Published:Updated:

``நம்ம உடம்பு மேல நாம நம்பிக்கை வைக்கலைனா யாரு வைப்பாங்க?’’ - நடிகர் பிலி முரளி #FitnessTips

``நம்ம உடம்பு மேல நாம நம்பிக்கை வைக்கலைனா யாரு வைப்பாங்க?’’ - நடிகர் பிலி முரளி #FitnessTips
``நம்ம உடம்பு மேல நாம நம்பிக்கை வைக்கலைனா யாரு வைப்பாங்க?’’ - நடிகர் பிலி முரளி #FitnessTips

``உடம்பு சொல்றதைக் கேட்கணும்’’ - இதுதான் பிலி முரளி ஃபிட்னெஸுக்குக் கொடுக்கும் அடிப்படை.

பிலி  முரளி... தமிழ், தெலுங்குப் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வளர்ந்துவருபவர். அண்மையில் வெளியாகியிருக்கும் `டிக்: டிக்: டிக்' படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. `கோலமாவு கோகிலா' உள்பட பத்துப் படங்களில் நடித்திருக்கிறார். பிலி முரளி, தன் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் குறித்து விவரிக்கிறார் இங்கே...

``சுவீடன் தலைநகரம் ஸ்டாக்ஹோம்லதான் ரொம்ப வருஷம் இருந்தேன். அங்கே ஒரு நிதி நிறுவனத்துல வேலை பார்த்தேன். வெளிநாட்டுல இருந்தாலும், நான் ரொம்பவும் விரும்பிச் சாப்பிடுறது இந்திய உணவு வகைகளைத்தாம். முக்கியமா இயற்கை விவசாய முறையில விளைவிக்கப்பட்ட உணவுகளைத்தாம் (ஆர்கானிக் ஃபுட்ஸ்தான்) சாப்பிடுவேன். 

வெளிநாட்டுல இருக்குறவங்களுக்கு ஆர்கானிக் ஃபுட்ஸ் மேல தனி மரியாதை இருக்கு. ஃபுட் பாக்கெட்டுலயே அதைக் குறிச்சிருப்பாங்க. அங்கே இருக்குற லேமேன்கூட ஆர்கானிக் ஃபுட்ஸைத்தான் அடையாளம் பார்த்து வாங்குவாங்க. 

உடம்புக்குச் சரியில்லைனா உடனே டாக்டர்கிட்ட ஓடிப்போய் ஊசியைப் போட்டுக்கறது, மருந்து மாத்திரை எடுத்துக்கறது... இதையெல்லாம் செய்ய மாட்டாங்க. உடம்பை அதன் போக்கிலேயே இருக்கவிட்டு இயற்கை முறையிலான உணவுகளை மட்டும்தாம்  சாப்பிடுவாங்க.  இயற்கை எப்படித் தன்னைத்தானே சரி பண்ணிக்குதோ, அதே மாதிரி நம்ம உடம்பும் தன்னைத்தானே சரி பண்ணிக்கும். அதுக்குச் சில நாள்களாகும். ஆனா, நம்ம ஆரோக்கியத்தைப் பத்திரப்படுத்தும். பக்கவிளைவுங்கிற பிரச்னையும் கிடையாது.  

இந்தியாவுல, குறிப்பா ஹைதராபாத், சென்னைப் போன்ற நகரங்கள்ல ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் பெருகிக்கிடக்குது. நம்ம இளைஞர்களுக்கும் ஒரு தவறான நம்பிக்கை இருக்கு... நான்-வெஜ் உணவுலதான் சக்தி அதிகமிருக்குனு நினைக்கிறாங்க. உடம்பை ஃபிட்னெஸாவெச்சுக்கவும், பாடி பில்டரா ஆகுறதுக்கும் இறைச்சி உணவுதான் சாப்பிடணும்னு நினைக்கிறாங்க. அது ரொம்பத் தப்புனு நான் நினைக்கிறேன். 

நான் இயற்கை முறையில விளைவிக்கப்பட்ட காய்கறிங்க, பழங்கள், சிறுதானிய வகைகளைத்தாம் சாப்பிடுறேன். தினை, குதிரைவாலி ரெண்டும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னோட எனர்ஜி லெவல் நல்லா இருக்குறதுக்குத் தினை உணவுகள்தாம் முக்கியக் காரணம்னு நினைக்கிறேன். அதுக்காக நான்-வெஜ்ஜே சாப்பிட மாட்டேன்னு சொல்லலை. ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி, கடல் உணவுகள் சாப்பிடலாம். ஆனா, பெரும்பாலும் செயற்கையா ஊசி போட்டு வளர்க்கப்படும் கோழி இறைச்சியைச் சாப்பிட மாட்டேன். எவ்வளவு பெரிய நாகரிகமான நகரத்துல இருந்தாலும், கன்ட்ரீ சைடு லைஃப்தான் நம்ம உடம்புக்கு நல்லது. 

நான்-வெஜ் சாப்பிடுறப்போ அதிக அளவுல கேரட், வெள்ளரி, ஆனியன் இதெல்லாம் கலந்த சாலட் வகைகளை அல்லது இவற்றைப் பச்சையாக உப்பு மிளகுத்தூளுடன் சாப்பிடுவேன். அப்போதான் நான்- வெஜ்ல இருக்கிற சத்துகளை நம்ம உடம்பு ஏத்துகிற மாதிரி பச்சைக் காய்கறிங்க மாத்தும். எப்போ நான்-வெஜ் சாப்பிட்டாலும், மறக்காம வெந்நீர் குடிச்சிடுவேன். அது எப்பேர்ப்பட்ட கடினமான உணவையும் செரிமானமடையச் செஞ்சுடும். இங்கே இருக்குற இளைஞர்கள்ல நிறைய பேர் ராத்தியில  ஜங் ஃபுட் அயிட்டத்தை, அதுவும் லேட் நைட்ல சாப்பிடுறாங்க. மார்னிங் பிரேக் ஃபாஸ்ட்டை ஸ்கிப் பண்ணுறாங்க. மதியம் பிரியாணி ஆர்டர் பண்ணிச் சாப்பிடுறாங்க. இதெல்லாம் ரொம்ப ரொம்பத்  தப்பு. 

உடம்புகூட எப்பவும் பேசிக்கிட்ட இருக்கணும். அது என்ன சொல்லுதோ அதைக் கேட்கணும். நான் ரெகுலரா ஜிம்முக்குப் போவேன்னு சொல்ல முடியாது. ஆனா, வாரத்துல நாலு நாள் கண்டிப்பாப் போயிடுவேன். ரெகுலராப் போக முடியலைனு போகாம இருக்கக் கூடாது. எப்பப்போ முடியுதோ அப்போல்லாம் போவேன். ஜிம்முக்குப் போக முடியலைனா ஃபாஸ்ட்டா நடைப்பயிற்சி செஞ்சிடுவேன்'' என்றவரிடம், ``உங்கள் வயது என்ன?’’ என்று கேட்டோம். 

''வயசுங்கிறது, அவங்கவங்க மனசு நினைக்கிறதைப் பொறுத்த விஷயம். வயசாயிடுச்சுனு நினைச்சா வயசாகிடும். இளமையா இருக்கோம்னு நினைச்சா இளமையாவே இருப்போம். இது முழுக்க முழுக்க ஒருத்தரோட மனசைப் பொறுத்தது. ஐ ஆல்வேஸ் ஃபீல் யங். அதனாலதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனா, டைரக்டர் எத்தனை டேக் கேட்டாலும், எந்தக் குழப்பமான சிந்தனைக்கும் இடம் கொடுக்காம அவர் திருப்தியடையும்வரை நடிச்சுக் கொடுக்கிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயம், எல்லாத்துலயும் பாசிட்டிவான அப்ரோச் ரொம்ப முக்கியம். அதுதான் நம்ம மனசு உடம்பு ரெண்டையும் தீர்மானிக்குது. நம்ம உடம்பு மேல நாம நம்பிக்கை வைக்கலைனா வேற யார் வைக்கப்போறாங்க? இதுதான் என்னோட ஃபிட்னெஸுக்குக் காரணம். இதுல ரகசியமெல்லாம் ஒண்ணும் கிடையாது'' என்கிறார் தன் அகண்ட மார்பின் திரண்ட தோளுக்கு, தசைகளைக் கொண்டு நிறுத்தியவாறே!  

அடுத்த கட்டுரைக்கு