புற்றுநோய் என்றாலே இனம்புரியாத பயம் அனைவருக்கும் உள்ளது. உண்மையில், புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால், அதில் இருந்து முழுமையாகக் குணமாகலாம்; ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்பலாம். புற்றுநோயில் இருந்து மீண்டவர்களிடம் ஆரோக்கியமான உடல்நிலைக்குத் திரும்பவேண்டிய ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால், அவர்களில் பலருக்கு அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் இருக்காது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புதிய வாழ்வுக்குத் திரும்பும்போது கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

உடற்பயிற்சி

தொடர்ச்சியான உடற்பயிற்சி எப்போதுமே ஆரோக்கியத்தின் நண்பன். தினசரி அரை மணி நேரம் என வாரத்துக்கு ஐந்து நாட்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத் தரம் மிக வேகமாக முன்னேறுகிறது. தொடக்கத்திலேயே கடினமான உடற்பயிற்சிகளைத் திட்டமிட வேண்டாம். மாடிப்படி ஏறுவது, மாலை நேரங்களில் சிறிது தூரம் காலாற நடந்துசெல்வது என உடலைப் பழக்குங்கள். பிறகு, மருத்துவரின் பரிந்துரையோடு ஸ்ட்ரெச்சிங், உடற்பயிற்சி எனச் செய்யலாம். எந்தப் பயிற்சியையும் சுயமாகச் செய்ய வேண்டாம். பிசியோதெரப்பிஸ்ட் மற்றும் உடற்பயிற்சியாளர் வழிகாட்டுதலின் கீழ் செய்ய வேண்டும். உடற்பயிற்சியைச் சரியான முறையில், முழுமையாகச் செய்கிறோம் என்று பயிற்சியாளர் சான்றளித்த பிறகு தனியாகச் செய்யலாம்.

உடற்பயிற்சியில் ஈடுபட்ட சில நாட்களிலேயே கீழ்க்கண்ட சில அனுபவங்கள் ஏற்படக்கூடும்:

* உடல் வலுவடையும்; எதையும் தாங்கிக்கொள்வதற்கான ஆற்றல் மேம்படும்.

* மனஅழுத்தம் குறையும்.

* உடல், மனச்சோர்வு குறையும்.

* நல்ல மனநிலை மேம்படும்.

* வலி குறையும்; தூக்கம் மேம்படும்.

உணவுப் பழக்கம்

சமச்சீர் உணவை உண்ணுங்கள். தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் முழுத் தானியங்கள் எனப் பலதரப்பட்ட உணவு வகைகள் இடம்பெறட்டும். இதனால், எல்லா சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடலாம். நிறைவுற்ற கொழுப்புகள், ட்ரான்ஸ்ஃபேட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மீன், முட்டை, நட்ஸ், விதைகள், பருப்பு வகைகள், உலர் பழங்கள், காய்கறிகள், கீரைகள், தோல் நீக்கப்பட்ட இறைச்சி எனப் புரதமும் அத்தியாவசிய கொழுப்பு அமிலமும் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

கார்போஹைட்ரேட் நிறைந்த முழுத் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகளைச் சாப்பிடலாம்.

சில உணவுகள் புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் இயல்புடையவை. மஞ்சள், இஞ்சி, பூண்டு, வெங்காயம், பட்டை, சோம்பு, கிராம்பு, கறிவேப்பிலை, புரொக்கோலி, கிரீன் டீ, அவகேடோ, மிளகு, சீரகம், வெந்தயம் போன்ற பல்வேறு உணவுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை இயல்பாக்குபவை. இயல்பற்ற செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, செல்களின் முதிர்ச்சியைச் சீராக்கி, ஃப்ரீ ரேடிக்கல்ஸைத் தடுப்பவை. எனவே, இவற்றை உணவில் முறையாகச் சேர்க்க வேண்டும்.

சப்ளிமென்ட்கள் பயன்படுத்தும்போது மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், குறிப்பிட்ட ஓர் ஊட்டச்சத்து திடீரென அதிகரிப்பது சில சமயங்களில் வேண்டாத விளைவுகளை உருவாக்கக்கூடும்.

செயற்கை மணமூட்டிகள், சுவையூட்டிகள், பதப் படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அறுவைசிகிச்சைக்குப் பின் சிலருக்கு உடலில் உள்ள தாதுஉப்புக்களின் அளவில் மாற்றம் ஏற்படக்கூடும். எந்தத் தாதுஉப்பு குறைந்திருக்கிறது எனப் பரிசோதித்து அதற்கு ஏற்ப, காய்கறிகள், கீரைகள், பழங்கள் என இயற்கை முறையில் அவற்றைப் பெற முயற்சிக்க வேண்டும்.

உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்துப் புற்றுநோயின் பக்கவிளைவுகளாக ஏற்படும் வாந்தி, மயக்கம், வலி போன்றவற்றுக்கான உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான எடைப் பராமரிப்பு

புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு எடையில் மாறுபாடுகள் ஏற்படக்கூடும். உங்கள் உயரத்துக்கு ஏற்ற சரியான எடை எதுவோ, அதைப் பராமரிக்கவேண்டியது அவசியம்.

எடை குறைவாக உள்ளவர்கள் ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மூலமாக எடையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். எடையைக் குறைக்கவேண்டியவர்கள், படிப்படியாக எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்குங்கள். அதிகபட்சமாக வாரம் ஒரு கிலோ வரை எடை குறைக்கத் திட்டமிடலாம்.

புகையிலை, மதுவைத் தொடாதீர்கள்!

புகையிலை, புற்றுநோயின் தலைவாசல். எனவே, எந்தக் காரணத்தை முன்னிட்டும் புகையிலையைத் தொடக்கூடாது. இதனால் மீண்டும் ஒரு புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். மதுப்பழக்கம், உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பாதிப்பதால் அதையும் கைவிடவேண்டியது மிகவும் அவசியம்.

வாழ்வியல் மாற்றங்கள்

புற்றுநோயை எதிர்கொள்ள நேர்மறையான சிந்தனைகள் மிகவும் அவசியம். எனவே, தன்னம்பிக்கை தரும் விஷயங்களை, மனிதர்களைத் தேடிக் கண்டடையுங்கள்.

தினசரி எட்டு மணி நேரம் தூக்கம் என்பதைக் கட்டாயமாக்குங்கள். ஆழமான தூக்கம், உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு மிகவும் அவசியம்.

புற்றுநோயின் பக்கவிளைவுகளைக் கட்டுப்படுத்து வதற்காகக் கொடுக்கப்படும் மாத்திரைகளை, மருத்துவர் பரிந்துரைப்படி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கதிரியக்கச் சிகிச்சை அளிக்கும் நாட்களில், உடலில் கதிர் இயக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், முடிந்தவரை தனியறையைப் பயன்படுத்துங்கள். எச்சில், வியர்வை, சிறுநீர் வழியாக உடலில் உள்ள கதிரியக்கம் வெளியேறும் என்பதால், தனியான தட்டு, டம்ளர் பயன் படுத்துவது, கழிப்பறையை இரண்டு முறை ஃபிளஷ் செய்வது எனச் சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டும்.

கதிரியக்கச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், 15 நாட்களுக்குக் குழந்தைகள், கர்ப்பிணிகள் அருகில் செல்ல வேண்டாம். ஏனெனில், அவர்கள் மேல் இருந்து வெளிப்படும் கதிரியக்கத்தால் குழந்தைக்கோ சிசுவுக்கோ பாதிப்பு ஏற்படலாம்.

சிலவகைப் புற்றுநோய் சிகிச்சைகள் முடிந்த பின்னர், சில நாட்களுக்குச் சிலவகை உணவுகளைத் தொடக் கூடாது. எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி அந்த உணவுகளைக் குறிப்பிட்ட நாட்களுக்குத் தவிர்த்திடுங்கள்.

உங்களின் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, தாதுஉப்புக்களின் அளவு போன்றவற்றை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

வீட்டில் உள்ளவர்களுடன் மனம்விட்டுப் பேசுங்கள். அவர்கள் மனம் கஷ்டப்படும் என எதையும் மூடி மறைக்காதீர்கள். உங்கள் பிரச்னை எதுவென வீட்டில் உள்ளவர்களிடமும் மருத்துவரிடமும் மனம்விட்டுப் பேசி, தேவையான ஆலோசனை பெறுங்கள். உதவிகள் கேட்டுப் பெறத் தயங்காதீர்கள்.

- இளங்கோ கிருஷ்ணன்

கேர்டேக்கர் கவனிக்க!

* புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்க வேண்டாம். அன்பான கவனிப்பும் பராமரிப்புமே அவர்களை முழுமையாகக் குணப்படுத்தும். எனவே, அவர்களுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்.

* புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளைத் தவிர்க்க அல்லது குறைக்க, பரிந்துரைக்கப்பட்ட மாத்திரை, மருந்துகளைத் தவறாமல் சாப்பிடு கிறார்களா எனக் கண்காணிக்க வேண்டும்.

* கீமோ, ரேடியோ சிகிச்சை முடிந்து வந்த நாட்களில் சிலர் மிகுந்த சோர்வு, எரிச்சல், கோபத்துடன் காணப்படுவார்கள். அவர்களிடம் அன்பாகப் பேசி, மனம் கோணாமல் நடக்க வேண்டும்.

* கதிரியக்கச் சிகிச்சை செய்துகொண்ட நாட்களில்... தனிமையில் இருப்பது குறித்து அவர்களுக்குப் பக்குவமாகச் சொல்லிப் புரியவைத்திடுங்கள். அவர்கள் மனதளவில் தனிமையாக இல்லாதிருப்பது அவசியம்.

* அவர்களின் உடல்நிலையைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அவசியமான நேரத்தில் அவர்களுக்குத் தேவையான முதலுதவி, பணிவிடைகள் செய்யத் தயங்க வேண்டாம்.