சூன்ய முத்திரை என்பது ஆகாயத்தைக் குறிக்கும். அதாவது, வெற்றிடத்தைக் குறிப்பது என்று அர்த்தம். இந்த ஏதுமற்ற வெற்றிடமே அனைத்துப் பொருட்களுக்கும் இருப்பிடத்தைத் தருகிறது. இந்த வெற்றிடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நமது உடலின் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.

எப்படிச் செய்வது?

ஆகாயத்தைக் குறிக்கும் நடுவிரலை மடக்கி, உள்ளங்கை நடுப்பகுதியைத் தொட வேண்டும். கட்டை விரலால் நடு விரலை அழுத்தவும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

வெறும் வயிற்றோடு செய்யவேண்டிய முத்திரை இது. தரையில் சப்பணமிட்டு உட்கார்ந்தோ, நாற்காலியில், கால்களைத் தரையில் பதித்தோ, ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

உடல்நலத்தில் குறைபாடு இருப்பவர்கள் மட்டும் இதைச் செய்யலாம். ஆனால், அதிக நேரம் செய்யக் கூடாது. ஆரோக்கியமாக இருப்பவர்கள் செய்ய வேண்டாம்.

பலன்கள்

*மனஅழுத்தம், கவலையால் ஏற்படும் நெஞ்சுவலி, அதிகமான சிந்தனை ஓட்டம், சீரற்ற ரத்த அழுத்தம், மனக்குழப்பம் ஆகிய பிரச்னைகளைப் போக்கும்.

*கடுமையான காது இரைச்சல், காதுக்குள் ஏதோ ஒலி கேட்பது, யாரோ பேசுவதுபோல் தோன்றுவது ஆகிய தொந்தரவுகளுக்கு 30 நிமிடங்கள் வரை செய்யலாம்.

*`வெர்டிகோ’ (Vertigo) எனப்படும் தலைச்சுற்றல் சில நாட்களிலேயே கட்டுப்படும்.

*வயோதிகம் காரணமாக அல்லது இடையில் ஏதேனும் சில காரணங்களால் காது கேளாமை, பிறவியிலேயே காது கேளாமை ஆகிய பிரச்னை இருப்பவர்கள் செய்துவர, மாற்றங்கள் தெரியும். காதில் சீழ், புண் ஆகியவை குணமாகும்.

*பயணங்களின்போது ஏற்படக்கூடிய தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் உள்ளிட்டவை வராமல் தடுக்க, இரண்டு நாட்களுக்கு முன்னரே செய்து வருவது நல்லது.

*தீவிர காய்ச்சல், நாட்பட்ட நோய்கள் ஆகியவை படிப்படியாகக் குறையும்.

*உடலில் ஏற்படும் மதமதப்பு தீரவும், நீண்ட நாட்களாக இருந்த தொண்டை வலி நீங்கவும் உதவும்.

*மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, கட்டியாக உதிரம் வெளியேறுதல், நீண்ட நாட்களுக்கு உதிரம் வெளியேறுதல் ஆகியவற்றுக்கு, மாதவிடாய் சமயத்தில் இந்த முத்திரையைச் செய்து பலனடையலாம்.

- ப்ரீத்தி,

படம்: தே.அசோக் குமார்