Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 2

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 2
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 2

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 2

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 2
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 2
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 2

டல்நலம் இல்லாமல் இருக்கும் ஒரு இந்தியக் குடிமகன், அதற்கு சிகிச்சை பெற்றுக்கொள்வது அவனுடைய அடிப்படை உரிமை இல்லையா? அதைச் செய்ய வேண்டியது அரசின் கடமை இல்லையா? தனியார் மருத்துவமனைகளின் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து சிகிச்சை பெறும் வசதி, இந்த நாட்டின் பெரும்பாலான அடித்தட்டு மக்களுக்கு இல்லை. நெரிசலான அரசு மருத்துவமனைகளில் நீண்ட நேரம் வரிசையில் நின்று சிகிச்சைக்காகவும் மருந்துகளுக்காகவும் யாசகம் செய்வதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழியா? மக்கள் அனைவரும் மருத்துவ நலவாழ்வு பெறுவது நமது அரசியல் சாசனம் தந்துள்ள அடிப்படை உரிமை. 2002-ம் ஆண்டு வெளியான மத்திய அரசின் நலவாழ்வுத் திட்டம் இதை உறுதி செய்தது. ஆனால், ‘தேசிய நலவாழ்வுக் கொள்கை - 2017’, அந்த அடிப்படை உரிமையை சத்தமின்றி ஒதுக்கிவிட்டது.

நோய்ச்சுமை நிறைந்த நாடுகள் பற்றி உலக அளவில் ஒரு கணக்கெடுப்பு நடந்தது. இதில், உலகின் 188 நாடுகளில் 143-வது இடத்தில் மிகுந்த நோய்ச்சுமை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. காசநோய், டெங்கு, சிக்குன் குன்யா போன்ற தொற்றுநோய்களும்... சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களும் மக்களுக்கு பெரும் சுமையைத் தந்திருக்கின்றன. இதுபோலவே பிரசவ மரணம், தாய் மரணம், பச்சிளம் குழந்தைகள் மரணம், சத்துணவுப் பற்றாக்குறை போன்ற ஆரோக்கிய அளவுகோல்களில், வல்லரசு ஆசையில் உள்ள நாம், பெருமைப்படும் இடத்தில் இல்லை. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் நம்மைவிட மேலான நிலையில் உள்ளன.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த அவமானத்தைத் துடைக்கும் வகையில் மத்திய அரசு, தனது தேசிய நலவாழ்வுக் கொள்கையை வெளியிட்டுள்ளது. இதில் பல பாராட்டத்தக்க, முற்போக்கான லட்சியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘வரும் 2030-ம் ஆண்டில் இந்திய மக்கள் அனைவருக்கும் சமத்துவமான முழுமையான நலவாழ்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்’ என்கிறது தேசிய நலவாழ்வுக் கொள்கை. அதற்கான வழிமுறைகளையும் தெளிவாக அறிவித்துள்ளது. பொது சுகாதார சேவையை வலிமைப் படுத்துவது... ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறைகளை ஆரம்பச் சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றில் இடம்பெறச் செய்வது... மருத்துவத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்துவது... மூன்றில் இரண்டு பங்கு நிதியை கிராமப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு வழங்குவது...  குடும்ப மருத்துவ அட்டை தருவது என பல விஷயங்களை இந்தக் கொள்கை உறுதி செய்கிறது.

மற்ற நாடுகளின் சுகாதாரத் திட்டங்களோடு ஒப்பிட்டு, பல யோசனைகளையும் இதில் தந்திருக்கிறார்கள். கிராமப்புற மருத்துவ மனைகளில் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளை தாமதமின்றி மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்புவது... மோசமான நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்துள்ள நிலையில் உள்ளோருக்குச் சிறப்பு மருத்துவர்களின் உதவிகளை தனியார் மருத்துவமனைகள் மூலம் பெற அனுமதிப்பது... இப்படி அரசுடன் தனியார் துறை இணைவதற்கான பாதையை இந்தக் கொள்கை விசாலமாகத் திறந்துவிட்டிருக்கிறது.

சுகாதார இலக்குகளை மாநில அரசோ, மத்திய அரசோ தனித்து சாதித்து விட முடியாது. எனவே அரசுடன் சமூகமும் ஒத்துழைக்க வேண்டும். மருத்துவத்துறைகள் சார்ந்த அனைவரின் பங்கேற்பும் அவசியம். ‘தனியார் மருத்துவமனைகளும் சேவை நிறுவனங்களும் இதில் அரசோடு இணைய வேண்டும்’ என்கிறது மத்திய அரசு. ஆனால், எந்த நிதி நெருக்கடியையும் சந்திக்காமல் தரமான சிகிச்சையை ஏழைகளுக்கு அளிக்க முடிகிற நிலையில் இங்கு தனியார் மருத்துவச் சேவை இருக்கிறதா? அல்லது, சேவை மனப்பான்மையுடன் வரும் மனிதநேயமுள்ள மருத்துவ மனைகளுக்கு அரசு தேவையான உதவிகளைச் செய்து தருகிறதா? இந்த நிலை மாற வேண்டும்.

70 சதவிகித இந்தியர்கள், தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற முடியாத ஏழ்மையில் இருக்கிறார்கள். இந்தியா தனது பட்ஜெட்டில் வெறும் 1.15 சதவிகிதம் தொகையையே மருத்துவத்துக்குச் செலவிடுகிறது. மருத்துவத்துக்கு அரசு நிதி சுருங்குவது, மக்களுக்குத் தேவையற்ற சுமையைத் தருகிறது. ‘மருத்துவ சிகிச்சைக்குச் செலவழிப்பதாலேயே இந்தியாவில் சுமார் ஏழு சதவிகித மக்கள் வறுமையில் தள்ளப்படுகிறார்கள்’ என்கிறது மத்திய அரசின் நேஷனல் சாம்பிள் சர்வே அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்று. அரசு தரும் புள்ளிவிவரமே இப்படி அதிர்ச்சி தருவதாக உள்ளது. 

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 2

மருத்துவச் செலவுகளில் பெரியது, மருந்துகளை வாங்கும் செலவுதான். இன்சூரன்ஸ், கம்பெனி மூலம் கிடைக்கும் மருத்துவ வசதி போன்றவை இல்லாமல், தனிப்பட்ட முறையில் இந்தியர்கள் செய்யும் மருத்துவச் செலவுகளில் 71 சதவிகிதத் தொகை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கே செலவிடப்படுகிறது.

மத்திய அரசின் நலவாழ்வுக் கொள்கை, எல்லோருக்கும் அடிப்படையான மருந்துகள் மற்றும் நோய்ப் பரிசோதனை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யப் போகிறது. அடிப்படை மருந்துகள் இலவசமாகவும், கட்டுப்படுத்தப்பட்ட மலிவு விலையில் கிடைக்கவும் நோய் கண்டுபிடிப்பு வசதிகள் உடனடியாகக் கிடைக்கவும் வகை செய்யப்பட வேண்டும். நோய் முற்றிய இரண்டாம் கட்ட நோயாளிகள் இறுதி நிலை நோயாளிகளுக்கான மருத்துவம் கிடைக்கச் செய்ய வேண்டும். நமது அரசின் மருத்துவ நிதி ஒதுக்கீடு, நம்மைப் போன்ற வளரும் நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, கானா போன்றவற்றுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. ஆனால், உலக அளவில் வாங்கும் திறனில் 5வது பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. இது மிகப்பெரிய நகை முரணாகும்.

இப்போது கொள்கைத் திட்டம் போடப்பட்டுள்ளது. அரசும் தயார்; அதிகாரிகளும் தயார்; நிதியும் கூட தயாராக இருக்கக் கூடும். ஆனால், அது மக்களைச் சென்றடைய வேண்டும். அதற்கான விழிப்புணர்வும், கண்காணிப்பும் மக்களிடம் தேவை. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும். இந்தக் கொள்கைத் திட்டம் செயல் வடிவம் பெற மக்களின் நிர்பந்தம் தேவை. அது இல்லாதபோது, இது வெறும் காகிதக் கோப்புதான். நாம் விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்குப்பின், நமக்கு நலவாழ்வு தர அரசு உறுதி கூறியுள்ளது.

நாம் அதைச் செயல்வடிவம் பெறச் செய்வோமா?

படங்கள்: தி.விஜய்

(நலம் அறிவோம்)