Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்
கன்சல்ட்டிங் ரூம்

அ.ச.ரசூல், சென்னை-4.

``எனக்கு வயது 50. இதய ரத்தக்குழாய் அடைப்புக்கு, கடந்த ஆண்டு அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். இப்போது ஆஸ்பிரின் மாத்திரையை, தேவைப்படும்போது சாப்பிட்டுவருகிறேன். இரவு நேரங்களில் திடீரென்று இதயம் வேகமாகத் துடிக்கிறது. கீழ்த்தாடை வலிக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு என்ன ?’’

டாக்டர் மாதவன், இதய அறுவைசிகிச்சை நிபுணர், மதுரை.

கன்சல்ட்டிங் ரூம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



``பொதுவாக ஆண்களுக்குத்தான் இதயநோய்கள் அதிகமாக ஏற்படுகின்றன. புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற தீய பழக்கங்களாலேயே இதயம் தொடர்பான நோய்கள் இளம் வயதுடையவர்களுக்குக்கூட ஏற்படுகின்றன. உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், வாழ்நாள் முழுவதும் ஆஸ்பிரின் மாத்திரையையோ அல்லது அதற்கு இணையான மாத்திரையையோ இதயநோய் நிபுணர் ஆலோசனைப்படி தினமும் உட்கொள்ளவேண்டும். திடீரென்று இரவு இதயம் வேகமாகத் துடிக்கிறது என்றால், ஆஞ்சியோகிராம் பரிசோதனையையும், தொடர்ந்து 24 மணி நேரமும் இ.சி.ஜி எடுத்துக்கொள்ளும் ஹோல்டர் மானிட்டரிங் பரிசோதனையையும் (Holter monitoring test) உடனடியாகச் செய்துகொள்ள வேண்டும். இதன் முடிவுகளைப் பொறுத்து, ‘எலெக்ட்ரோ பிஸியாலஜி’ (Electrophysiology) பரிசோதனையும் செய்துகொள்ளலாம். ரத்தக்குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டு இருந்தால், கீழ்த்தாடை வலி ஏற்படும். எனவே, தாமதிக்காமல் இதய மருத்துவரை அணுகுவது நல்லது.”

பி.கே.சிவகாமி, தர்மபுரி.

“எனக்கு வயது 42. மாஸ்டர் ஹெல்த் செக்அப் செய்தேன். அப்போது, எலும்பு அடர்த்திக் குறைவாக உள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். இதற்கு, கால்சியம் மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார். எலும்பு அடர்த்தியை அதிகரிக்க, கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா?”

டாக்டர் ஃபிரான்சிஸ் ராய், எலும்பு, மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர், திருநெல்வேலி.

கன்சல்ட்டிங் ரூம்



``எலும்பு அடர்த்திக் குறைவு, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் பாதிக்கிறது. 40 வயதுக்குப் பின்னர் ஹார்மோன்கள் சமச்சீரின்மை ஏற்படுவதால், இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதனால், எலும்புகள் அடர்த்திக் குறைந்து, எளிதில் உடையும்  நிலைக்கு உள்ளாகின்றன. மேலும், எலும்பு முறிவு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உங்களுக்கு என்ன மாதிரியான பரிசோதனை செய்து, எலும்பு அடர்த்தி குறைவாக உள்ளது என்று கண்டறிந்தார்கள் என்பது தெரியவில்லை. டெக்ஸா ஸ்கேன் பரிசோதனை மூலமாக எலும்பு அடர்த்தி குறித்த துல்லியமான முடிவுகளைப் பெற முடியும். டெக்ஸா ஸ்கேன் முடிவுகளைப் பொறுத்து, மருத்துவரின் ஆலோசனையின்படி, கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது. தினமும் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல், காலை உடற்பயிற்சி, தினமும்
20 நிமிடங்கள் சூரிய ஒளிக் குளியல், மது மற்றும் புகைப்பழக்கத்தைக் கைவிடுதல் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட முடியும்.”

கன்சல்ட்டிங் ரூம்

ஆர்.கே.மணிநாத், சேலம்.

``எனக்கு 50 வயதாகிறது. சர்க்கரை நோய்க்கு மருத்து சாப்பிட்டு வருகிறேன். கடந்த சில நாட்களாக அவ்வப்போது எச்சில் உலர்ந்து, நாக்கு உலர்ந்துவிடுகிறது. நாக்கை உலராமல் வைத்திருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது. இதனால் இருமல் ஏற்படுகிறது. பேச சிரமமாக உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு என்ன?”

டாக்டர் அஜித், சர்க்கரைநோய் நிபுணர், நாமக்கல்.

கன்சல்ட்டிங் ரூம்



``சர்க்கரை நோயாளிகளுக்கு, கணையத்தின் இன்சுலின் ஹார்மோன் சுரப்பு குறைவதால், ரத்தத்தில் குளூக்கோஸின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தில் சேர்ந்துள்ள அளவுக்கு அதிகமான குளூக்கோஸை சிறுநீரகம் வெளியேற்றுகிறது. இதனால்தான், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கின்றனர். நீர் வெளியேறுவதால், உடலில் ஏற்பட்ட நீரிழப்பைப் போக்க, தாகம் ஏற்படுகிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம். உங்கள் மருத்துவர் ஆலோசனையின்படி, மாத்திரை, இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ளலாம். மேலும், சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, தவறாமல் மாத்திரை எடுத்துக்கொள்வது, கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது, காலை நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் அடிக்கடி தாகம் எடுக்கும் உணர்வு குறையும். இருமல் தொந்தரவுகளும் குறையும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரின் ஆலோசனை மற்றும் ரத்தச் சர்க்கரை அளவு பரிசோதனை உள்ளிட்டவற்றை செய்து கொள்ளவேண்டியது அவசியம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism