Published:Updated:

மறதி மறைந்து விடும் ... பவர் தரும் 10 உணவுகள்!

மறதி மறைந்து விடும் ...  பவர் தரும் 10 உணவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மறதி மறைந்து விடும் ... பவர் தரும் 10 உணவுகள்!

மறதி மறைந்து விடும் ... பவர் தரும் 10 உணவுகள்!

மறதி மறைந்து விடும் ...  பவர் தரும் 10 உணவுகள்!

னர்ஜியை, அதாவது சக்தியை விழுங்கிவிட்டு `பசி... பசி...’ எனக் கூச்சல்போடும் உறுப்பு, மூளை. உடல் எடையில் இரண்டு சதவிகிதம் இருக்கும் மூளைக்கு, மொத்த ஆக்சிஜன் மற்றும் கலோரியில் 20 சதவிகிதம் தேவைப்படுகிறது. உடலின் கமாண்டருக்கு 20 சதவிகிதம் தேவைதானே... அந்த கமாண்டரை பத்திரமாகப் பார்த்துக்கொண்டால், ஆரோக்கியம் நம் வசம். மூளைக்கான எனர்ஜியை எப்படிப் பெறுவது? அதை உணவுகள் மூலமாகவே பெற முடியும்.

வைட்டமின் பி

வைட்டமின் பி, மூளைக்கு மிகவும் நல்லது. கருவில் இருக்கும்போதே, ஆரோக்கியமான மூளை மற்றும் தண்டுவடம் உருவாக பி9 (ஃபோலேட்) தேவை. வயதாவதன் காரணமாக மூளையில் ஏற்படும் சுருக்கங்கள் வராமல் தடுக்கவும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் உதவுகின்றன. கடல் உணவுகள், ஈரல், முட்டை, சீஸ், நட்ஸ், தேங்காய், முழு தானியங்கள், கீரைகள், சிறுதானியங்கள், பட்டாணி, காளான், புரோகோலி, பச்சை, சிவப்பு, ஆரஞ்சு நிறக் காய்கறிகளில் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

ஆன்டிஆக்ஸிடன்ட் உணவுகள்

அனைத்து அடர்பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற உணவுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. இவற்றைச் சாப்பிட்டால், நினைவுத்திறன் அதிகரிக்கும். மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மூளையின் செல்களில் நடக்கும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கும். வயதானால் ஏற்படும் மூளையின் பகுதியில் உள்ள நரம்பு மண்டலப் பிரச்னை வருவதைத் தடுக்கும். எழுதும் திறன், யோசித்துக் கட்டமைக்கும் திறன், படைபாற்றல் போன்ற பல்வேறு திறன்கள் மேம்படும்.

நீலம், ஊதா நிற உணவுகள்

நாவல்பழம், புளு பெர்ரி, ஊதா நிற முட்டைக்கோஸ், கத்திரிக்காய் போன்ற நீல நிற உணவுகளில் பைட்டோகெமிக்கல்ஸ் இருப்பதால், மூளைக்கு நல்லது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவது மட்டுமல்லாமல் நினைவுத்திறன், கூர்ந்து கவனித்தல் ஆகிய திறன்களையும் மேம்படுத்தும்.

10 கிளாஸ் தண்ணீர்

குறைந்தது பத்து டம்ளர் தண்ணீரை தினமும் குடித்துவந்தால், உடலில் நீர்வறட்சி இருக்காது. மறதிக்கான வாய்ப்பைத் தடுக்கும்.

மறதி மறைந்து விடும் ...  பவர் தரும் 10 உணவுகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மூளைக்கு குளூக்கோஸ்

குளூக்கோஸின் அளவு குறைந்தால், மூளை குழப்பமான நிலைக்குச் சென்றுவிடும். இதைத் தவிர்க்க, முழு தானியங்கள், ஃபிரெஷ் காய்கறி மற்றும் பழங்களைச் சாப்பிடுங்கள்.

வால்நட், பாதாம்

மூளையின் தோற்றமும் வால்நட்டின் தோற்றமும் ஒரே மாதிரி இருக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த வால்நட் மூளைக்கு மிகவும் நல்லது. புரிதல் திறன், அறிவாற்றல், புலனுணர்வு ஆகிய திறன்கள் மேம்பட உதவும். காலை உணவுடன் பாதாமைச் சேர்த்து சாப்பிடுவதால், மூளையின் ஆற்றல் அதிகரிக்கும்.

படிக்கும் பாடம் மறக்காமல் இருக்க...

மீன், முட்டை ஆகியவற்றில் ஒமேகா 3 நிறைந்துள்ளது. அதிக எண்ணெய் தன்மை கொண்ட மீன்களான மத்தி, ஷீலா, சுறா, வஞ்சிரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மாணவர்களுக்கு ‘தினம் ஒரு முட்டை’ மற்றும் ஸ்நாக்ஸ் பாக்ஸில் பேரீச்சம் பழம், நட்ஸ்களை வைத்துக்கொடுங்கள். படித்த பாடம் மறந்துபோகிறது என்று சொல்லும் புகார்கள் தவிர்க்கப்படும்.

விதைகளை உண்ணப் பழகுங்கள்!

ஆளிவிதையை வெறுமனே சாப்பிடலாம். தோசை, இட்லிப் பொடியில் சேர்க்கலாம். சாலட், ஜூஸ் என எதனுடனும் சாப்பிடலாம். இதுபோல பரங்கிக்காய் விதை, வெள்ளரி விதை, பூசணி விதை, சூரியகாந்தி விதை, தர்பூசணி விதை, சுரைக்காய் விதை போன்ற விதைகளை வறுத்து லேசான காரம் சேர்த்து நொறுக்குத்தீனியாகச் சுவைக்கலாம்.

2 கப் கிரீன் டீ

இதில் பாலிஃபீனால்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பதால், மூளைச் செல்கள் சேதமாவது தடுக்கப்படும். தொடர்ந்து கிரீன் டீ பருகினாலே, நினைவுத்திறன் அதிகரிக்கும். கவனச்சிதறல் குறையும். வயதானால் வரும் மூளை தொடர்பான பிரச்னைகளை தாமதப்படுத்தும்.

முடிந்த போது திராட்சை ஜூஸ்

திராட்சையில் உள்ள ரெஸ்வெரெட்ரால் (Resveratrol), ஃபிளேவனாய்டு போன்ற சத்துக்கள் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்தும். மறதி நோய்கள் தடுக்க  திராட்சை சாறு அல்லது தினமும் 10 உலர்ந்த திராட்சை சாப்பிடலாம்.

- ப்ரீத்தி