‘புகை பிடிக்காதீர்கள்’ என்று சிகரெட் அட்டை முதல் சினிமா தியேட்டர் வரை எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்தாகிவிட்டது. ஆனாலும், எங்கெங்கும் புகைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள் புகை மன்னர்கள். `பொது இடத்தில் புகைத்தால் அபராதம்’ என்று அரசு அறிவித்தாலும் சிலர் ‘அபராதம் கட்டவும் தயார்’ என்று பிடிவாதமாகப் புகைக்கிறார்கள். புகையிலையில் நிகோடின், காட்டினின், தியோசயனைட்ஸ், பென்ஸீன் கூட்டுப் பொருட்கள் போன்ற உயிர்க்கொல்லி நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை, புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. ஒரு சிகரெட்டில் 8-20 மி.கி நிகோடின் உள்ளது. தொடர்ந்து எத்தனை வருடங்கள், எத்தனை சிகரெட் பிடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்துப் பல நோய்கள் வரலாம்.

புகை பிடிப்பதால் ஏற்படும் உடல் உறுப்பு பாதிப்புகள்

புகைப்பழக்கம் என்றாலே புற்றுநோய் தான் நினைவுக்கு வருகிறது. அதற்கு இணையான மற்றொரு பிரச்னையைப் பற்றி யாருக்கும் தெரிவதில்லை. அதுதான், `நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்’ (COPD- Chronic Obstructive Pulmonary Disease). இது, முதலில் நுரையீரலைப் பாதிக்கும். இதனால் மூச்சுக்குழாய் அடைப்பு, மூச்சடைப்பு, வீஸிங் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

சி.ஓ.பி.டி

நுரையீரலுக்குச் செல்லும் மூச்சுக்குழாயில் சுருக்கம் ஏற்படுவதால், சுவாசத்தில் தடை ஏற்பட்டு, நுரையீரல் சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. இதனால், காற்று மேலும் மேலும் உள்ளே வரும். இந்த நிலையில், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். சி.ஓ.பி.டி உள்ளவர்களுக்கு நிமோனியா காய்ச்சல், வீஸிங், மூச்சுத்திணறல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. சி.ஓ.பி.டி ஏற்பட்டு மூச்சுக்குழாய் சுருங்கினால் அதைச் சரி செய்ய முடியாது. பிரச்னை மேலும் தீவிரம் அடையாமல் தடுக்க மட்டுமே சிகிச்சைப் பெற முடியும்.

சி.ஓ.பி.டி அறிகுறிகள்

* ஆரம்ப காலத்தில் எந்தவித அறிகுறிகளும் தென்படாது.

* வருடத்தில் தொடர்ந்து மூன்று மாதங்கள் தொடர் இருமல் மற்றும் சளி இருக்கும். சளி வெள்ளை, பச்சை, மஞ்சள் போன்ற நிறங்களில் வெளியேறலாம்.

* காலையில் எழுந்திருக்கும்போது தொண்டையில் சளி நிற்கும்.

* நாட்பட நாட்பட உடல் எடை குறையும்.

பரிசோதனைகள்

`பி.எஃப்.டி’ (PFT-Pulmonary Functional Test) எனப்படும் காற்றை ஊதும் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே மூலமாக இந்த மூச்சுக்குழாய் அடைப்பு நோயைக் கண்டறியலாம்.

பி.எஃப்.டி பரிசோதனை, நுரையீரலின் செயல்பாட்டைப் பரிசோதிக்க உதவுகிறது. காற்றை ஊதுவதற்கான குழல் ஒன்று கணிப்பொறியுடன் இணைக்கப்பட்டிருக்கும். நோயாளி, குழலில் வாய் வைத்து ஊதும்போது, காற்று ஊதும் வேகம், தொடர்ந்து ஊதும் நேரம் ஆகியவற்றைக் கணக்கிட்டு ஒருவரின் நுரையீரல் செயல்பாட்டின் அளவு மதிப்பிடப்படுகிறது.

புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்...

* மூளை மற்றும் இதயம் பாதிப்படையும்.

* மனஉளைச்சல் ஏற்படும்.

* தினசரி வாழ்க்கைமுறை பாதிக்கப்படும். நாள்முழுவதும் சோர்வை உண்டாக்கும்.

* உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும்.

* நெஞ்சு எரிச்சல் மற்றும் தொண்டையில் சளியை நிலைநிறுத்தும்.

* வயிற்று எரிச்சல் மற்றும் அல்சரை உருவாக்கும்.

பேசிவ் ஸ்மோக்கர்ஸ்

புகை பிடிப்பவர்களைச் சுற்றி உள்ள காற்றில், நிகோடின், காட்டினின், அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (Aromatic hydrocarbons), கார்பன்மோனாக்ஸைடு, சல்ஃபைடு, நித்தில் போன்ற நச்சுப்பொருட்கள் உட்பட 1,000-க்கும் அதிகமான ரசாயனங்கள் உள்ளன. இதனால், புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்களும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள், `பேசிவ் ஸ்மோக்கர்ஸ்’ அல்லது ‘இரண்டாம் நிலை புகை பிடிப்பவர்’ (Secondhand smokers) என அழைக்கப்படுகின்றனர்.

சுற்றமும் சூழலும்

ஒருவர் புகைத்து வெளியிட்ட சிகரெட் புகையை கர்ப்பிணிகள் சுவாசித்தால், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி குறையும். கருச் சிதைவு, கலைதல்கூட ஏற்படலாம்.

புகையை சுவாசிக்கிற குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி குறையும்.

வீட்டில் உள்ளவர்களுக்கு ஆஸ்துமா, வீஸிங் போன்ற நோய்கள் ஏற்படலாம்.

அலர்ஜி சார்ந்த நோய்கள் வரலாம்.

பேசிவ் ஸ்மோக்கர்களுக்கு ஆஸ்துமா, இதயநோய்கள் ஏதேனும் இருந்தால், அவர்களுக்கு நுரையீரல் பாதிப்புகள் எளிதில் ஏற்படும்.

புகை பிடிப்பதைத் தவிர்த்தால்...

* புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால், உடலின் ரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் சீரான நிலைக்கு வருகின்றன. இதனால், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம்.

* நுரையீரலுக்கு சீரான மற்றும் சுத்தமான காற்று செல்லும். சுவாசக் கோளாறுகள் சரி ஆகும்.

* நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.

* மூளை சுறுசுறுப்பாகும். மனஅழுத்தம் குறையும். வேலையில் கவனம் அதிகரிக்கும்.

* வீட்டில் உள்ளவர்களின் உடல்நலன் சரியாகும். குழந்தைகளின் வளர்ச்சி தடைப்படாமல் இருக்கும்.

* சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும். உங்களின் பொருளாதாரமும் அதிகரிக்கும்.

புகைப்பழக்கத்தை எப்படித் தவிர்க்கலாம்?

புகை பிடிப்பது, மனரீதியாக போதைக்கு அடிமையாகும் பழக்கம். மேலும், எந்த வயதில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, இதன் பின்விளைவுகளும் மாறுபடுகின்றன. பதின்பருவத்தில் இந்தப் பழக்கத்தைக் கொண்டுவருபவர்களுக்கு போதைக்கு அடிமையாகும் பழக்கம் சற்று அதிகமாக இருக்கும். இந்த பதின்பருவத்தினரைப் புகைப்பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவருவது மிகவும் கடினம். சற்று வயதானவர்களையும், இந்தப் பழக்கத்தைப் புதிதாகக் கொண்டவர்களையும் புகைப்பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவருவது சுலபம்.

மாத்திரைகள்

ஆரம்பகால கட்டத்தில், இன்ஹேலர் மருந்துகள் நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்துப் பரிந்துரைக்கப்படுகின்றன. தடுப்பு மருந்தாக எடுக்கப்படும் இன்ஹேலர் மருந்துகள், நம்மை போதைக்கு அடிமையாக்கும் என்ற தவறான கருத்து பரவிவருகிறது.

சிறிது நாள்பட்ட காலத்தில், ஸ்டீராய்டு மாத்திரைகள் நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்துப் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், தடுப்பு மருந்தாக எடுத்துக்கொள்ளப்படும் இந்த ஸ்டீராய்டு மருந்துகளால் இதயநோய், பார்வைக் குறைபாடு, சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், மூட்டுப் பிரச்னைகள் மற்றும் ஹார்மோன் பிரச்னைகள் போன்ற மோசமான பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். எனவே, முடிந்தவரை இத்தகைய தடுப்பு மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது.

கவுன்சலிங்

புகைப் பழக்கத்துக்கு அடிமையானவரை அந்தப் பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வருவது மிகவும் கடினமான செயல். பழக்கத்தை மாற்ற, மருத்துவரின் தொடர் கவுன்சலிங் அவசியம். மேலும், குடும்பத்தாரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

- ச.மோகனப்பிரியா

தடுப்பூசிகள்

* புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வேறு எந்த நோய்த்தொற்றும் வராமல் இருக்க, தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் இருக்க வருடத்துக்கு ஒருமுறை ஃப்ளூ (Flu) தடுப்பூசி போடப்படுகிறது.

* நியூமோகோக்கல் (Pneumococal) தடுப்பூசி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை போடப்படுகிறது. இது, உடனடியாக நோய்த்தொற்றால், உடல் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது.

லைட் சிகரெட்டும் ஆபத்தே!

லைட் சிகரெட் புகைப்பவர்கள், `புகை, காற்றில் வேகமாகக் கரையும் என்ற காரணத்தால் இதைப் புகைக்கிறேன்’ என்பார்கள். ஆனால், உண்மையில் லைட் சிகரெட் பிடிப்பவர்களுக்கு ஒருமுறை உள் இழுக்கும் புகையால் திருப்தி ஏற்படாது. ஆகையால், அவர்கள் திருப்தி அடையும் வரை தொடர்ந்து புகை பிடிப்பர். இதனால், சிகரெட்டின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர, எந்தவிதமான சூழல் பாதிப்பும் சரியாகாது. லைட் சிகரெட்டில் நிகோடின் அளவு ஓரளவு குறைவாக இருப்பதே, மற்ற சிகரெட்டுக்கும் இதற்குமான வித்தியாசம். ஆனால், மிகச் சிறிய அளவு நிகோடினே நம் உடலைக் கெடுக்கப் போதுமானது என்பதால், இந்தக் காரணமும் அபத்தமானதே.

சிலர், சிகரெட்டுக்கு மாற்றாக இ-சிகரெட் முயற்சிப்பார்கள். அதிலும் நிகோடின் இருக்கிறது. இதுவும் ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தும்.