Published:Updated:

ஈஸி ஸ்மூத்தி!

ஈஸி ஸ்மூத்தி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஈஸி ஸ்மூத்தி!

ஸ்டிராபெர்ரி - வாழை ஸ்மூத்தி

ஈஸி ஸ்மூத்தி!

தேவையானவை:

ஸ்டிராபெர்ரி 250 கிராம்

தோல் நீக்கப்பட்ட நடுத்தரமாக கனிந்த வாழை - 1

கொழுப்பு நீக்கப்பட்ட பால் - 300 மி.லி

தேன் - 15 மி.லி (ஒரு டீஸ்பூன்)

செய்முறை:


வாழைப்பழத்தை துண்டுதுண்டுகளாக நறுக்கி, ஸ்டிராபெர்ரி, பால், தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். இதை வடிகட்டாமல் அப்படியே அருந்தலாம்.

பலன்கள்:

இது 188 முதல் 210 கலோரிகள் கொண்டது.

இதை ஒரு ஆரோக்கியமான நொருக்குத்தீனியாக எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் சி நிறைந்தது. கிட்டத்தட்ட ஒருநாள் தேவையில் 70 சதவிகிதத்தை இது அளித்துவிடும்.

பாலில் கால்சியம் நிறைவாக உள்ளது.

பெண்கள் இந்த ஸ்மூத்தியை எடுத்துக்கொள்வது நல்லது.

ஃபோலேட் நிறைந்தது என்பதால் கர்ப்பிணிகள் அருந்தலாம்.