சாலை விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, வாகனத்தை ஓட்டுவது சிலருக்கு த்ரில்லிங்கான அனுபவமாக இருக்கலாம்... ஆனால், விபத்தில் சிக்கும்போது அது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. சிக்னலை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது, அதிவேகத்தில் பயணிப்பது, மற்ற வாகன ஓட்டிகளிடம் சண்டைப்போடுவது போன்ற நிகழ்வுகளை தினமும் சாலையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இத்தகைய சாலை அத்துமீறல்கள் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் நிகழ்கின்றன. சாலை அத்துமீறலுக்குக் காரணங்கள் என்னென்ன? சாலைப் பயணம் மிகவும் பாதுகாப்பாக இருக்க, நாம் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.

ரோட் ரேஜ்

சாலை விதியை மதித்துப் பயணித்தால் அனைவருக்கும் நல்லது. ஆனால், தன்னை யாரும் முந்திவிடக் கூடாது என்று வேகமாக ஓட்டுவது, யாராவது ஓவர்டேக் செய்துவிட்டால், அவர்களை மீண்டும் ஓவர்டேக் செய்யும் வரை விடாமல் துரத்துவது, சாலை விதிகளை மதிக்காமல் செல்வது உள்ளிட்டவை எல்லாம் சாலை அத்து மீறலாகக் கருதப்படுகிறது. இதையே ‘ரோட் ரேஜ்’ என்கிறோம். தற்போது, இந்தப் பிரச்னை வேகமாக அதிகரித்துவருகிறது. பல விபத்துகள், காயங்கள் சாலை நடத்தை மீறலால்தான் தூண்டப்படுகின்றன. வெறியால்தான் நிகழ்கின்றன. பெண்களைவிட ஆண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக உள்ளது. 18-40 வயது வரை உள்ளவர்களுக்கே இந்தப் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சாலை அத்துமீறல் அறிகுறிகள் என்னென்ன?

* சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்வது.

* குறிப்பிட்ட வேக அளவைத் தாண்டி அதிவேகத்தில் செல்வது.

* ஹாரனை அடித்துக்கொண்டே இருப்பது. முன்னால் இருப்பவர்களால் செல்ல முடியாது எனத் தெரிந்தும் காரணமின்றி ஹாரன் அடிப்பது.

* சாலையில் வரும் மற்ற ஓட்டுநர்களைப் பார்த்து காரணம் இல்லாமல் முறைப்பது, திட்டுவது.

* முன்னால் செல்லும் வாகன ஓட்டி மெதுவாகச் செல்வதாக நினைத்து, அடிக்கடி விளக்கை அடித்து சிக்னல் செய்வது.

* சாலையில் செல்பவர்களிடம் கோபத்துடன் கெட்ட வார்த்தைகளைப் பேசிச் சண்டையிடுவது.

மேற்சொன்ன ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்களில் அடிக்கடி ஈடுபடுவர்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கக்கூடும்.

மது அருந்தி இருந்தாலோ, வேறு ஏதேனும் போதைப் பொருள் உபயோகப்படுத்தி இருந்தாலோ தன்னிலை மறந்த நேரத்தில் சாலை நடத்தை மீறல் நிகழ்கிறது.

இது மனநோயா?

இதை மனநோய் என்று சொல்ல முடியாது. ஆனால், இதனால் பெரிய மனநலப் பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் சிறு சிறு ஆளுமை பாதிப்புகள் ஏற்படுகின்றன. சாலையில் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கு ஏற்ற வேகத்தில்தான் செல்வார்கள். அந்தப் புரிதல் இல்லாமல் அனைவரும் நம் வேகத்துக்கு ஏற்பச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த எண்ணம் இப்படியே தொடர்ந்தால், சாலையில் மட்டும் அல்லாமல் அனைத்து இடங்களிலும் தான் சொல்லும்படிதான் இருக்க வேண்டும் எனப் பிடிவாதம் அதிகரிக்கும். தான் இருப்பது போலத்தான் பிறரும் இருக்க வேண்டும் என எண்ணுவதும், அப்படி இருக்கத் தவறுகிறார்களைத் தாக்குவதிலும் ஈடுபட நேரிடும். இவையெல்லாம் கிளஸ்டர் பி (Cluster B) ஆளுமைக் கோளாறு எனப்படும்.

சாலை அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் பொதுவாக அமைதியாகவே இருப்பார்கள். ஆனால், சாலையில் செல்லும்போது வெடித்துச் சிதறுவது போல கோபம் கொள்கிறார்கள். இது பயணம் முடிந்ததும் சில நிமிடங்களில் சரியாகிவிடுகிறது. சில விநாடிகள் கோபப்பட்டாலும் சிலர் பிறகு அதைப்பற்றி யோசித்து பிறகு வருத்தம்கொள்வார்கள். இதை, ‘டிஸ்ரப்டிவ் இம்பல்சிவ் கன்ட்ரோல் அண்டு கான்டக்ட் டிஸ்ஆர்டர்’ (Disruptive Impulse Control And Conduct Disorder) என்பார்கள்.

மூட் டிஸ்ஆர்டர் பிரச்னை உள்ளவர்கள், அசாதாரண மனநிலையின் காரணமாக வாகனத்தில் வேகமாகப் பயணம் செய்வதை விரும்புவார்கள். இப்படி இவர்கள் பயணம் செய்யும்போது, சகபயணிகள் மெதுவாகச் செல்வதையும் சாலை நெரிசலையும் சகித்துக்கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள்.

சாலை நடத்தைமீறல் தீர்வு என்ன?

* மிகுந்த கோபத்திலோ மனஉளைச்சலிலோ சாலையில் செல்ல நேர்ந்தால், ஒரு சிறிய பிரேக் அடித்து, ஐந்து நிமிடங்கள் நிதானமாகிவிட்டுச் செல்லுங்கள். அந்த ஐந்து நிமிடத் தாமதம் ஒரு உயிரைக் காக்கும் என நினைத்துக்கொள்ளுங்கள்.

* நீண்ட நேரம் தூங்காமல் வாகனம் ஓட்டினால், சாலை ஓரமாக ஒரு அரை மணி நேரம் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லுங்கள்.

* பசியோடு வெளியில் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள். அது மிகமிக ஆபத்தானது. பசி இருந்தால் அதிகமாகக் கோபம் வருவது இயல்பு. பசித்தால் உடனே வாகனத்தை நிறுத்தி, சாப்பிட்டுவிட்டுச் செல்லவும்.

* கோபமோ எரிச்சலோ அதிகமாக வருகிறது என உணர்ந்தால், மூன்று முதல் ஐந்து முறை மூச்சை ஆழமாக இழுத்து விடவும். இது நம்மைச் சற்று நிதானமாக்கும்.

* எந்த இடத்துக்கும் அவசரமாக, கடைசி நேரத்தில் செல்லாமல் குறித்த நேரத்துக்குச் சற்று முன்பாகவே கிளம்புங்கள்.

* வேலை காரணமாகவோ, வீட்டுப் பிரச்னை காரணமாகவோ ஏற்படும் மனஉளைச்சலோடு சாலையில் ஏற்படும் நெரிசலால், எரிச்சல் அடைந்து தன்னை மீறி சக பயணிகளிடமோ, வாகன ஓட்டுநர்களிடமோ அந்தக் கோபத்தைக் காண்பிப்பது சரியா என ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள்.

* அருகில் இருக்கும் வேறு ஓட்டுநரோ பயணியோ ஏதேனும் கோபமாக பேசும்போது அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். அவருடைய கண்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* அதிகமாக இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என்றால் காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரப்பி (Cognitive behavioral therapy) எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதன்மூலம், எதனால் நாம் அதிகமாகக் கோபம் கொள்கிறோம் என அறிந்துகொள்ள முடியும்.

மேனியா, ஆளுமைக் கோளாறு என ஒவ்வொரு மூலக் காரணத்துக்கும் ஒவ்வொரு சிகிச்சைமுறை இருக்கிறது. அந்த சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.

- ந.ஆசிபா பாத்திமா பாவா

இதயத்தையும் பாதிக்கலாம்...

ஆர்.ஸ்ரீநிவாசன் இதய நோய் மருத்துவர்

சாலை நடத்தை மீறல், கோபம் என்பது சாலைகளில் வாகனங்கள் ஓட்டும்போது மட்டும் ஏற்படுவது இல்லை. கடைகளில் பொருட்கள் வாங்கும்போதும், கூட்ட நெரிசலில் தண்ணீர் பிடிக்கும்போதும், திருவிழாக் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும் ஏற்படும் கோபம், எரிச்சல் உணர்வுகள்கூட இந்தப் பிரச்னையின் அறிகுறிகள்தான். பொதுவாக, இப்படி அடிக்கடி கோபப்படுவதால், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படுகிறது. ரத்த ஓட்டம், இதயம் பாதிக்கப்படுகிறது. ஏற்கெனவே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு சாலை நடத்தை மீறல் பிரச்னை இருந்தால், அதீத படபடப்பிலும் கோபத்திலும் ரத்த அழுத்தம் அதிகரித்து, மாரடைப்புகூட ஏற்படக்கூடும். எனவே, தொடக்கநிலையிலேயே பிரச்னையைக் கண்டறித்து கவுன்சலிங் பெற்றுக்கொள்வது நல்லது.