Published:Updated:

ஒரே பரிசோதனையில் ஆரோக்கியம் அறியலாம்!

ஒரே பரிசோதனையில் ஆரோக்கியம் அறியலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரே பரிசோதனையில் ஆரோக்கியம் அறியலாம்!

ஒரே பரிசோதனையில் ஆரோக்கியம் அறியலாம்!

ஒரே பரிசோதனையில் ஆரோக்கியம் அறியலாம்!

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் டாக்டர் விகடனும், ஈத்தாமொழி சிவா மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாமை நடத்தின. முகாமில் பங்கேற்ற அனைவருக்கும், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, பி.எம்.ஐ பரிசோதனைகள் செய்யப்பட்டன. தேவைப்படுபவர்களுக்கு இ.சி.ஜி. எக்கோ, ஆட்டோ அனலைசர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பொது நல மருத்துவர்களைப் பார்த்து, பிரச்னை ஏதேனும் கண்டறியப்பட்டால் அவர்களை இதயம், பொது, மகளிர் மற்றும் மகப்பேறு, வயிறு, இரைப்பை உள்ளிட்ட சிறப்பு நிபுணர்களிடம் அனுப்பி ஆலோசனை பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முகாமில் கலந்துகொண்ட விமலா, முகாம் குறித்து கூறுகையில், “எனக்கு தைராய்டு பிரச்னை இருக்கு. அதற்காக திருவனந்தபுரத்தில் மருத்துவம் பார்த்து வந்தேன். இப்போ சிகிச்சை ஏதும் எடுத்துக்கல. இங்கே முகாம் நடப்பதைக் கேள்விப்பட்டு வந்தேன். டாக்டர்கள் சில பரிசோதனை செஞ்சாங்க. தைராய்டு அளவு அதிகமாகியிருக்குன்னு சொன்னாங்க. மீண்டும் பிரச்னை வராமல் இருக்க மாத்திரை எழுதி கொடுத்திருக்காங்க. ‘தைராய்டு பிரச்னை என்பது வாழ்நாள் முழுக்க இருக்கக் கூடியது. மாத்திரை எடுக்கிறதை நிப்பாட்டக் கூடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில பரிசோதனை செய்து, மாத்திரை அளவை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று ஆலோசனை சொன்னாங்க. ரொம்ப திருப்தியா இருந்திச்சு” என்றார்.

ஒரே பரிசோதனையில் ஆரோக்கியம் அறியலாம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாகர்கோவிலில் இருந்து வந்த சுபா பேசும் போது, “எனக்கு வயது 50 ஆகுது. பி.பி, சுகர் டெஸ்ட்டுல கொஞ்சம் அதிகமாக காமிச்சுது. டாக்டர் என்கிட்ட, ‘உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கான்னு’ கேட்டபோது, ‘கொலஸ்ட்ரால் அளவு அதிகமா இருந்துச்சு, அதுக்கப்புறம் அதை டெஸ்ட் செய்யலை’னு சொன்னேன். ‘வெறும் வயிற்றில் இருக்கீங்களா?’ன்னு கேட்டாங்க. ‘காலையிலயே வந்திட்டதால எதையும் சாப்பிடலை’ன்னு சொன்னேன். உடனே, ஆட்டோ அனலைசர் டெஸ்ட் எடுத்துட்டு வரச் சொன்னங்க. இந்த டெஸ்ட் எடுக்க நான் எங்கே போறது என்று கேட்டபோது, இங்யே இருக்குன்னு அனுப்பினாங்க. அதுல என்னுடைய கொலஸ்ட்ரால் அளவு, கிட்னி, லிவர் ஃபங்ஷன் டெஸ்டுன்னு கிட்டத்தட்ட 10-15 டெஸ்ட் ரிப்போர்ட்டை அரை மணி நேரத்துல கொடுத்துட்டாங்க. முகாம் பயனுள்ளதாக இருந்தது” என்றார்.

- த.ராம், படங்கள்: ரா.ராம்குமார்