Published:Updated:

ஹேப்பி ரீப்ளேஸ்மென்ட் தெரபி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஹேப்பி ரீப்ளேஸ்மென்ட் தெரபி!
ஹேப்பி ரீப்ளேஸ்மென்ட் தெரபி!

ஹெல்த்கமலா செலவராஜ், மகப்பேறு மருத்துவர்

பிரீமியம் ஸ்டோரி

மாதவிலக்கு நிற்கும் நேரத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய உடலில் இனம் புரியாத திடீர் மாற்றங்களை உணர்கிறார்கள். இம்மாற்றத்துக்கு ஹார்மோன் இம்பேலன்ஸ் என்பது மிகப்பெரிய காரணியாக அமைகிறது. மெனோபாஸ் காலத்தை மிக எளிதாகக் கடக்க ‘ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி’ உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதென்ன ‘ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி? யாரெல்லாம் இதை எடுத்துக் கொள்ளலாம்? விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.

‘‘உண்மையைச் சொன்னால் ஒரு மருத்துவராக இருந்தும், மெனோபாஸ் காலத்தில் இருந்து மீண்டு வர எனக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டன. நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உடல் படபடப்பு, வியர்வை வந்து நிலைகுலையச் செய்திருக்கிறது.

ஹேப்பி ரீப்ளேஸ்மென்ட் தெரபி!

ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய வாழ்நாளில் மெனோபாஸ் என்னும் கால கட்டத்தைக் கடந்தாக வேண்டும். இயற்கையாக நடைபெறும் உடல்நல மாற்றங்களைக் கையாளவே வந்திருக்கிறது ‘ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி’.

மெனோபாஸ் கட்டத்தை அடையும்போது மனத் தடுமாற்றம், அதிகப்படியான கோபம், காரணமற்ற அழுகை, எரிச்சல், படபடப்பு, பிறப்புறுப்பில் வறட்சி மற்றும் தாங்க முடியா அரிப்பு, முதுகுவலி, முட்டி வலி என்று தன்னை மீறி ஏதோ ஒன்று தன் உடம்பை ஆட்கொள்வதாகப் பல பெண்கள் குழம்பிப் போவார்கள். இதற்கெல்லாம் காரணம் ஹார்மோன்களின் சமநிலையின்மை. இதைப் புரிந்து கொள்ளாத குடும்பத்தினரால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் பெண்கள். இதைத் தடுக்கவே ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி வந்திருக்கிறது.

ஹேப்பி ரீப்ளேஸ்மென்ட் தெரபி!மெனோபாஸுக்கு முந்தைய சிகிச்சை முறைகள்

ஓ.சி பில் (Oral Contraceptive Pill) என்று சொல்லக்கூடியக் கருத்தடை மாத்திரை, மாதவிடாய் நின்ற அல்லது நிற்கப் போகும் பெண்களுக்கு மிகச் சிறந்த சிகிச்சை முறையாகும். இந்தக் கருத்தடை மாத்திரை, அதிக உதிரப் போக்குக்குத் தீர்வாக அமையும்.

மெனோபாஸின் போது எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகள்


மாதவிடாய் நின்ற அல்லது நிற்கப்போகும் பெண்களுக்குத் தேவையான ஈஸ்ட்ரோஜென் இழப்பை ஈடுகட்ட வந்திருக்கிறது ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி. இது மாத்திரை, க்ரீம் மற்றும் ஜெல் வடிவில் கிடைக்கிறது. மருத்துவரின் உரிய ஆலோசனைக்குப் பிறகு எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், மாதவிடாய் நின்ற அல்லது நிற்கப் போகும் பெண்களின் பிறப்புறுப்புக் குழாய் வறண்டு காணப்படும். அரிப்புத் தன்மையும் ஏற்படும். அதற்கு, வெஜைனல் ஈஸ்ட்ரோஜென் (vaginal estrogen) என்று சொல்லக்கூடிய மாத்திரைகளையோ அல்லது க்ரீமையோ உபயோகப்படுத்தலாம்.

மெனோபாஸ் நேரத்தில் உடலில் ஏற்படும் படபடப்பு, எரிச்சல், கோபம், அதிக வியர்வை, தூக்கமின்மை போன்ற மன அழுத்தப் பிரச்னைகளை சமாளிக்க, ஆன்டி-டிப்ரெஸன்ட் (Antidepressant) என்று சொல்லக்கூடிய மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள்.

ஈஸ்ட்ரோஜென் அதிகம் உள்ள காய்கறிகளான சோயா பீன்ஸ், முழுப்பயறு வகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகள், பழ வகைகளை அதிகமாக உட்கொள்ளவேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள சிகிச்சை முறைகளை, கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும்.

 ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, மெனோபாஸ் அடைந்த பெண்களின் எலும்புகளை உறுதிப்படுத்துவதோடு, மூட்டு வலியிலிருந்தும் விடுவிக்கும். உடல் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும். சிலருக்குத் தெரபி எடுத்துக் கொள்ளும் காலம் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வரை கூட நீளலாம். அது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது. மெனோபாஸ் காலத்தில் மிகச் சாதாரண, இயல்பான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு இச்சிகிச்சை தேவையில்லை. மொத்தத்தில் குடும்பத்தின் ஆதரவு இருந்தால் பெண்களுக்கு மெனோபாஸ் என்பது அத்தனை சிரமமான ஒன்றாக இருக்காது.”

- வே.கிருஷ்ணவேணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு