பிரீமியம் ஸ்டோரி
மழைக்கால ரூல்ஸ்!

ந்துவிட்டது மழைக்காலம். பெருநகரங்களில் உள்ள சாலைகளில் தேங்கும் சேறு, சகதிகளால் பரவும் நோய்கள், கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குன்யா போன்ற நோய்கள், சளி, காய்ச்சல் எனப் பல நோய்கள் நமக்கு முன்னர் வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றிலிருந்து, நம் குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க ஏற்ற வழிகளைப் பற்றிப் பார்ப்போம்.

*குழந்தைகளைப் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், கை கால்களைச் சுத்தமாகக் கழுவப் பழக்குங்கள்.

*குழந்தைகளைச் சேற்றில் விளையாட அனுமதிக்காதீர்கள். இதனால் தொற்றுநோய்கள் உண்டாகும்.

*எப்போதும் கையை நன்றாகக் கழுவியபின் சாப்பிடுவதற்குக் குழந்தைகளைப் பழக்குங்கள்.

*வீட்டில் கொசுவத்திச் சுருள் பயன்படுத்துவதைவிட, கொசு வலை பயன்படுத்துவது சிறந்தது.
வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நல்ல தண்ணீர் மூலமாக டெங்கு கொசு பரவும்.

*சாலையோரங்களில் விற்கும் பண்டங்களைத் தவிருங்கள்.

*ஏர் கண்டிஷனரை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். சுகாதாரமற்ற ஏசி காற்றால் கிருமிகள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

*மழைக்காலங்களில் அடிக்கடி காபி, தேநீர் அருந்துவதைத் தவிர்க்கலாம்.

*வாட்டர் ப்யூரிஃபயர் பயன்படுத்தினாலும்கூட, தண்ணீரை எப்போதும் கொதிக்கவைத்துக்  குடிப்பது நல்லது.

*மழைக்காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல் மற்றும் தலைவலிக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல்  மாத்திரைகள், இருமல் சிரப்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

*மழைக்காலத்தில் வெந்நீரில் குளிப்பது உடலுக்கு ஏற்றது. மிதமான சூடே போதுமானது.

*பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீர், கோலா பானங்கள் அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு