Published:Updated:

இண்டோர்...அவுட்டோர் - விளையாட எது பெஸ்ட்?

இண்டோர்...அவுட்டோர் - விளையாட எது பெஸ்ட்?
பிரீமியம் ஸ்டோரி
இண்டோர்...அவுட்டோர் - விளையாட எது பெஸ்ட்?

இண்டோர்...அவுட்டோர் - விளையாட எது பெஸ்ட்?

இண்டோர்...அவுட்டோர் - விளையாட எது பெஸ்ட்?

இண்டோர்...அவுட்டோர் - விளையாட எது பெஸ்ட்?

Published:Updated:
இண்டோர்...அவுட்டோர் - விளையாட எது பெஸ்ட்?
பிரீமியம் ஸ்டோரி
இண்டோர்...அவுட்டோர் - விளையாட எது பெஸ்ட்?
இண்டோர்...அவுட்டோர் - விளையாட எது பெஸ்ட்?

ன்றைய காலகட்டத்தில், வீட்டின் வரவேற்பறைதான் குழந்தை விளையாடும் இடமாக மாறிவிட்டது. ஓடிப்பிடித்து விளையாடுவது, உயரம் தாண்டுவது, கண்ணாமூச்சி விளையாடுவது என அனைத்தும் மறைந்து அதற்கு பதில், கம்ப்யூட்டர், வீடியோ, மொபைல் கேம், தொலைக்காட்சி, மியூசிக் பிளேயர் உள்ளிட்டவையே விளையாட்டு, பொழுதுபோக்கு விஷயமாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட 90 சதவிகித பெற்றோர், தங்கள் குழந்தையை வெளியே விளையாட அனுமதிப்பது இல்லை. வெளியே விளையாடுவது உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று கருதுகின்றனராம்.

தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் குழந்தைகளுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன என்கின்றன ஆய்வுகள். வீட்டுக்குள் இருக்கும் குழந்தை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது என்று பெற்றோர் கருதுகின்றனர். ஆனால், குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு தேவையானதை தவறவிடுகின்றனர் என்பதுதான் உண்மை. இது குழந்தையின் சமூக, உணர்வுபூர்வ, உடல் ரீதியான பாதிப்புகளை எதிர்காலத்தில் உருவாக்கலாம்.

இண்டோர் விளையாட்டு


வெளியே விளையாடும் நேரம் போக வீட்டுக்குள்ளே விளையாட, தாயக்கட்டை, பரமபதம், சொட்டாங்கல், பல்லாங்குழி அதன்பிறகு செஸ், கேரம் என பல விளையாட்டுக்கள் இருந்தன. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த பல குழந்தைகள், ஸ்மார்ட்போன் கேம் பிரியர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இண்டோர்...அவுட்டோர் - விளையாட எது பெஸ்ட்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாதிப்புகள்

ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், எந்த வகையிலும் குழந்தைகளின் அறிவுத்திறனை (ஐக்யூ) வளர்க்க உதவுவது இல்லை. குழந்தையின் சிந்திக்கும், செயலாற்றும் திறனை மழுங்கடிக்கின்றன.

இருட்டில் அமர்ந்து, ஒளிர் திரை கேம் விளையாடுவதால், விழித்திரை நரம்புகள் பாதிப்பு, பார்வைத்திறன் குறைவு,  திரையில் உண்டாகும் அதீத ஒளி, மூளை நியூரான்களைத் தூண்டி, தூக்கமின்மையை ஏற்படுத்தும். அடுத்த நாள் காலையில் தாமதமாக எழ நேரிடும்; அன்றைய நாள் சோம்பல் நிறைந்ததாக ஆகிவிடும். இதன் காரணமாக படிப்பில் கவனக் குறைவு, ஞாபகமறதி ஏற்பட்டு கற்றல்திறனும் பாதிக்கப்படும்.

ரத்தம், வன்முறை அதிகமாக இருக்கும் கேம் விளையாடுவதால் ‘டெம்பர் டான்ட்ரம்’ (Temper tantrum) எனப்படும் அதீதக் கோபம் மற்றும் முரட்டுத்தனத்துக்கு ஆளாகிறார்கள்.

வீடியோ கேம் விளையாடிவிட்டு, நொறுக்குத் தீனிகள் சாப்பிடும்போது உடல்பருமன் ஏற்படுகிறது.

தடுக்கும் வழிகள்

குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும். பெற்றோர் பேசுவதைப் பார்த்துதான், குழந்தைகள் பேச ஆரம்பிக்கின்றனர். குழந்தைகளுடன் பெற்றோரும் சேர்ந்து விளையாடும்போது குழந்தைகள்-பெரியவர்கள் ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். குழந்தைகள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள்; பெற்றோர்களின் கண்காணிப்பிலும் இருப்பார்கள்.

அதே நேரம் ஒரேயடியாக அவர்களை ஸ்மார்ட்போனில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதும் தவறு. அன்றைக்குப் படிக்க வேண்டியவற்றைப் படித்து முடித்த பிறகு குறிப்பிட்ட சிறிது நேரத்துக்கு மட்டும் விளையாட அனுமதிக்கலாம். முக்கியமாக, அறிவுத்திறனை மேம்படுத்தும் செஸ், ரூபிக் கியூப், கணித பசில் போன்ற விளையாட்டுக்களை விளையாடச் சொல்லி ஊக்கப்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு பிடித்த மியூசிக், நடனம், ஒவியம், நீச்சல் போன்ற பயிற்சிகளில் விடலாம். இதனால் வீடியோ கேம்களில் உள்ள மோகம் குறையத் தொடங்கும்.

புத்தகம் வாசித்தல் மற்றும் அறிவுத்திறனை வளர்க்கும் உள் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிடுவதே நல்லது.

தினமும் உடற்பயிற்சிகளை செய்யச் சொல்லலாம். பெரியவர்கள் நடைப்பயிற்சி  செய்யும்போது குழந்தைகளையும் பார்க்கில் விளையாட விடலாம்.  இதனால் ஓடிவிளையாடும் விளையாட்டுக்களால் கிடைக்கும் நன்மைகளும் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

அவுட்டோர் விளையாட்டு

குழந்தைகள் ஓடி விளையாடுவதால் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும்; செரிமானம் சீராகும்; நேரத்துக்குப் பசி எடுக்கும்; நன்கு தூக்கம் வரும். உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

மனத்துக்குப் பிடித்த ஏதோ ஒரு  விளையாட்டை மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதால் அதன் மூலம் தங்களை அறியாமலேயே உடல் ஆரோக்கியத்தையும் பராமரிப்பார்கள்.

குழுவாக விளையாடும் விளையாட்டுக்களால் தாழ்வு மனப்பான்மை, காழ்ப்புணர்ச்சி, வன்மம் போன்ற கெட்ட எண்ணங்கள் குறையும். ‘டீம் ஸ்பிரிட்’, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகியவை அதிகரிக்கும்.

காலை மற்றும் மாலை வெயிலில் கிரிக்கெட், ஃபுட்பால், வாலி பால் போன்றவற்றை விளையாடுவதால், உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தினமும் காலையில் அரை மணிநேரம் ஷட்டில், பாட்மிண்டன் போன்ற விளையாட்டுக்களை விளையாட குழந்தைகளை ஊக்குவிக்கலாம். அதே நேரத்தில் எந்த விளையாட்டையும் பெற்றோர் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது. அது அவர்களின் மனதை பாதிக்கும். குழந்தை எந்த விளையாட்டை விளையாடினாலும், அது அவர்களின் உடலுக்கும் மனதுக்கும் வேலை கொடுப்பதாக இருக்க வேண்டும். அதுவே அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது!

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

இண்டோர்...அவுட்டோர் - விளையாட எது பெஸ்ட்?

குழந்தைகள் ஓடியாடி விளையாட அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள பழங்கள், சிறுதானியங்கள், தானியங்கள், காய்கறிகள், அசைவ உணவுகள், பால் உள்ளிட்ட உணவுகளைக் கொடுத்தால், உடலில் தசை வலிமை அதிகரிக்கும். மகிழ்ச்சியைத் தூண்டும் ‘செரட்டோனின்’ ஹார்மோன் மூளையில் அதிகமாகச் சுரந்து, உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism