சிறுநீர்க் கசிவு... சர்க்கரை நோயாளிகள், 45 வயதுக்கு மேற்பட்ட மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் சந்திக்கும் பிரச்னை. இதனால், இவர்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீர்க் கசிவால் ஏற்படும் துர்நாற்றத்தால், உடனிருப்பவர்கள் அவர்களை ஒதுக்கு வதும் நிகழ்கிறது. இது, அவர்களுக்கு அவமானத்தையும் வெளியே பகிரமுடியாத மனஉளைச்சலையும் உண்டாக்குகிறது.

யாருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது?

சிறுநீரகத்தில் இருந்து சொட்டுச் சொட்டாகப் பிரியும் நீர், சிறுநீர்ப் பையைச் சென்று சேரும். சுருங்கி விரியும் தன்மை உடைய, முழுதாக வளர்ச்சிபெற்ற சிறுநீர்ப்பை, அதிகபட்சமாக 850 மி.லி சிறுநீரைத் தாங்கும். சிறுநீர், 600 மி.லியைத் தாண்டியதும், சிறுநீர்ப்பையின் தசைகள் சுருங்கி, சிறுநீர் கழிக்கும் உணர்வைத் தானாகவே ஏற்படுத்தும். சிலருக்கு வயோதிகம், நோய்கள் காரணமாகச் சிறுநீர்ப்பை நிரம்பாமலேயே, இந்தத் தசைச் சுருக்கம் ஏற்படும். இதை அதீத செயல்பாடு கொண்ட சிறுநீர்ப்பை (Overactive bladder) என்பார்கள். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். இவர்களுக்கு சிறுநீர்க் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை நோயாளிகள், அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டி உள்ளதால், வெளி இடங்களுக்குச் செல்லும்போது சிறுநீரை அடக்குவர். இதனால், சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரை வெளியேற்ற அனுமதிக்கும் வால்வு அழுத்தப்பட்டு வலுவிழந்துவிடும். இது, சிறுநீர்க் கசிவுப் பிரச்னையை ஏற்படுத்தும்.

மூளை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், மனஅழுத்தம், அல்சைமர் எனும் ஞாபகமறதி நோய் உடையவர்களுக்கு சிறுநீர்க் கசிவு ஏற்படலாம்.

ஆண்களில் ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் மற்றும் கடைசிநிலை புற்று இருப்பவர்களுக்கு சிறுநீர்ப்பை அழுத்தப்பட்டு, சிறுநீர்க் கசிவு ஏற்படலாம்.

பெண்களுக்குத் தொடர் கர்ப்பம் காரணமாக, கர்ப்பப்பை அழுத்தம் ஏற்படும். இதனால், சிறுநீர்ப்பை கீழ்நோக்கித் துவண்டுவிடும். நரம்புகள் அழுத்தப்பட்டு, சிறுநீர்க் கசிவு ஏற்படும்.

அடிக்கடி ஏற்படும் தும்மல், இருமல் காரணமாகவும், கனமான பொருட்களைத் தூக்கும்போது அடிவயிற்றில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் சிறுநீர்ப்பை அழுத்தப்பட்டு சிறுநீர்க் கசிவு ஏற்படலாம்.

சிகிச்சைகள்

சிறுநீர்க் கசிவு ஏற்படப் பல காரணங்கள் உள்ளதால், தனிநபர் நோய்க்குறிகளை வைத்தே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலமாகக் காரணத்தைக் கண்டறிய முடியும்.

மனஅழுத்தம், அல்சைமர் போன்ற மூளை, நரம்பியல் நோய்களால் ஏற்படும் சிறுநீர்க் கசிவுக்குச் சிகிச்சை கிடையாது. இவர்கள், அவசியப்பட்டால் டயப்பர் பயன்படுத்த வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் அவ்வப்போது சிறுநீரை வெளியேற்றுவதுடன், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டியதும் அவசியம். இவர்களுக்கு ஆரம்பநிலையில் மருந்து, மாத்திரைகள் மூலமாகக் குணமாக்கலாம். முற்றிய நிலையில் அறுவைசிகிச்சை தேவைப் படலாம்.

தீர்வு

60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சிறுநீர்க் கசிவுக்கான சிகிச்சைகள் குறைவு. சிறுநீர்க் கசிவு ஏற்படும் வரை அலட்சியமாக இருக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதே சிறந்த தீர்வு. பிரசவத்துக்குப் பிறகு சிறு நீர்ப்பைத் துவண்டுவிடாமல் இருக்க, அதற்கான பிரத்யேகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

மனஅழுத்தத்தைத் தவிர்க்க, மனதை எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு யோகா, தியானம், காலை நடைப்பயிற்சிகள் செய்யலாம்.

தொடர் இருமல் பிரச்னை உள்ளவர்கள், அதற்குரிய சிகிச்சைகளைச் செய்துகொள்வது அவசியம். சைனஸ், அடுக்குத் தும்மல் பிரச்னை உள்ளவர்கள், அதற்கு உண்டான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், சிறுநீர்க் கசிவுப் பிரச்னை முன்கூட்டியே தடுக்கப்படும்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

விழிப்பு உணர்வு இன்மையே காரணம்!

நகரங்களில் வசிப்பவர்கள் சிறுநீர்க் கசிவு ஏற்படத் தொடங்கியதும் சிறுநீரகவியல் நிபுணரை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு போதிய விழிப்புஉணர்வு இல்லை. தகுந்த நிபுணர்களிடம் காட்டி சிகிச்சை எடுத்துக் கொள்ள பொது மருத்துவர் அறிவுறுத்தினாலும், கூச்சம் உள்ளிட்ட காரணங்களால் சிகிச்சை பெறுவது இல்லை. ஆரம்பநிலையிலேயே சிகிச்சை பெறுவதன் மூலம் இதை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

செயற்கை யூரினரி ஸ்பிங்டர் (Artificial Urinary Sphincter)

இது சிறுநீர்க் கசிவு ஏற்படும் ஆண்களுக்கு செய்யப்படும் சிகிச்சை. இவர்களுக்கு சிறுநீர்ப் பையின் கழுத்துப்பகுதி சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடுவதால், சிறுநீர் வழிந்தபடியே இருக்கும். இதனைக் கட்டுப் படுத்தவே இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. இந்தவகை சிகிச்சையில் சிறுநீர்க் குழாயைச் சுற்றி டைட்டேனியம் உலோகத்தால் ஆன ஸ்பிங்டர் பொருத்தப்படும். இதனுடன் இணைக்கப்படும் சுவிட்ச் விந்துப்பையின் ஓரத்தில் பொருத்தப்படும்.

சிறுநீர்ப்பையில் சொட்டு சொட்டாகச் சேரும் சிறுநீர், வெளியே வழியாமல் இந்த ஸ்பிங்டர் தடுத்துவிடும். இயல்பான நிலையில் இது, மூடி இருக்கும். நோயாளிக்கு சிறுநீர்ப்பை நிரம்பியதும் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். உடனே அவர், விதைப்பையில் இருக்கும் ஸ்விட்சை அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும். இதனால் ஸ்பிங்டர் திறந்து சிறுநீர் வெளியேற வழிவிடும். சிறுநீர் முழுவதுமாக வெளியேறியதும் சுவிட்ச்சை விடவேண்டும். இதனால் ஸ்பிங்டர் மீண்டும் மூடிக்கொள்ளும். இவ்வாறு நிரந்தரமாகப் பொருத்தப்பட்ட இந்த ஸ்பிங்டரின் உதவியுடன் நோயாளி வாழ்நாள் முழுவதும் சிறுநீர் கழிக்கவேண்டும்.