உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கவும், அளவுக்கதிகமான நீரை வெளியேற்றவும் இயற்கை செய்திருக்கும் ஏற்பாடுதான் வியர்வை. அனைவருக்குமே வியர்க்கும் என்றாலும், சிலர் உடலில் எப்போதுமே அளவுக்கு அதிகமாக வியர்வைத் துர்நாற்றம் இருக்கும். இவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது பக்கத்தில் இருப்பவர்கள் துர்நாற்றத்தால் ஒதுங்கி நிற்பார்கள். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல், பெருந்துன்பத்துக்கு ஆளாவார்கள். இதனால் சமூகத்தில் இருந்து தங்களை அனைவரும் ஒதுக்குவதாக நினைத்து இவர்கள், வேதனைப் படுவார்கள். இந்தத் துர்நாற்றத்தைப்போக்க, சந்தையில் பல பவுடர்கள், டியோடரன்ட்டுகள் பெருகிவிட்டன. துர்நாற்றத்தைப்போக்க, இவற்றைப் பயன் படுத்தினால், நாளடைவில் சரும எரிச்சல், ஒவ்வாமை ஏற்படுகிறது.

வியர்வைத் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது, அதனைப் போக்க வழிகள் என்னென்ன?

வியர்வை நல்லது!

சூரிய ஒளியால் ஏற்படும் உடல் உஷ்ணத்தைச் சமன்படுத்த, சருமத்துக்கு அடியில் உள்ள வியர்வைச் சுரப்பிகளால் உடல்நீர் வியர்வையாக வெளியேற்றப்படுகிறது. நாம் வேகமாக ஓடும்போதும் உடல் உழைப்பில் ஈடுபடும்போதும் உடலில் வெப்பம் உருவாகிறது. அதைக் கட்டுப் படுத்த வியர்வை சுரந்து, நமது உடலைக் குளிர்ச்சி அடையச் செய்கிறது.

வியர்வையில் துர்நாற்றம் ஏன்?

வியர்வைக்கு இயற்கையாக மணம் கிடையாது. அதிகமாகக் காபி, டீ உள்ளிட்ட கஃபைன் பானங் கள் மற்றும் மதுஅருந்துவதால் உடலில் அமிலத்தன்மை அதிகரித்து, வியர்வைத் துர்நாற்றம் ஏற்படும்.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டுவந்தால், அவற்றில் உள்ள நச்சுத்தன்மை காரணமாக உடலில் அமிலத்தன்மை அதிகரித்து வியர்வைத் துர்நாற்றம் ஏற்படும்.

நமது சருமத்தின்மேல் நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியா இரண்டுமே இருக்கின்றன. நல்ல பாக்டீரியா தூசு, மாசு, புகை ஆகியவற்றால் ஏற்படும் ஒவ்வாமையிலிருந்து நம்மைக் காக்கிறது. அக்குள் மற்றும் மறைவு பாகங்களில் வசிக்கும் கெட்ட பாக்டீரியாத் தொற்றால் அதிகம் பேருக்கு வியர்வைத் துர்நாற்றம் ஏற்படும்.

வியர்வையில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பது, ப்ரொப்பியானி பாக்டீரியா (Propioni bacteria). பருவ வயதில் இது அதிகமாக வளர்ச்சியடையும். அக்குள், பிறப்புறுப்பு இடுக்குகளில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் வியர்வையை வெளியேற்றும் குழாயில் வாழும். இதனால், நேரடியாகத் துர்நாற்றம் ஏற்படாது. நமது உடலில் உள்ள அமினோஅமிலங்களை இந்த பாக்டீரியா சிதைத்து, ப்ரொப்பியானி அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் வியர்வையோடு கலப்பதால், வியர்வையில் துர்நாற்றம் ஏற்படுகிறது.

பல நாட்கள் துவைக்காத சாக்ஸைப் பயன் படுத்தினால் ஷூவைக் கழற்றும்போது ஏற்படும் துர்நாற்றம், பொடுகால் தலையில் ஏற்படும் துர்நாற்றம் ஆகியவை பூஞ்சைத்தொற்றால் ஏற்படுபவை.

சிகிச்சைகள்

உடல் துர்நாற்றத்தைப் போக்க, இயற்கை ஆர்கானிக் பெர்ஃபியூம்கள் மற்றும் வியர்வைச் சுரப்பிகளை அடைக்காத, ஒவ்வாமை ஏற்படுத்தாத பாடி ஸ்பிரேக்கள் வந்துவிட்டன. சருமநோய் நிபுணரின் பரிந்துரையின்பேரில் இவற்றைப் பயன்படுத்தலாம்.

ஒருவருக்கு அதிக வியர்வை வெளியேறு வதால், பாக்டீரியாத் தொற்று மூலமாக ஏற்படும் வியர்வைத் துர்நாற்றம் அதிகரிக்கக்கூடும். அதீத வியர்வையைக் கட்டுப்படுத்தினால் துர்நாற்றம் குறையும். அதீத வியர்வையைக் கட்டுப்படுத்த போடாக்ஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் உள்ளன.

போடாக்ஸ் சிகிச்சை (Botox)

பல வருடங்களாக உடல் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்களுக்கு அளிக்கப்படும் முதல்கட்ட சிகிச்சை இது. தோல் மரத்துப் போகும் ஊசி செலுத்தப்பட்டு, உடலில் பிரத்யேக கிரீம் தடவப்படும். இதனால் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் வரை வியர்வை வெளியேறும் அளவைக் குறைக்கலாம். இதனால், துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கமுடியும். ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

நிரந்தரத் தீர்வு உண்டா?

அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் உள்ள வியர்வை சுரப்பிகளின் அளவைச் சுருக்கும் பிரத்யேக சிகிச்சைகளும் இருக்கிறது. இதனால் வியர்வையின் அளவு குறையும். இந்தச் சிகிச்சை செய்தும் வியர்வையின் அளவு குறையாமல் இருந்தால், கடைசிக்கட்ட சிகிச்சையாக அக்குளில் உள்ள சில வியர்வைச் சுரப்பிகள் நிரந்தரமாக நீக்கப் படும். இதனால், நிரந்தரமாக வியர்வையின் அளவு குறைந்து துர்நாற்றம் குறையும்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்