Published:Updated:

மருந்தில்லா மருத்துவம் - 24

மருந்தில்லா மருத்துவம் - 24
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 24

மருந்தில்லா மருத்துவம் - 24

மருந்தில்லா மருத்துவம் - 24

மருந்தில்லா மருத்துவம் - 24

Published:Updated:
மருந்தில்லா மருத்துவம் - 24
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 24
மருந்தில்லா மருத்துவம் - 24

ருந்தில்லா மருத்துவமுறையில், எப்படி நேரில் வந்து சிகிச்சை அளிப்பது என்பதை விவரித்திருந்தேன். ஆனால், இந்த சிகிச்சை முறையில், ஒருவர் நேரில் வராமலேயே சிகிச்சை பெற முடியும். இது சாத்தியமா? ரெய்கி சிகிச்சை முறையில் உலகம் எங்கும் வியாபித்திருக்கும் பிரபஞ்ச சக்தியை மட்டுமே நோயுற்றவரின் உடலுக்குள் ஊடுருவச்செய்வதால், இந்த சக்தி, நோயின் மூல காரணத்தை வெளியேற்றி, பூரண குணமடையச் செய்யும். இதே சக்தியை, ஆழ்நிலை தியானத்தின் மூலம் ஆக்ஞா சக்கரத்தைச் சார்ந்த மூன்றாவது கண் சக்தியை அதிகரித்து, அதன் மூலம் உலகில் எந்த இடத்தில் இருப்பவருடனும், தொடர்பு கொள்ள முடியும்.

இதனால் என்ன செய்ய முடியும்? ரெய்கி சிகிச்சை முறையில் ஆழ்நிலைத் தியானத்தில் மூன்றாவது கண் மூலம், வேறு இடத்தில் உள்ளவரின் ஆக்ஞா சக்கரத்துடன் தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம், தொலைதூர சிகிச்சை (Distant healing) அளிக்க முடியும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், கீமோதெரப்பி செய்வதற்கு முன்னர், ஒவ்வொருமுறையும் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொலைதூர சிகிச்சை செய்து கொள்வார். இதனால், கீமோதெரப்பியினால் வரும் உடல் சோர்வு, பக்கவிளைவுகள் அவருக்கு முற்றிலும் நீங்கின. நோயாளி மருத்துவமனையில் இருந்தாலோ, வர முடியாத நிலையில் வீட்டில் இருந்தாலோகூட, தொலைதூர சிகிச்சை அளிக்க முடியும். இதனால், நோயுற்றவரின் உடல்நிலை விரைவில் குணமாக வாய்ப்பு உண்டு.

50 வயதான பெண்மணிக்கு ‘மெனோபாஸ்’ எனும் நிலையில் ரத்தப்போக்குக் கட்டுக்கடங்காமல் இருந்தது. இவருக்கு, கர்ப்பப்பையை நீக்க அறிவுரை வழங்கப்பட்டது. ரத்தப்போக்குக் காரணமாக, வீட்டில் இருந்தே தனக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். காலை, மாலை இரு வேளையும் இவருக்குத் தொலைதூர சிகிச்சை அளித்து, ரத்தப்போக்கு கட்டுப்படுத் தப்பட்டது. இது நடந்து, 10 வருடங்களுக்குப் பின்னரும் இன்று வரை ஆரோக்கியமாக இருக்கிறார். அவருடைய கர்ப்பப்பை அகற்றப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருந்தில்லா மருத்துவம் - 24

ரெய்கி, சுஜோக் அக்குபஞ்சர் சிகிச்சையை அனைவரும் கற்றுக்கொள்ள முடியும். இதற்கு, பெரிய பெரிய படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உடல்நலம் பற்றிய அக்கறை மற்றும் புரிதல் இருந்தால் போதும். என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, சிகிச்சை அளிப்பதுடன், மீண்டும் பிரச்னை வராமல் இருக்க, எந்தப் புள்ளியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கிறேன். ஆஸ்துமா, கழுத்துவலி, தலைவலி, முதுகுவலி, முழங்கால்வலி, இரைப்பைப் புண் எனப் பலவித நோய்களுக்கும் அவர்களே தங்களுக்கு சிகிச்சை அளித்துக்கொள்ளும் ஆற்றலை அளித்துவிட்டால், எதிர்காலத்தில் அந்தப் பிரச்னை மீண்டும் வராமல் தடுக்க முடியும்.

கடந்த இதழில், பயோ ரிதம் (Bio Rhythm) பற்றிச் சொல்லியிருந்தேன். அந்த வட்டத்தைக் கவனத்துடன் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வோர் இரண்டு மணி நேரத்திலும் எந்த உறுப்பு ஆற்றலுடன் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப நடந்தாலே, பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளைத் தவிர்க்க முடியும். மனிதன் இயற்கையின் ஓர் அங்கம் என்பதை பயோ ரிதம் வெளிப்படுத்துகிறது. காலையில் நுரையீரலின் செயல்திறன் அதிகமாக இருக்கும். எனவே, நுரையீரல் செயல்பாட்டோடு தான் நம் அன்றாட வாழ்க்கை தொடங்குகிறது.
 
குழந்தைப் பிறந்ததும் முதலில் செயல்பட ஆரம்பிக்கும் உறுப்பும் நுரையீரல்தான். குழந்தை வீரிட்டு அழுவதால், நுரையீரலைச் சார்ந்த குடல் தன் பணியை மேற்கொண்டு, மெகோனியம் (Meconium) வெளி வரும். அப்போது வயிறு காலி ஆகிறது. பிறந்த குழந்தை பசியை உணர்கிறது.

தாய்ப்பால் அருந்துகிறது. இது இயற்கை. சிசு, பூமியில் பிறந்த உடனே, ஒவ்வொன்றாகச் செயல்படுவதைக் கவனித்தால், இந்தச் சக்கரங்களின் செயல்பாடு புரியும். பிராண வாயு, அதைச் சார்ந்த மலக்குடல், இரைப்பை என ஒவ்வொரு உறுப்பாக செயல்பட ஆரம்பிக்கின்றன. இதுதான், வாழ்நாள் முழுக்க அவர்கள் உயிரி கடிகராமாக அவர்களுக்குள் செயல்படுகிறது. இவை மூன்றும் சரியாகப் பணியாற்றினால், மற்ற உறுப்புகள் தானே சமநிலையில் இயங்கும். பிரபஞ்ச சக்தியால் இயங்கும் தானியங்கி உறுப்புகள் ஏதேனும் ஒன்று சக்தியை இழந்தால், நோய் அல்லது உபாதைகள் ஏற்படுகின்றன.

இந்தத் தத்துவத்தால் நாம் அறியவேண்டியது, நம் உடல் சக்தியினால் இயங்குவது. நோயுற்றபோது சக்தியைத் தூண்டி, நிவாரணம் அளிக்க வேண்டும். சக்தியே மருந்துதான். ரசாயனக் கலவைகளான மருந்துகள் இதற்கு ஈடாகாது. ஆயினும், மற்ற மருத்துவ முறைகளால் மருந்துகளை உட்கொள்பவர்கள், மருந்தில்லா மருத்துவத்தை நாடும்போது, இந்த மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தச் சொல்வது இல்லை. மருந்தில்லா மருத்துவத்தில், இந்த வியாதியைக் குணப்படுத்த முடியுமா, அவசரசிகிச்சைக்கு உதவுமா, நாட்பட்ட வியாதிகளைக் குணப்படுத்த முடியுமா என்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. உடலையும் மனதையும் ஊடுருவி எந்த வியாதியையும் குணப்படுத்தும் அபூர்வ ஆற்றல் பிரபஞ்ச சக்திக்கு உண்டு.

ரெய்கி, சுஜோக் அக்குபஞ்சர் முறைகளைக் கற்பது எளிது. இந்த மருந்தில்லா மருத்துவ முறையைக் கற்பதன் மூலம், நீங்கள் மட்டும் அல்ல... மற்றவர்களையும் ஆரோக்கியத்துடன் வாழவைக்க முடியும்.

- நிறைவுற்றது

தொகுப்பு: பா.பிரவீன் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism