Published:Updated:

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

Published:Updated:
ஹெல்த்தி ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த்தி ஷாப்பிங்!

நிலவேம்புச் சாறு (125 மில்லி)

ஹெல்த்தி ஷாப்பிங்!

காய்ச்சல் இருந்தாலும் சரி, வராமல் தடுக்க வேண்டும் என்றாலும் சரி நிலவேம்பு கஷாயம் எடுத்துக்கொள்ளலாம். கஷாயம் செய்ய முடியாதவர்களுக்கு உதவியாக நிலவேம்புச் சாறு வந்துள்ளது. இளஞ்சூடான நீரில் 2 டீஸ்பூன் கலந்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வரலாம். மழைக் காலத்தில் இது மிகவும் உதவியாக இருக்கும்.

பாரம்பர்ய அரிசி தோசை மாவு மிக்ஸ் (300 கிராம்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

பாரம்பர்ய அரிசிகளான காட்டுயானம், கருங்குருவை வகை அரிசிகளில் கறுப்பு உளுந்து, மிளகு, சீரகம் சேர்த்து அரைக்கப்பட்ட தோசை மாவு மிக்ஸ். இதை 40 நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு தோசை சுடலாம்.

கஷாயா (100 கி)

ஹெல்த்தி ஷாப்பிங்!

தனியா, சீரகம், பட்டை, மிளகு, ஏலம், இஞ்சி, பாதாம், மஞ்சள் தூள் சேர்க்கப்பட்ட கஷாயம். இதை மழைக் காலங்களில் குடித்து வருவது நல்லது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும். இதைத் தண்ணீரிலோ பாலிலோ கலந்து குடிக்கலாம்.

ஆளி விதைச் சாறு (500 மில்லி)

ஹெல்த்தி ஷாப்பிங்!

இளஞ்சூடான நீரில் 2 டீஸ்பூன் அளவு கலந்து, தினமும் குடித்து வரலாம். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

கொடம்புளி கொள்ளுச்சாறு (500 மில்லி)

ஹெல்த்தி ஷாப்பிங்!

இளஞ்சூடான நீரில் 2 டீஸ்பூன் அளவு கலந்து தினமும் குடித்து வரலாம். கொள்ளு, உடலில் உள்ள ஊளைச் சதையைக் குறைக்கும்.

வீட் கிராஸ் (50 கி)

ஹெல்த்தி ஷாப்பிங்!

கோதுமைப் புல் பொடியில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் உள்ளன. இது, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலை டீடாக்ஸ் செய்ய உதவும்.

இம்யூன் லேகியம் (500 கி)

ஹெல்த்தி ஷாப்பிங்!

நெல்லிக்காயுடன் 36 மூலிகைகள் கலந்து தயாரிக்கப்பட்டது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தினமும் 2 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். சளித் தொந்தரவின்போது ஒரு டீஸ்பூன் சாப்பிட்டாலே பாதிப்பு நீங்கிவிடும். ரத்த உற்பத்திக்கு உதவும்.

மொலாசஸ் (442 மில்லி)

ஹெல்த்தி ஷாப்பிங்!

கரும்பிலிருந்து சர்க் கரையை எடுக்கும்போது சர்க்கரைப் பாகு வரும். இதைதான் `மொலாசஸ்’ என்கிறார்கள். இதில் இரும்புச்சத்து அதிகம் என்பதால், ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு ஏற்றது. இதில் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் ஆகியவை நிறைந்துள்ளன. முடி கொட்டுதல், சீரற்ற மாதவிலக்கு, மலச்சிக்கல், சருமப் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். சில வகைப் புற்றுநோய்களை எதிர்க்கும்.

- ப்ரீத்தி, படங்கள்: உ.கிரண் குமார், உதவி: இயல் ஆர்கானிக், பெரவள்ளூர், சென்னை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism