Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்
கன்சல்ட்டிங் ரூம்

லாவண்யா, கரூர்.

“எனக்கு வயது 21. என்னுடைய ரத்த வகை பி நெகட்டிவ். கல்லூரியில், வெளியில் நடக்கும் ரத்த தான

கன்சல்ட்டிங் ரூம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முகாம்களுக்குச் செல்லும்போது, `நெகட்டிவ் பிரிவைச் சேர்ந்தவர்கள் தானம் செய்ய  தேவையெனில் சொல்கிறோம்’ என்று அனுப்பிவிடுகின்றனர். நெகட்டிவ் பிரிவைச் சேர்ந்தவர்கள், அதிலும் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாதா?’’

டாக்டர் ஜெ.அனன்யா, பொது மருத்துவர், திருப்பூர்.

“உங்கள் ரத்த வகை மிகவும் அரியது என்பதால் தற்போது வேண்டாம் என்று சொல்லியிருப்பார்களே தவிர, நீங்கள் எப்போதுமே ரத்த தானம் செய்யக் கூடாது என்று சொல்லியிருக்க மாட்டார்கள். பொதுவாக, மக்களிடம் பாசிட்டிவ் வகை ரத்தமே அதிகமாகக் காணப்படுகிறது; நெகட்டிவ் வகை ரத்தம் மிகக் குறைவாக இருக்கிறது. அதனால், நெகட்டிவ் வகை ரத்தத்துக்கான தேவை குறைவு. ஆனால், கிடைப்பதும் அரிது. முகாமில் ரத்த தானம் செய்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 42 நாட்களுக்குள் அந்த ரத்தத்தைப் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால், அது வீணாகிவிடும். அந்தக் குறிப்பிட்ட காலத்துக்குள் நெகட்டிவ் வகையினருக்கு ரத்தம் தேவை இல்லை எனில், நீங்கள் கொடுத்தும் பயன் இல்லாமல் போய்விடும். அதுவே, தேவை உள்ள நேரத்தில் ரத்த வங்கியில் இருந்து உங்களை அழைப்பார்கள். அப்போது கொடுத்தால் தேவையானவருக்குப் பயன்படும். பெண்கள் ரத்த தானம் செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ரத்த தானம் செய்பவரின் எடை 50 கிலோவுக்கு அதிகமாகவும், ஹீமோகுளோபினின் அளவு 12-க்கு மேலும் இருந்து, உடலில் எவ்விதமான நோய் பாதிப்புகளும் இல்லை என்றால், தாராளமாக ரத்த தானம் செய்யலாம். இயல்பாகவே, பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். மேலும், மாதவிலக்கு காலத்தில்  பெண்கள் ரத்த தானம் செய்யக் கூடாது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. மற்றபடி, ஆரோக்கியமான உடலைக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும், தாராளமாக ரத்த தானம் செய்யலாம். இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.’’

கன்சல்ட்டிங் ரூம்

அருண், கோவை.

“என் வயது 28. பணியின் காரணமாக அடிக்கடி ஹோட்டல்களில் தங்கவேண்டி இருக்கிறது. வெவ்வேறு தண்ணீரில் குளிப்பதால், உடல் முழுவதும் அரிப்பும், ஆங்காங்கே சிவந்து வீங்கவும் செய்கிறது. இதற்கும் அசைவ உணவு சாப்பிடுவதற்கும் தொடர்பு உள்ளதா... இதற்கு என்ன காரணம்...

கன்சல்ட்டிங் ரூம்

தீர்வு என்ன?”

டாக்டர் உமா கண்ணன், தோல் மருத்துவர், தேனி.

“அதிகமாகப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தண்ணீர் மாறுவதாலும் பயணத்தின் காரணமாக துணிகளைச் சுத்தமாக வைத்திருக்க முடியாமல் போவதாலும் இது போன்ற பிரச்னை ஏற்படலாம். ஹோட்டல்களில் உள்ள படுக்கை விரிப்பின் தூய்மையின்மை, அதில் இருக்கும் கிருமிகள், பூச்சிகளின் தொல்லை (மூட்டைப்பூச்சி உள்பட) காரணமாக இது போன்ற தோல் நோய்கள் ஏற்படுகின்றன. வெவ்வேறு தண்ணீரில் குளிப்பதால், அரிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை. உப்புத் தன்மை அதிகம் உள்ள நீரில் குளித்தால் அரிப்பு ஏற்படும். நல்ல தண்ணீரால் உடலைக் கழுவினால் அரிப்பின் வீரியம் குறையும்.

அதிகமாகப் பயணம் செய்வதால் வியர்வை அதிகம் சுரக்கும். அது தோலுக்கு அடியில் தங்குவதால், கிருமிகள் வெளியேறாமல் உள்ளேயே தங்கி, வளர்ந்து ஒவ்வாமையை ஏற்படுத்தும். அசைவம் சாப்பிடுவதால் என்றில்லை, ஒருவரின் உடலுக்கு ஒவ்வாத எந்த உணவை எடுத்துக்கொண்டாலும் அரிப்பு ஏற்படத்தான் செய்யும். தவிர, அசைவ உணவுகளில் சுவைக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்களால் தோலில் தடிப்புகள் உருவாகும். பயணங்களின்போது இது போன்ற பிரச்னை ஏற்பட்டால், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அலர்ஜியாக இருக்கும் என்று நீங்களாகவே கருதி, சுயமாக மருந்துகள் வாங்கிச் சாப்பிடக் கூடாது. அது, சில நேரங்களில் எதிர்வினை புரிந்துவிடும். அடிக்கடி உங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும் பட்சத்தில், ஒரு தோல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.’’

ராஜேஷ், உசிலம்பட்டி.

``எனக்கு வயது 32. எங்கள் ஊரில் அடிக்கடி கோயில் விழாக்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்காக உணவு விருந்து நடைபெறுவது வழக்கம். விழாவில், அசைவ உணவு சாப்பிடும்போது அசௌகரியம் ஏற்படுகிறது. சாப்பிட்டு முடித்தவுடன், சிறிது நேரத்தில் அஜீரணக் கோளாறும் அதன் காரணமாக உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. இதற்கு என்ன காரணம்? இதை, வீட்டு வைத்தியத்தில் சரி செய்துகொள்ள முடியுமா?’’

டாக்டர் து.சீனிவாசன், சித்த மருத்துவர், சிவகாசி.

கன்சல்ட்டிங் ரூம்“விசேஷ வீடுகளுக்குச் செல்லும்போது, உண்ணும் உணவை நன்கு மென்று சாப்பிடவேண்டும். ஓர் உணவுக்கும் அடுத்து எடுத்துக்கொள்ளும் உணவுக்கும் குறைந்தது 3 மணி நேரம் இடைவெளிவிட வேண்டும். நன்கு சாப்பிட்டுவிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு வெவ்வேறு விதமான எண்ணெய் சேர்த்த உணவுப் பொருட்களை சாப்பிடும்போது, வாயுத்தொல்லை ஏற்படும்; நெஞ்செரிச்சல் ஏற்படலாம். வெந்நீரில் பெருங்காயத்தைக் கலந்து குடித்தால், வாயுத்தொல்லை நீங்கும். அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால், சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படலாம். இதைத் தவிர்க்க, சீரகத்தை நீரில் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். இதனால் அஜீரணப் பிரச்னைகள் ஏற்படாது. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடியாக்கி, தண்ணீரில் கலந்து சாப்பிட, வயிற்றுப்போக்கு சரியாகும். பண்டிகைக் காலங்களில் கிடைக்கும் வெரைட்டியான உணவை உட்கொண்ட பின், வயிறு ஒருவிதமான மந்தமான சூழலில் இருக்கும். இதிலிருந்து தப்பிக்க ‘செரிமான லேகியத்தை’, ஒவ்வொரு நாளும் 5 கிராம் அளவு, இரண்டு வேளைக்கு எடுத்துக்கொள்ளலாம். நாட்டு மருந்துக் கடைகளிலேயே இந்த லேகியம் கிடைக்கிறது. ஏதாவது உடல் உபாதை ஏற்பட்டால், அருகில் இருக்கும் மருத்துவரை அணுகுவது நல்லது.”

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.