Published:Updated:

குளிர்கால நோய்களுக்கு நோ என்ட்ரி!

குளிர்கால நோய்களுக்கு நோ என்ட்ரி!
பிரீமியம் ஸ்டோரி
குளிர்கால நோய்களுக்கு நோ என்ட்ரி!

குளிர்கால நோய்களுக்கு நோ என்ட்ரி!

குளிர்கால நோய்களுக்கு நோ என்ட்ரி!

குளிர்கால நோய்களுக்கு நோ என்ட்ரி!

Published:Updated:
குளிர்கால நோய்களுக்கு நோ என்ட்ரி!
பிரீமியம் ஸ்டோரி
குளிர்கால நோய்களுக்கு நோ என்ட்ரி!
குளிர்கால நோய்களுக்கு நோ என்ட்ரி!

ரோக்கியத்தை அசைத்துப் பார்க்கும் காலம், குளிர்காலம். இந்தக் காலத்தில்தான் சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்கள் எளிதில் பரவும். சின்னச்சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதும்... குளிரோடு சேர்த்து நோய்களுக்கும் போடலாம் நோ என்ட்ரி. அப்படிப்பட்ட சில முக்கியமான நோய்கள், தடுக்கும் வழிமுறைகள் இங்கே... 

சரும வறட்சி

குளிர்காலத்தில் பனி அதிகம் இருப்பதால் தோல் வறண்டுவிடும்; சுருக்கம் ஏற்படும்; தோல் காய்ந்து, உதிரும் நிலைகூட சிலருக்கு வரலாம். உதடு, தோல்களில் வெடிப்பு, தோலின் நிறம் வெளிறிக் காணப்படுதல் மற்றும் புண்கள் வரும்.

தீர்வு: இவற்றைச் சரிசெய்ய லிக்விட் பாரஃபின், கோல்டு க்ரீம்களை தடவலாம். அதைவிட எளிய முறை, தேங்காய் எண்ணெயை கை, கால், முகத்தில் தேய்த்துக்கொள்வது.

மூட்டுவலி


மூட்டுவலிக்கு உடல் எடை அதிகரிப்பது, கால்சியம் குறைபாடு, மெனோபாஸ் எனப் பல காரணங்கள் உள்ளன. ஆனால், குளிர்காலத்தில் மூட்டு ஜவ்வில் அலர்ஜி ஏற்பட்டு அழுத்தம் கொடுக்கும்போது வலி ஏற்படும். உடலில் வீக்கம், இடுப்புவலி தீவிரமாகும். முதுகுத்தண்டுவட அழற்சி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

தீர்வு:
தினசரி சில உடற்பயிற்சிகள் செய்துகூட வலியைக் குறைக்கலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகள் சாப்பிடலாம்.

குளிர்கால நோய்களுக்கு நோ என்ட்ரி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஜீரணக் கோளாறு

குளிர்காலத்தில் அதிகம் பசி எடுக்காது. சாப்பிட்ட உணவு எளிதில் செரிக்காமல் வயிற்றுக்கோளாறு மற்றும் அஜீரணத்தை உருவாக்கலாம். வயிறு மந்தநிலையில் இருக்கும். வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

தீர்வு: இதைத் தவிர்க்க, உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்கவேண்டியது அவசியம். அதற்கு நீண்ட தூர நடைப்பயிற்சி செய்யலாம். கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், கீரை வகைகளை அளவாக சாப்பிடலாம். ஆரஞ்சு, அன்னாசி, தக்காளி, முட்டைக்கோஸ், கேரட் உள்ளிட்ட உணவுகளைச் சேர்த்துக்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அஜீரணக்கோளாறைத் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், மருத்துவ சிகிச்சையோடு ரத்தப் பரிசோதனையும் செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

ஆஸ்துமா மற்றும் சுவாசக்கோளாறு


ஆஸ்துமா மற்றும் வீஸிங் பிரச்னை உள்ளவர்களுக்கு, நெஞ்சுச் சளி ஏற்படும். இடைவிடாத இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும். அதனால் சுவாசிப்பதே சிரமமாக இருக்கும். முதியவர்களுக்கு மூச்சுக்குழலில் சுருக்கம் ஏற்படும். மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதனால், பக்கவாதம் ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது.  

தீர்வு:
இந்தச் சமயத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று ‘இன்ஹேலர்’ பயன்படுத்துவது நல்லது. காதுகளில் பஞ்சு வைப்பது, மப்ளர், மங்கி கேப் அணிந்துகொள்ளலாம். காலை, மாலை வேளைகளில் வெளியில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.

வைரஸ் காய்ச்சல்

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சலோடு மூச்சிரைப்பும் (Wheezing) வரும். வைரஸ் கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவ வாய்ப்புகள் உள்ளன.  தொண்டைவலி, காய்ச்சல், சோர்வு, குமட்டல், உடல்வலி, அரிப்பு, தலைவலி, இருமல், தொண்டைப்புண், அடிவயிற்றில் வலி போன்றவை வைரஸ் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள். சில நேரங்களில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு, மேற்கூறிய அறிகுறிகள் தென்படாமலும் இருக்கலாம். அதற்குப் பதிலாக மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் தொடர்ந்து ஐந்து நாட்கள் அதிகப்படியான காய்ச்சல் இருக்கக்கூடும்.

தீர்வு: எளிதில் செரிமானமாகும் வீட்டு உணவுகளையே சாப்பிட வேண்டும். தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்துப் பருக வேண்டும். ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மருத்துவச் சிகிச்சையுடன் ஓய்வு எடுத்தால் காய்ச்சல் சரியாகிவிடும். வெளியில் செல்லும்போது, மாஸ்க் அணியலாம். தும்மல், இருமல் மூலமாக வைரஸ் பரவும் என்பதால், கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவது நல்லது. 

- செ.சங்கீதா

குளிர்கால நோய்களிலிருந்து தப்பிக்க...

அவ்வப்போது கைகழுவ வேண்டும்.மற்றவர்களைத் தொட்டுப் பேசுவதைத் தவிர்க்கவும்.

துளசி டீ, புதினா டீ, சுக்கு மல்லி டீ ஆகியவை பருகலாம். மிளகு, இஞ்சி, பூண்டு, சீரகம், வைட்டமின் சி சத்துள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

சளி மற்றும் வறட்டு இருமலைக் கட்டுப்படுத்த தினமும் ஒரு டீஸ்பூன் தேன் குடிக்கலாம்.

பனிக்காலம் தொடங்கியதும் டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது.

காய்ச்சிய குடிநீர் நல்லது. ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

காட்டன் உடைகளைத் தவிர்த்து, உல்லன் ஸ்வெட்டர் பயன் படுத்தலாம்.

ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குளிர்பானங்கள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளைத் தவிர்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism