Published:Updated:

மனம் அமைதியாகட்டும்!

மனம் அமைதியாகட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் அமைதியாகட்டும்!

மனம் அமைதியாகட்டும்!

மனம் அமைதியாகட்டும்!

றுக்கமான சூழ்நிலை, என்ன செய்வதென்றே தெரியாத ஒரு நிலைமை, ஒரு பக்கம் கத்த வேண்டும் என்றுகூடத் தோன்றலாம். இன்னொரு பக்கம் மனஅழுத்தத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது அல்லது சரிசெய்வது என திணறிக்கொண்டிருப்போம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும்? சில டிப்ஸ்...

உன்னைக் கவனி!

முதலில் உங்கள் மனதில், உடலில் தோன்றும் மாற்றங்களை, உணர்வுகளை கண்காணிக்கத் தொடங்குங்கள். அவற்றைக் கவனியுங்கள். கவனித்தலே அமைதிக்கான முதல்படி.

மூச்சை கவுன்ட் செய்யுங்கள்!

``1-2-3-4-5…9-10’’ எனத் தொடர்ந்து எண்களை எண்ணியபடி மூச்சை ஆழமாக இழுத்துவிட வேண்டும். அப்போது கவனம் உங்களின் மூச்சின் மீது இருக்கட்டும். 10 என்ற எண்ணிக்கையை அடைந்த பின்னரும் டென்ஷனாகவே இருந்தால், மீண்டும் 10 வரை எண்ணி, மெதுவாக, ஆழமாக மூச்சைவிட வேண்டும். இப்போது மனம் சிறிது லேசாகியிருக்கும்.

நல்ல நினைவுகளை நினைத்தல்

அதீத மன அழுத்தம் காரணமாக, கவிழ்ந்து படுத்து வருத்தப்படாமல், நண்பருடனோ பிடித்தவருடனோ எடுத்த புகைப்படங்களைப் பாருங்கள். குழந்தைகள் அருகில் இருந்தால், தூக்கிக் கொஞ்சலாம். அல்லது செல்லப் பிராணிகளோடு விளையாடலாம்.

உங்களை நீங்களே தள்ளி நின்று பாருங்கள்!

மோசமான சூழ்நிலையில் இருக்கும்போது, சட்டென்று எழுந்து சென்று, முகத்தில் தண்ணீரை வேகமாக அடித்து முகம் கழுவினால், இதயத் துடிப்பு கொஞ்சம் சீராகும். கொஞ்சம் அமைதியான சூழல் இருப்பதுபோலத் தோன்றும். அந்த இடத்தில் இருந்து விலகி நடந்துசெல்லுங்கள். ஒதுக்குப்புறமான, தனியான ஓர் இடத்தில் நின்று, நீங்கள் பிரச்னையின்போது நடந்துகொண்ட விதத்தை வேறொரு ஆள்போல விலகி நின்று பாருங்கள்.

மனம் அமைதியாகட்டும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிராக்டிகலாக யோசி!

இதே சூழல் இன்னொருவருக்கு இருந்தால், நீங்கள் எப்படியான தீர்வை அவருக்கு சொல்வீர்கள் என நினைத்துப் பார்த்து, அதையே உங்களுக்குத் தகுந்ததுபோல மாற்றி, பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்.

டயட்டை கவனி!


தினமும் என்ன சாப்பிடுகிறோம் என கவனியுங்கள். தவறான உணவு பழக்கம்கூட மூளை நரம்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தலாம். `என்னை ரிலாக்ஸாக்கப் போறேன்’ என்று சிகரெட் பிடிப்பது ஒரு முட்டாள்தனமான காரியம். அது உங்கள் உடல்நிலையை மேலும் பாதிக்கவே செய்யும். அதற்குப் பதிலாக `சில்லுன்னு ஒரு ஃபிரெஷ் ஜூஸ்’ குடித்துப் பாருங்கள்.

அவ்வப்போது கிளம்பிவிடுங்கள்

புதுப் புது இடங்கள், புதிய மனிதர்களை அடையாளம் காட்டும்; புதிய, நல்ல அனுபவங்களைத் தரும். முடிந்த அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் சூழலுக்குச் சென்றால், அங்குள்ள பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்கள் மனதை ரம்மியமாக்கும்.

மன்னித்து... மறந்து... புதுப்பிக்கலாம்!

மன உளைச்சலைத் தரும் விஷயங்களை மறந்து, உங்களைக் கடுப்பாக்கும் மனிதர்களை மன்னித்து உங்களை நீங்களே புதுப்பித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே தன்மையானவராக மாறிவிடுதல் நல்லது.

உங்களுக்காக ஒரு பயிற்சி

சைக்கிள் ஓட்டத் தெரிந்தால், காலை ஆறு மணிக்கு நான்கு ரவுண்டு சுற்றி வரலாம். இந்த அனுபவம் பிடித்துப் போனால், மீண்டும் மீண்டும் அதைச் செய்ய மனம் தூண்டும். ஒரு மாதம் நீச்சல் குளம் சென்று நீந்திவிட்டு வரலாம்.

உங்களை நீங்களே வாழ்த்தலாம்...

இன்று சூப்பராக காபி போட்டால், `அடடே... காபி சூப்பர், கிரேட்!’ என உங்களை நீங்களே வாழ்த்துங்கள். `இன்று நமக்குப் பிடித்தமான விஷயங்கள் நடக்கட்டும். இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்’ என வாழ்த்துவது நல்லது. `நமக்கான ஒரு அதிர்ஷ்டம் இன்று வரப்போகிறது’ என பாசிட்டிவ் எண்ணங்களை நிரப்பி, உங்கள் நாட்களை முழுமையாக்கலாம்.

- ப்ரீத்தி