம் - 1/2 டீஸ்பூன், பூண்டு - 5 பல், பொடியாக நறுக்கிய வெங்காயம், வெல்லம் - தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - 1 குழிக்கரண்டி, எண்ணெய், உப்பு, கடுகு, பெருங்காயம் - தேவையான அளவு.

ஈஸி 2 குக்

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெந்தயம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு போட்டு வறுத்து எடுக்க வேண்டும். ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு, வெல்லம், உப்பு சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து அதில் சேர்க்கவும். பச்சை வெங்காயத்தை இதனுடன் அப்படியே கலந்துவிட வேண்டும்.

பலன்கள்: கர்ப்பிணிகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். பசியைத் தூண்டக்கூடியது. துவையலைச் சாப்பிடாத குழந்தைகள்கூட விரும்பிச் சாப்பிடுவர். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

- மினு, படங்கள்: பா.சரவணகுமார்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு