Published:Updated:

பி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்!

பி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்!
பிரீமியம் ஸ்டோரி
பி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்!

பி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்!

பி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்!

பி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்!

Published:Updated:
பி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்!
பிரீமியம் ஸ்டோரி
பி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்!
பி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்!

திருமணம் ஆகி ஓராண்டு ஆகிவிட்டது... இன்னும் கருத்தரிக்கவில்லை’’ என்று ஒரு தாய் தன் மகளை அழைத்துவந்தார். சற்று உடல்பருமனாக இருந்தார் அந்தப் பெண். முகத்தில் ரோமங்கள் வளர்ந்திருந்தன... பார்த்ததுமே அவருக்கு `பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ (Polycystic ovary syndrome (PCOS)) பிரச்னையாக இருக்கலாம் எனத் தெரிந்தது. உறுதிசெய்ய, “அவருக்கு மாதவிலக்கு சுழற்சி எத்தனை நாட்களுக்கு ஒருமுறை நடக்கிறது?” என்று கேட்டபோது, “ஆறு மாதங்களுக்கு ஒரு முறை’’ என்றார். அவர் சொன்னதுமே அது பி.சி.ஓ.எஸ்தான் என்பது தெரிந்தது. மாதவிலக்கு வந்தால், அதீத ரத்தப்போக்கும் வலியும் வரும் என்றும் தெரிவித்தார்.

“உடல்பருமனாக இருக்கிறது; மாதவிலக்கும் சரியாக வரவில்லை. முன்கூட்டியே மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றிருக்கலாமே...’’ என்றபோது, “நான் ஹெல்த்தியா இருக்கிறேன் டாக்டர். நல்லா சாப்பிடுறேன். நல்லா தூங்குறேன். எல்லாம் நார்மலா இருக்கு. அதனால, பீரியட்ஸை ஒரு பிரச்னையா நினைக்கலை. சரியான பீரியட்ஸ் வரவில்லை என்பதால், உடலில் கெட்ட ரத்தம் சேர்ந்து வெயிட் போட்டுட்டேனு நினைச்சேன்” என்றார் அந்தப் பெண். 

படித்தவர்கள் மத்தியிலேயேகூட பி.சி.ஓ.எஸ் பற்றிய விழிப்புஉணர்வு மிகமிகக் குறைவாக இருக்கிறது. பலரும், அதுபற்றித் தெரியாமலேயே திருமணம் வரைகூட வந்துவிடுகின்றனர். பி.சி.ஓ.எஸ் காரணமாகக் கருத்தரிப்பது தடைபடும்போதுதான் மருத்துவர்களையே சந்திக்கின்றனர். அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்யப்பட்டதில், பி.சி.ஓ.எஸ் உறுதியானது. கடைசியில், அந்தப் பெண்ணுக்கு ஹார்மோன் சிகிச்சை அளித்து, பீரியட்ஸ் வர வைத்தோம். ``இது தற்காலிகமானதுதான். நிரந்தரத் தீர்வு வேண்டும் என்றால், அது உங்கள் கையில்தான் உள்ளது” என்று சொல்லி, அவருக்கான வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பரிந்துரைத்து அனுப்பிவைத்தேன்.  அவர் தன் வாழ்க்கைமுறையை மாற்றி, குழந்தைப்பேறை அடைய ஆறு மாதங்கள் ஆகின.

பி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்றைக்கு இந்தியாவில் ஒன்பது சதவிகி தத்துக்கும் அதிகமான இளம் பெண்களுக்கு பி.சி.ஓ.எஸ் பிரச்னை உள்ளது. பி.சி.ஓ.எஸ் என்பது ஹார்மோன் தொடர்பான பிரச்னை. ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாக, சினைப்பை (ஓவரி) வீக்கம் அடைகிறது. சினைப்பை என்பது கர்ப்பப்பையின் வலது மற்றும் இடதுபுறங்களில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு சினைப்பையிலும் லட்சக்கணக்கான கருமுட்டைகள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் சில நூறு மட்டுமே முதிர்ச்சி அடையும். ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாக, இந்த முட்டைகள் அடங்கியிருக்கும் பைகள் நீர்கோத்துப் பெரிதாகின்றன. இதனால், முட்டை முதிர்ச்சியடைவது தடைபட்டுப் போகிறது.

இதன் காரணமாக, மாதவிலக்கு சுழற்சியில் மாறுதல் ஏற்பட்டு, ஆறு மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படாத நிலை வருகிறது. ஆண்களைப்போல, பெண்களுக்கு மீசை வளர்ச்சியடைகிறது. முகப்பரு அதிகமாகிறது. உடல்பருமன் ஏற்படுகிறது. மாதவிலக்கின்போது, அதீத ரத்தப்போக்கும் வலியும் ஏற்படுகிறது. குழந்தைப்பேறு தடைப்படுகிறது.

காரணம் என்ன?

பி.சி.ஓ.எஸ் ஏற்பட உடல்பருமன், உடல் உழைப்பு இன்மை, மரபியல் கோளாறுகள் முக்கியக் காரணியாக இருக்கின்றன. நான், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவராகப் பணியைத் தொடங்கிய காலத்தில் பி.சி.ஓ.எஸ் என்று வரும் பெண்களின் எண்ணிக்கை ஒன்றிரண்டாக இருந்தது. இன்று, அது பலமடங்கு அதிகரித்துவிட்டது. இதற்கு, இளம் பெண்கள் எப்போதும் படிப்பு, படிப்பு என்று உடல் உழைப்பைக் குறைத்துக்கொண்டதுதான் காரணம். இதனால், உடல்பருமன் ஏற்படுகிறது. அதனால், ஹார்மோனில் சமச்சீரின்மை ஏற்படுகிறது.

`உடல்பருமனுக்கும் ஹார்மோன் சமச்சீரின்மைக்கும் என்ன தொடர்பு?’ என்று கேட்கலாம். நம் உடலில் உள்ள செல்களுக்கு குளூக்கோஸ் தேவை. ரத்தத்தில் உள்ள குளூக்கோஸை செல்கள் பயன்படுத்த கணையம் `இன்சுலின்’ என்கிற ஹார்மோனைச் சுரக்கிறது. உடல்பருமன் காரணமாக, இன்சுலின் செயல்திறன் குறைகிறது. இதனால், செல்களுக்கு குளூக்கோஸ் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க கணையம் இன்னும் அதிக அளவில் இன்சுலினைச் சுரக்கிறது. இப்படி, அதிகப்படியான இன்சுலின் ஹார்மோன், சினைப்பையின் செயல்பாட்டைப் பாதித்து, அங்கு ஆன்ட்ரோஜென் என்கிற ஆண் பாலின ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகிறது. இது, சினை முட்டை முதிர்ச்சியடைவதைத் தடுக்கிறது.

மரபியலும் பி.சி.ஓ.எஸ் வரக் காரணம். அம்மாவுக்கு, சகோதரிக்கு பி.சி.ஓ.எஸ் இருந்தால் மகளுக்கு, மற்ற சகோதரி களுக்கு பி.சி.ஓ.எஸ் வரலாம். இதனுடன், உடல்பருமனும் சேரும்போது, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியதுபோல ஆகிவிடும். மனஅழுத்தமும்கூட உடல்பருமனுக்கும், ஹார்மோன் மாற்றத்துக்கும் காரணம் ஆகிறது.

பி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்!

தவிர்க்க...

தீர்வு பெண்கள் கையிலேயே உள்ளது. மாத்திரை, மருந்து சிகிச்சை பெறவேண்டிய தேவையே இல்லை. இவர்கள் வாழ்க்கைமுறையில் மாற்றம் செய்தாலேபோதும், பிரச்னையில் இருந்து விடுபடலாம்:

பொதுவாக, பி.சி.ஓ.எஸ் உள்ள பெண், ஐந்து கிலோ வரை உடல் எடையைக் குறைத்தாலேபோதும், பீரியட்ஸ் ஒழுங்காக வர ஆரம்பித்து விடும்.

தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஃபிட்டான உடலைப் பெற முடியும். இதற்கு, ஜிம் வொர்க்அவுட் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. நடைப்பயிற்சிகூடப் போதும்.

பதப்படுத்தப்பட்ட, ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட, ஜங்க் ஃபுட்களைத் தவிர்க்க வேண்டும். இதற்கு பதில், ஆரோக்கியமான, நார்ச்சத்து, காம்ப் ளெக்ஸ் கார்போஹைட்ரேட் உணவு களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பீட்சா, பர்கர், வறுத்த சிக்கன், மைதா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

இரவுப் பணி பார்க்கும் பெண்களுக்கு அதிக அளவில் பி.சி.ஓ.எஸ் ஏற்படுகிறது. இவர்கள் இரவில் வீட்டுச் சாப்பாடு எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட கால இடைவெளியில், இரவுப் பணியை பகல் பணியாக மாற்றிக்கொள்வதன் மூலம், உடலின் செயல்திறன் பாதிக்கப்படுவதைக் குறைக்கலாம். அதாவது, ஒரு மாதம் இரவு, ஒரு மாதம் பகல் நேரப் பணி என்று மாற்றிக்கொள்ளலாம்.

குடும்பத்தில் பி.சி.ஓ.எஸ் வந்திருந்தால், பெண் குழந்தைக்கு வர வாய்ப்பு உள்ளது. பூப்பெய்தும் காலத்தில், டீன் ஏஜில் பருமனாக இருந்தால், சீரற்ற மாதவிலக்கு வந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதன் மூலம் பி.சி.ஓ.எஸ் பிரச்னையைத் தவிர்க்கலாம்.

- பா.பிரவீன் குமார்

வருமுன் காப்போம்!

*பி.சி.ஓ.எஸ் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள்...

*உயர் ரத்த அழுத்தம்.

*குழந்தையின்மை.

*ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு.

*சர்க்கரை நோய்.

*மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள்.

*சினைப்பை புற்றுநோய்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism