கர்ப்பம் என்பது பெண்களுக்கு வரம். அந்தக் கர்ப்பமே வேண்டாத நேரத்தில் நேர்ந்துவிட்டால், அதுதான் பெரிய சாபம். நம் நாட்டில் கருத்தடைச் சாதனங்கள் பற்றிய விழிப்பு உணர்வு மிகவும் குறைவு. மேலும், அது குறித்து எண்ணற்ற தவறான நம்பிக்கைகளும் கருத்துகளும் உள்ளன. சிலர் கருத்தடைச் சாதனத்தைப் பயன்படுத்துவதைப் பாவம் என நினைக்கிறார்கள். சிலர் அதை இன்பத்துக்கு இடைஞ்சல் என நினைக்கிறார்கள். முன்யோசனையற்ற இப்படியான தவறான எண்ணங்கள்தான் கருக்கலைப்பு மற்றும் அது தொடர்பான பிரச்னைகளைப் பெருக்குகிறது.

கருத்தடை என்றதும் அறுவைசிகிச்சை மட்டுமே பலருக்கும் நினைவுக்கு வருகிறது. அதிலும், பெண் மட்டும் செய்தால் போதும், ஆண் செய்யத் தேவையில்லை என்ற தவறான நம்பிக்கையும் நிலவுகிறது. அறுவைசிகிச்சை இன்றியே கருத்தடை செய்ய முடியும். இதற்கு, கருத்தடைச் சாதனங்களைப் பற்றி ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

கருத்தடை முறைகள்

பொதுவாக, கருத்தடை வழிமுறைகள்.... தற்காலிகமானவை, நீண்டகால முறைகள், நிரந்தர முறைகள் என மூன்று வகைப்படும். தற்காலிக முறைகளில் `காண்டம்’ எனப்படும் உறை, கருத்தடை மாத்திரை, அவசரநிலை மாத்திரை, கருத்தடை பேட்ச், கருத்தடை வளையங்கள், ஸ்பெர்மிசைட், டயாப்ரம், கேப், கருத்தடை ஊசி ஆகியவை அடங்கும். நீண்டகால முறைகளில் காப்பர் டி, கான்ட்ராசெப்டிவ் இம்பிளான்ட் ஆகியவையும், நிரந்தர முறையில் டியூபெக்டமி, வாசக்டமியும் அடங்கும். இதில் ஆணுறையும், வாசக்டமியும் ஆண்களுக்கானவை. மற்றவை பெண்களுக்கானவை.

தற்காலிக முறைகள்

காண்டம் எனப்படும் உறை

பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த எளிய கருத்தடைச் சாதனம் இது. இதில் ஆணுறை, பெண்ணுறை என இரண்டு வகைகள் உள்ளன. உடலுறவின்போது இதை அணிந்துகொண்டால், விந்து, சினை முட்டையை அடைவதைத் தடுத்து, கர்ப்பம் தடுக்கப்படும். உறைகளுடன் சேர்த்து ‘ஸ்பெர்மிசைட்’ எனப்படும், விந்து அணுக்களைக் கொல்லும் மருந்துகளையும் பயன்படுத்துவது உண்டு. உடலின் வெளியே மட்டும் செயல்படுவதால் இது பாதுகாப்பானது. மேலும், உடலுறவினால் பரவும் நோய்களைத் தடுக்கக்கூடிய கருத்தடை சாதனம் இது. உறை கிழிந்துபோதல், கழண்டுபோதல், ஓட்டை ஏற்படுதல் ஆகிய காரணங்களால் இந்த முறை தோல்வியடைய 20 சதவிகித வாய்ப்பு உள்ளது.

கருத்தடை மாத்திரை

இது பெண்களுக்கானது. இந்த மாத்திரைகளில் புரோஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜென் ரசாயனங்கள் இருக்கின்றன. இது, முட்டை வெளியேறுதலை தடுத்து, கருத்தரிப்பைத் தவிர்க்கிறது. இந்த மாத்திரைகளை மாதவிடாய் முடிந்த இரண்டாம் நாள் தொடங்கி, 21 நாட்கள் உட்கொள்ள வேண்டும். இதனால், முட்டை வெளியே வராது. மியூக்கஸ் சுரப்பை அடர்த்திப்படுத்தியாக்கியும் இது கருத்தடை செய்யும். இந்த மாத்திரையை தினமும் குறித்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும். ஏதேனும் ஒருநாள் எடுத்துக்கொள்ளாமல் தவறவிடுவது, நேரம் மாற்றிச் சாப்பிடுவது போன்ற காரணங்களால் இது தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதனால், பெண்களுக்கு சில பக்கவிளைவுகளும் ஏற்படக்கூடும். எனவே, பயன்படுத்தும் முன் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.

அவசரநிலை மாத்திரை

இதுவும் பெண்களுக்கானதுதான். உடலுறவு முடிந்த 24 மணி நேரத்துக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.குறித்தநேரத்தில் எடுத்துக் கொண்டால்கூட இந்த மாத்திரை செயல்படாமல் போவதற்கு 52 சதவிகித வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதனை அடிக்கடி எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும். எனவே, மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

கருத்தடை பேட்ச்

‘கான்ட்ராசெப்டிவ் பேட்ச் (Patch)’ எனப்படும் இந்த பேட்ச்களை முன்வயிறு, பின்புறம், முதுகு ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டால், சருமம் வழியாகக் கடத்தும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் சினைமுட்டை உருவாதலைத் தடுப்பதன் மூலம் கர்ப்பம் தடுக்கப்படும். மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து சீரான இடைவெளியில் ஒட்டிக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் தற்போதுதான் ஓரளவு உபயோகத்தில் உள்ளது இந்த பேட்ச். இதிலும் தோல்வி ஏற்பட ஓரளவு வாய்ப்பு உள்ளது.

கருத்தடை வளையங்கள்

‘கான்ட்ராசெப்டிவ் ரிங்’ எனப்படும் இந்தக் கருத்தடை வளையத்தை மாதவிலக்கின் முதல்நாள் அணிந்துகொண்டால், அது வெளியிடும் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் சினைமுட்டை வெளியாதலைத் தடுத்து, கர்ப்பத்தைத் தடுக்கும். தோல்வி அடையு ம் வாய்ப்பு இதிலும் ஓரளவு உள்ளது.

ஸ்பெர்மிசைட்ஸ்

விந்தணுக்களை அழிக்கும் நுரை போன்ற அமைப்பை உருவாக்கி, விந்தணுக்களின் ஓட்டத்தைத் தடை செய்யும் ரசாயனப் பொருள் இது. பெண்ணின் பிறப்புறுப்பில் வைக்கக்கூடிய வகையில் ஜெல், க்ரீம் எனப் பல வடிவங்களில் வருகிறது. இதைத் தனியாகப் பயன்படுத்தும்போது 50 சதவிகிதத்துக்கு மேல் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. டயாப்ரம் அல்லது கேப் முறையுடன் பயன்படுத்தும்போது நல்ல பலன்தரும்.

டயாப்ரம் (Diaphragm)

கூடாரம் போன்ற முகப்பு உடைய ரப்பரால் ஆன பொருள். இது, வளைந்துகொடுக்கக்கூடியது. இதை உடலுறவுகொள்ளும் முன்னர் பெண்கள் பொருத்திக்கொள்ள வேண்டும். பிறப்புறுப்புக்குப் பின்புறம், பியூபிக் எலும்பு பகுதியில் பொருத்த வேண்டும். மிகச்சரியாகப் பொருத்தினால் கர்ப்பப்பைவாய் திறக்காமல் போய்விடும். இதனால், கர்ப்பப்பைக்குள் விந்தணு செல்வது தடுக்கப்படும். உடலுறவுக்குப் பிறகு ஆறு மணி நேரத்தில் இதை அகற்றிவிட வேண்டும். தொடக்கத்தில் இந்த டயாப்ரத்தை மருத்துவர்தான் பொருத்துவார். நன்கு பழகிய பிறகு, இதைப் பெண்கள் தாங்களாகவே பொருத்திக்கொள்ளலாம். இதைத் தனியாகப் பயன்படுத்தும்போது 50 சதவிகிதத்துக்கு மேல் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. ஸ்பெர்மிசைட்ஸுடன் பயன்படுத்தும்போது நல்ல பலன் கிடைக்கும்.

கேப்

இதுவும் ரப்பரால் ஆன பொருள்தான். உடலுறவுக்கு முன் கர்ப்பப்பைவாய்க்கும் பிறப்புறுப்புக்கும் இடையில் பொருத்த வேண்டும். இது, விந்தணுக்கள் பயணிப்பதைத் தடுக்கிறது. கிட்டத்தட்ட இதுவும் டயாப்ரம் போலத்தான். ஆனால், பல்வேறு அளவுகளில் வருகிறது. இதையும் தனியாகப் பயன்படுத்தும்போது 50 சதவிகிதத்துக்கு மேல் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. ஸ்பெர்மிசைட்ஸுடன் பயன் படுத்தலாம்.

கருத்தடை ஊசி

இதுவும் பெண்களுக்கானதுதான். மூன்று மாத இடைவெளியில் போட்டுக்கொள்ளும் ஊசி இது. புரோஜெஸ்ட்ரான் ஹார்மோனை வெளியிட்டு கருமுட்டை உருவாதலைத் தவிர்ப்பதோடு, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி, விந்து, கருப்பையை அடையாமலும் தடுக்கும். உலகம் முழுக்கப் பரவலாகப் பின்பற்றப்படும் முறை இது. 6 சதவிகிதம் தோல்வி அடைய வாய்ப்பு உள்ள கருத்தடை முறை இது. மேலும், சிலருக்கு இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், மருத்துவரிடம் சென்று மட்டுமே போட்டுக்கொள்ள வேண்டும்.

நீண்டகால கருத்தடை

காப்பர் டி

மாதவிலக்கின் இறுதி நாளில், பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக மருத்துவரால் உள்ளே பொருத்தப்படும் கருத்தடைச் சாதனம் இது. பல்வேறு அளவுகளில் வருகிறது. அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை ஆயுள்கொண்டது. ஹார்மோன்கள் கொண்ட காப்பர் டி, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி, விந்துக்கள் எண்டோமெட்ரியத்தை அடைவதைத் தவிர்க்கும். ஹார்மோன்கள் இல்லாத காப்பர் டி, விந்துக்களின் இயக்கத்தைத் தடுக்கும். மேலும், இதை, விரும்பும்போது அகற்றி, கருத்தரிக்கலாம்.

கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட்

`கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட்’ எனப்படும் சிறிய குச்சி போன்ற கருத்தடைச் சாதனம், பெண்களின் கைப்பகுதியில் பொருத்தப்படும். இது, புரோஜெஸ்ட்ரான் ஹார்மோனை வெளியிட்டு, கருத்தரித்தலைத் தடுக்கும். மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்குப் பலன் அளிக்கும் வகையில் இரண்டு விதங்களில் வருகிறது. விரும்பினால் இதை அகற்றிக்கொண்டு கருத்தரிக் கலாம். ஒரு சதவிகிதம் மட்டுமே தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது.

நிரந்தர முறைகள்

ட்யூபெக்டமி (Tubectomy)

இது ஒரு நிரந்தரமான கருத்தடுப்பு முறை. இதில் பெண்களின் பெலோப்பியன் குழாய் கத்தரிக்கப்பட்டு, முடிச்சுப் போடப்படும். சிலருக்கு இந்தக் குழாயை அகற்றுவதும் உண்டு. முடிச்சிடும் முறையில் அறுவைசிகிச்சை செய்துகொண்டால் மீண்டும் குழந்தைபெற விரும்பினால் தடையை அகற்றிச் சரி செய்துகொள்ளலாம். ஆனால், குழாய் அகற்றப் பட்டால் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. தற்போது லேப்ரோஸ்கோபி முறையில் எளிமையாக இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.

வாசக்டமி

இது ஆண்களுக்கான கருத்தடை முறை. இதில், விதைப்பையில் இருந்து விந்து எடுத்துச் செல்லப்படும் பாதை அறுவைசிகிச்சை மூலம் அடைக்கப்படுகிறது. பெண்களுக்குச் செய்யப்படும் அறுவைசிகிச்சையைக் காட்டிலும் இது மிகவும் எளிதானது. இப்போது, தழும்பு இல்லாத வாசக்டமி வந்துவிட்டது. அறுவைசிகிச்சை 30 நிமிடங்களில் முடிந்துவிடும். வலி மிகமிகக் குறைவு. அறுவைசிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்தில் வீட்டுக்குத் திரும்பிவிடலாம்.

- இளங்கோ கிருஷ்ணன்