Published:Updated:

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

Published:Updated:
ஹெல்த்தி ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த்தி ஷாப்பிங்!

ஏர் பெட்

ஹெல்த்தி ஷாப்பிங்!

மூட்டுவலி, தோள்பட்டைவலி, முதுகுவலி, உடல்வலி உள்ளவர்கள் இந்தக் காற்றுப் படுக்கையில் படுத்துத் தூங்கினால், நல்ல நிவாரணம் கிடைக்கும். வெளியூர்களுக்குச் செல்லும்போது எடுத்துச் செல்ல வசதியான படுக்கை இது.

ஆக்டிவ் பேண்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

பெரிய ரிப்பன் போன்று இருக்கும் இதைக் கொண்டு முதுகு, கை, கால் என உடல் முழுவதற்குமான பயிற்சிகளைச் செய்ய முடியும்.

ஆக்டிவ் பேண்டு கிரிப்பர்

ஹெல்த்தி ஷாப்பிங்!

இதில் உள்ள கிரிப்பரை கை, கால்களில் வசதியாகப் பொருத்திக்கொண்டு உடற்பயிற்சிகளைச் செய்யலாம். தொடை மற்றும் புஜங்களில் உள்ள சதையைக் கரைக்க உதவும் இது, மூன்று வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது.

கிளவுஸ் - 100 பீஸ்

ஹெல்த்தி ஷாப்பிங்!

சுகாதாரம் தொடர்பான வேலைகளைச் செய்யும்போது, கைகளில் உறை மாட்டிக்கொள்வது நல்லது. இந்த கிளவுஸ் டிஸ்போசபிள் என்பதால், கழுவவேண்டிய, பராமரிக்கவேண்டிய அவசியம் இல்லை.

ஆக்டிவ் ஹீட்

ஹெல்த்தி ஷாப்பிங்!

கழுத்து, மூட்டு, கை மணிக்கட்டு, முதுகு, இடுப்பு, வயிறு, தொடைப் பகுதிகளில் உள்ள வலியைக் குறைக்கும் பேண்டு இது. சூடு ஒத்தடம் கொடுக்கும் வேலையை இந்த பேண்டு செய்யும். தசைகளின் இறுக்கத்தைக் குறைக்கும்.

நெபுலைசர் கருவி

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஆஸ்துமா நோயாளிகளுக்கான மருந்தை நேரடியாகவும் விரைவாகவும் நுரையீரலுக்குள் செலுத்த உதவும் மெஷின் இது. இதை, ‘பிரீத்திங் தெரப்பி மெஷின்’ என்பார்கள். மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும்.

யூஸ் அண்ட் த்ரோ பில்லோ -பெட் ஷீட் கவர்

ஹெல்த்தி ஷாப்பிங்!

படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள் இயற்கை உபாதைகளைக் கழிக்கும்போது பெட் பாதிக்காமல் இருக்க உதவும். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியலாம்.

- ப்ரீத்தி, படங்கள்: எம்.உசேன்

உதவி: ஜோமெட் ஹெல்த் கேர், ராயப்பேட்டை, சென்னை