கே.மாணிக்கவேல், ஆரணி.

"எனக்கு வயது 24. நான் சிறு வயதில் இருந்து கண்ணாடி அணிந்துவந்தேன். தற்போது, லென்ஸ் வைத்துள்ளேன். நண்பர்கள் லேசர் சிகிச்சை செய்துகொள்ளச் சொல்கிறார்கள். சிலர் வேண்டாம் என்கிறார்கள். எனக்குக் குழப்பமாக உள்ளது. லேசர் சிகிச்சை பாதுகாப்பானதா?"

டாக்டர் சு.கணபதி ராஜேஷ்,
கண் மருத்துவர், தேனி.

"கண் என்பது கேமராவைப் போன்றது. கருவிழி தன் இடத்தை விட்டு சற்று நகர்ந்து விடுவதால் தான் பார்வையில் வித்தியாசம் ஏற்படும். பொதுவாக, அனைவருக்குமே லேசர் சிகிச்சை தேவைப் படுவது இல்லை. பார்வைக் குறைபாடு இருந்தாலும் கண்ணாடி அல்லது லென்ஸே பலருக்கும் போதுமானது. பார்வைக் குறைபாடு அதிகரிக்கும்போது சிலருக்கு லேசர் சிகிச்சை செய்ய வேண்டியதாகிறது. இந்த சிகிச்சை ஐந்து நிமிடங்களில் முடிந்துவிடக் கூடியது. அறுவைசிகிச்சை முடிந்த 15-25 நாட்கள் வரை அவசியம் மருந்துவர் பரிந்துரைத்த மாத்திரை களை எடுத்துக்கொள்ள வேண்டும். கண்களில் புரை, விழித்திரைக் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் இருந்தால் லேசர் சிகிச்சை செய்துகொள்ள முடியாது. முதலில் அந்தப் பிரச்னையைச் சீராக்கிய பிறகே லேசர் சிகிச்சை செய்ய வாய்ப்பு உள்ளது. லேசர் சிகிச்சை செய்வதால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது.

அருகில் உள்ள கண் மருத்துவரிடம் சென்று கண்ணாடி, லென்ஸ் அணிவதில் இருந்து விடுபடவும், அழகியல் காரணங்களுக்காகவும் இன்று பலரும் லேசர் சிகிச்சை செய்துகொள்கிறார்கள். உண்மையில், லேசர் சிகிச்சை செய்தால்தான் பார்வையை மீட்டெடுக்க முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் மட்டுமே இதைச் செய்துகொள்வது நல்லது. உங்க ளுக்கு லேசர் சிகிச்சை அவசியமா எனப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். மருத்துவர் அவசியம் என்று பரிந்துரைத்தால் மட்டுமே செய்துகொள்ள வேண்டும்."

ஆர்.நீலமேகம், சின்ன சேலம்.

"என் மகனுக்கு வயது 15. கடந்த சில நாட்களாக தொண்டை வலியுடன் காய்ச்சலாலும் கடுமையான கை, கால் வலி, மூட்டுவலியாலும் அவதிப்பட்டு வருகிறான். மூட்டு வீக்கமும் உள்ளது. நெஞ்சுவலியும் அவ்வப்போது வருகிறது. இது என்ன பிரச்னை? இதற்கு என்ன தீர்வு?"

டாக்டர் கண்ணன்,

குழந்தைகள் நல மருத்துவர், மதுரை.

“தொண்டை அழற்சியைத் தொடர்ந்து காய்ச்சலும் கை, கால் இணைப்புகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டால் அது, ரூமாட்டிக் காய்ச்சல் எனப்படும் வாதக் காய்சலாக இருக்கலாம். இது பாக்டீரியா தொற்றால் ஏற்படும் பிரச்னை ஆகும். தொடர் காய்ச்சல், கட்டுப்படுத்த முடியாத தன்னிச்சையான உடல் அசைவுகள், உடல் பலவீனம், மூச்சிரைப்பு, நெஞ்சுவலி, கை, கால் மூட்டுவலி, மூட்டுகள் வீங்கி உஷ்ணமாகக் காணப்படுதல் போன்றவை இதன் அறிகுறிகள். ரத்தப் பரிசோதனை, ஏ.என்.ஏ (ANA - Antinuclear Antibodies), டி.எஸ்,டி.என்.ஏ (DSDNA - Anti-dsDNA antibodies) போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த நோயை அறியலாம்.

வாதக்காய்ச்சல் ஹார்ட் ஃபெயிலியர் உள்ளிட்ட இதய பாதிப்புகளைக்கூட ஏற்படுத்தக்கூடும் என்பதால், தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். கை, கால் வலிக்கும் வீக்கத்துக்குமான மருந்துகளோடு தொண்டை அழற்சியை குணமாக்குவதற்கான மருந்துகள் கொடுக்க வேண்டும். வலிக்கான மருந்து கொடுத்தும் சரியாகவில்லை எனில், மெத்தோட்ரெக்ஸேட் (methotrexate tablets) மருந்து கொடுக்க வேண்டும். அதன் பின்னும் சரியாகவில்லை எனில், ஸ்டீராய்டு மருந்து கொடுக்க வேண்டும். ஸ்டீராய்டு மருந்தால் ஏதேனும் பக்கவிளைவு ஏற்படுகிறதா என்று கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

அதிகப் புரதச்சத்து உள்ள உணவுகளான பருப்பு வகைகள், சிறுதானியங்கள், பால், முட்டை போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். தொண்டை அழற்சி ஏற்பட்டால் உடனடியாகக் கவனிக்க வேண்டும். இல்லாவிடில் இது ரூமாட்டிக் காய்ச்சலாகவும், இதய பாதிப்பாகவும் மாற வாய்ப்புகள் அதிகம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.”

சோ.புஷ்பா, நாமக்கல்.

"என் வயது 21. எனக்கு முகப்பருக்கள் அதிகமாக உள்ளன. கிரீம்கள் பயன்படுத்தினாலும் பெரிய பலன்கள் இல்லை. இயற்கையான முறையில் முகப்பருக்களை கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் ஏதேனும் சிகிச்சைகள் உள்ளனவா?"

உலகநாதன், சித்த மருத்துவர்.

"முகப்பருக்கள் ஏற்பட ஹார்மோன் கோளாறுகள், சென்சிட்டிவ் சருமம், மரபியல், வாழ்க்கைமுறை எனப் பல்வேறு காரணங்கள் உள்ளன. பெண்கள் பருவம் அடைந்த பிறகு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கிறது. மாதவிலக்குச் சுழற்சி, பாலுறுப்புகளின் வளர்ச்சி உட்பட பல்வேறு முக்கியமான பணிகளை இந்த ஹார்மோன் செய்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பில் ஏதேனும் கோளாறு இருந்தால், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், முடி வளர்ச்சி பாதிப்பு, முகத்தில் சீபம் அதிகமாகச் சுரக்கும் சென்சிட்டிவ் சருமம், முகப்பரு எனப் பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன.

சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக இறைச்சி, எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ் போன்றவற்றை உண்ணும்போது முகப்பரு பிரச்னை மேலும் தீவிரமாகிறது. மனஅழுத்தம், போதிய உறக்கமின்மை போன்றவையும் முகப்பருவை ஏற்படுத்தக்கூடும்.

உருண்டை மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சளை இடித்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் கற்றாழை, தயிர், பாலாடை, பப்பாளி, தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்து ஃபேஸ்பேக்காக முகத்தில் பூசி, 15-20 நிமிடங்கள் வைத்திருந்துவிட்டுக் கழுவிவர, நல்ல பலன் கிடைக்கும். மேற்கூறியவற்றில் மஞ்சளுடன் தினசரி ஏதேனும் ஒன்று என மாறி மாறிக் கலந்து பூசலாம். முகத்தில் அதிக மஞ்சள்தன்மையை விரும்பாதவர்கள். சற்று வெளிறிய கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம். இதனால், பக்கவிளைவுகள் ஏதும் கிடையாது.

இதனுடன் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான புடலங்காய், பூசணிக்காய், செளசெள, தர்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை உணவில் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். முறையான உறக்கம், உடற்பயிற்சி, உணவுப்பழக்கம் என ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மாறினால் முகப்பருவை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்."

உங்கள் கேள்விகளைஅனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-600 002.