Published:Updated:

ஜென் Z தலைமுறை பிரச்னைகள்!

ஜென் Z தலைமுறை பிரச்னைகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z தலைமுறை பிரச்னைகள்!

ஜென் Z தலைமுறை பிரச்னைகள்!

ஜென் Z தலைமுறை பிரச்னைகள்!

ஜென் Z தலைமுறை பிரச்னைகள்!

Published:Updated:
ஜென் Z தலைமுறை பிரச்னைகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z தலைமுறை பிரச்னைகள்!
ஜென் Z தலைமுறை பிரச்னைகள்!

சென்ற தலைமுறையினர் டீன் வயதைக் கடந்த பின்புதான் கம்ப்யூட்டரையே பார்த்திருப்பார்கள். ஆனால், இந்தத் ஜென் Z தலைமுறையினர் கண் விழிப்பதே மொபைல்போனில்தான். சமீபத்தில், தன் பதின்ம வயதுப் பையன், எப்போதும் செல்போனும் கையுமாக இருக்கிறானே என்று மொபைல்போனை வாங்கி வைத்திருக்கிறார் அவனது அப்பா. மொபைல்போனை கொடுத்தால்தான் உண்டு என்று அடம் பிடிக்க ஆரம்பித்து, கோபத்தின் உச்சத்துக்கே சென்று அப்பாவை அடிக்கும் அளவுக்கு சென்றுவிட்டான் அவன்.

இன்றைய ஜென் Z தலைமுறை சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன? இவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன?

எலெக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்ஸ்...

செல்போன், டேப்லெட், லேப்டாப் போன்றவைதான் நம் நவீன வாழ்வின் வரமும் சாபமும். தகவல் தொடர்பு எளிதாகி உள்ளது. எதையும் உடனடியாகத் தெரிந்துகொள்ளவும் பகிரவும் முடிகிறது. அதே நேரம், இன்றைய இளையோர்கள் எப்போதும் எலெக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்ஸே கதி என்று கிடக்கிறார்கள்.

செல்போனை கையில் எடுத்தால் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்று நள்ளிரவு வரை அரட்டை அடித்துவிட்டு, விடிவதற்குச் சற்று முன்னர்தான் உறங்கச் செல்கிறார்கள். இது ஏற்படுத்தும் உடல், மனம் சார்ந்த பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இரவு என்பது நம் உடலின் உள் உறுப்புகள் தம்மை மறுநாளுக்குத் தயார் செய்துகொள்ளும் ஓய்வின் நேரம். இந்த நேரத்தில் நாம் விழித்திருக்கும்போது உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கிறது.

இதனால், உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மெலட்டோனின் என்ற ரசாயனம் நாம் தூங்கும் போதுதான் உடலில் சுரக்கும்.

இந்த ரசாயனம் சுரப்பதில் பாதிப்பு ஏற்பட்டால் உடல் சோர்வு, மனச்சோர்வு, தூக்கமின்மை, படபடப்பு, தன்னம்பிக்கைக் குறைவு உட்பட்ட பல்வேறு உடல், மனப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதிக நேரம் ஒளிர்திரையைப் பார்ப்பதால், பார்வைத்திறனும் பாதிக்கப்படுகிறது. மேலும், சமூகத்துடனான தொடர்பு குறைந்துபோய், தனிமைப்பட்டவர்களாக மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜென் Z தலைமுறை பிரச்னைகள்!

தீர்வு: செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை அளவாகப் பயன்படுத்த பெற்றோர் வழிகாட்ட வேண்டும்.

*விடியற்காலையில் எழுவது என்பது, முதல் நாள் சீக்கிரம் தூங்கச் செல்வதில்தான் உள்ளது. எனவே, இரவு 9 மணிக்குள் சாப்பிட்டு முடித்து, படுக்கைக்குச் செல்லும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

*தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு செல்போன், டி.வி உள்ளிட்ட ஒளிர் திரையைப் பார்ப்பதைத் நிறுத்திவிட வேண்டும்.

*டி.வி பார்ப்பதற்கு பதில், பாடல்கள், மெல்லிசை கேட்பது தூக்கம் வருவதற்கான இதமான சூழலை ஏற்படுத்தும்.

*எப்போதும் ஆன்லைனில் பேசுவதைவிட, விடுமுறை நாட்களில் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று சந்தியுங்கள். இதனால் உறவுகள் வலுப்படும்.

*மாணவர்கள் குரூப் ஸ்டடி செய்வது, அவர்களைத் தனிமையில் இருந்து மீட்க உதவும். பொது நிகழ்வுகளுக்குப் போவது, வெளியிடங்க ளுக்குச் செல்வதன் மூலம் சமூகத்துடனான தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

மாறிய உணவுப் பழக்கம்

பீட்ஸா, பர்கர் சாப்பிடுவதும் கூல்டிரிங்க்ஸ் குடிப்பதும்தான் ஃபேஷன் என இளம்  தலைமுறையினர் நினைக்கின்றனர். காலையில் எழுந்ததும் பேருக்கு எதையாவது கொஞ்சம் கொறித்துவிட்டு பள்ளி, கல்லூரிக்கு அவசர அவசரமாகக் கிளம்பிச் செல்கின்றனர். கல்லூரி கேன்டீனில் தற்போது விதவிதமான ஜங்க் ஃபுட்ஸ் கிடைக்கின்றன. இடைவேளையில் அந்த உணவை ரசித்து உட்கொள்கின்றனர். மதியத்துக்கு விரல் தடிமனே உள்ள டிபன் பாக்ஸில் எடுத்துச் சென்றிருந்ததை சாப்பிட்டு... மாலையில் ஸ்நாக்ஸ் கொறித்துவிட்டு, இரவில் இட்லியோ, தோசையோ உண்பதுதான் பல இளைஞர், இளைஞிகளின் மெனுவாய் உள்ளது. இப்படி எந்தச் சத்தும் இல்லாத உணவை உட்கொள்வதே ஃபேஷன் என்று கருதுகின்றனர். இதுவே, அவர்களுக்கு பல பாதிப்புகள் வருவதற்குக் காரணமாகிவிடுகிறது.

பெண் குழந்தைகள் முன்கூட்டியே பூப்பெய்த ஜங்க் ஃபுட் காரணமாக இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அனீமியா, சீரற்ற மாதவிலக்கு, சினைப்பை கட்டி உள்ளிட்ட மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்படுகின்றன. ஆண் குழந்தைகள் உடல்பருமனுடன் இருக்கின்றனர்.

தீர்வு: ஆரோக்கியமான உணவுகளே உடலின் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. வெள்ளை அரிசியுடன் சிவப்பு அரிசி, சிறுதானியங்களையும் சமஅளவு சேர்க்க வேண்டியது அவசியம்.

*காய்கறிகள், கீரைகள், பழங்கள் என வானவில் வண்ண உணவுகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் உடலுக்குச் சேர்க்க வேண்டும். இதனால், மாவுச்சத்து, புரதம், தாதுக்கள், நார்ச்சத்து, நுண்ணூட்டச் சத்துக்கள் போன்ற அத்தியாவசியமான சத்துக்கள் அனைத்தும் உடலுக்குக் கிடைக்கும்.

*சிறுதானியங்களில் செய்யப்பட்ட ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள், பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடலாம். இதனால், செரிமானம் மேம்படும். எடை கட்டுக்குள் இருக்கும்.

ஜென் Z தலைமுறை பிரச்னைகள்!

உடல் உழைப்பு - உடற்பயிற்சி

படிப்பு, மொபைல் என நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடச் செல்வது மிகமிகக் குறைவுதான். பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு வகுப்புகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.  இதனால், உடல் உழைப்பு என்பதே சுத்தமாக இருப்பது இல்லை. விளைவு, இளம் வயதிலேயே ஒபிசிட்டி, தொப்பை, சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் எனப் பல பிரச்னைகள் வருகின்றன.

தீர்வு:
உங்களுக்கென ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுங்கள். கிரிக்கெட்டோ, வாலிபாலோ, கால்பந்தோ... ஏன், நடனமாகவோ கூட இருக்கலாம். ஆனால், உடல் உழைப்பு முக்கியம்.

*படிப்புக்கும் வேலைக்கும் நேரம் ஒதுக்குவது போலவே, விளையாட்டுக்கும் உடற்பயிற்சிக்கும் கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும். விளையாட்டால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, மனமும் புத்துணர்ச்சி அடைகிறது.

*உடலையும் மனதையும் வடிவமைக்க விளையாட்டு ஓர் அழகான வழிமுறை. அதிகாலையில் எழுந்து தினசரி அரை மணி நேரம் நடப்பது என்ற வழக்கத்தை இப்போதே ஏற்படுத்துங்கள்.

*நீச்சல், ஜாக்கிங், வாக்கிங், சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்களில் ஈடுபடுங்கள். வாழ்நாள் முழுக்க உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் எளிய மந்திரம் இதுவே.

மனஅழுத்தம்


‘இன்றைய இளைஞர்களின் டாப் 10 பிரச்னைகளில் ஒன்று - மனஅழுத்தம்’ என்கிறது ஓர் ஆய்வு. கல்விச்சூழல், பணிச்சூழல், குடும்பச் சூழல், உறவுச்சிக்கல்கள் போன்ற பல காரணங்களால் இன்றைய இளைஞர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். எப்போதும் தனிமையில் இருப்பது, சமூகத் தொடர்பைத் தவிர்ப்பது, தன்னம்பிக்கைக் குறைவு, காரணமற்ற கோபம், எரிச்சல், படபடப்பு போன்றவை தீவிரமான மனஅழுத்தத்தின் அறிகுறிகள்.

தீர்வு:
என்ன காரணத்தால் மனஅழுத்தம் ஏற்படுகிறது என்று கவனிக்க வேண்டும். பெற்றோரிடம், நண்பர்களிடம், உறவினர்களிடம் மனம்விட்டுப் பேச வேண்டும்.

*தோல்விகளை ஏற்றுக்கொள்வது ஒரு முதிர்ச்சி. ‘எனக்கு மட்டுமே இது நடக்கிறது’ என்கிற மனோ பாவத்தைக் கைவிட்டுவிட்டு, பிரச்னைகளைக் களைவது எப்படி என ஆக்கப்பூர்வமாகச் சிந்தியுங்கள்.

*பாடத் திட்டத்துக்கு வெளியே பிற நல்ல புத்தகங்களை வாசிப்பது, இசை கேட்பது, இயற்கையான சூழலில் இருப்பது என ஆறுதல் தரும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

- இளங்கோ கிருஷ்ணன்

படம்: எம்.உசேன்