Published:Updated:

எலும்பின் கதை! - 8 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எலும்பின் கதை! - 8 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0
எலும்பின் கதை! - 8 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

ஹெல்த்செந்தில்வேலன் எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

பிரீமியம் ஸ்டோரி

டுப்பு எலும்புத் தேய்மானம் பற்றிச் சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் முழங்கால் மூட்டு எலும்புத் தேய்மானம் (Knee Joint Arthritis) பற்றிப் பார்ப்போம்.

எலும்பின் கதை! - 8 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

முழங்கால் மூட்டு அமைப்பு (Knee Anatomy)

முழங்கால் மூட்டு என்பது ஒரு கதவைத் திறந்து மூடுவதுபோன்ற அமைப்பில் (Hinge joint) இருக்கும். தொடை எலும்பின் கீழ்ப்பகுதி, கால் எலும்பின் மேற்பகுதி, இவை இரண்டுக்கும் மேலாக உள்ள பகுதி (Petella) ஆகிய மூன்று எலும்புகளும் இணைந்த பகுதிதான் முழங்கால் மூட்டு அமைப்பு எனப்படுகிறது. மூட்டு அமைப்பின் உள்ளே கார்டிலேஜ் (Cartilage) எனப்படும் குருத்தெலும்பு உள்ளது. குருத்தெலும்பு என்பது மிகவும் மென்மையான, வழுவழுப்பான பகுதியாகும். மூட்டின் அமைப்பில் தேய்மானம் ஏற்படாமல் இருக்க, குருத்தெலும்பின் பங்கு மிகவும் முக்கியம். மூட்டில் ஏற்படக்கூடிய அதிகப் பளு மற்றும் உராய்வை (Friction) குருத்தெலும்பு குறைக்கிறது. இதனால்தான் நாம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடக்க, ஓட, குதிக்க முடிகிறது. மூட்டு எலும்புத் தேய்மானம் ஏற்படும்போது, இந்தக் குருத்தெலும்பு பாதிக்கப்படுகிறது.

இதுதவிர மூட்டில் சைனோவியல் ஃப்ளூயிட் (Synovial Fluid) என்ற நீர் இருக்கிறது. இது கார் என்ஜின் ஆயிலைப் போன்று செயல்பட்டு, மூட்டில் ஏற்படும் (Friction) உராய்வைக் குறைக்கிறது. மூட்டு எலும்புத் தேய்மானம் ஏற்படும்போது, இந்த நீரின் அளவும் மிகவும் குறைந்து விடுகிறது.

காரணங்கள்


* அதிக உடல் பருமன்.

* சிறு வயதில் மூட்டில் ஏற்பட்ட முறிவு.

* மரபியல் காரணம்.

* உடல் வாத நோய்கள் (Rheumatoid arthritis).

அறிகுறிகள்

முழங்கால் மூட்டில் தேய்மானம் ஏற்பட்டவர்களுக்குப் படிக்கட்டு ஏறுவதில் சிரமம், அதிகத் தூரம் நடப்பதில் சிரமம், தூங்குவதில் கஷ்டம் போன்ற அறிகுறிகள் தொடக்கத்தில் தென்படும்.

எலும்பின் கதை! - 8 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

எப்படி நிகழ்கிறது?

பொதுவாக மூட்டின் உள்பகுதிக்கு நாம் அதிகப் பளுவைக் கொடுப்பதால், குருத்தெலும்பு பகுதியில்தான் முதலில் தேய்மானம் ஏற்படுகிறது. குருத்தெலும்பு தொடர்ச்சியாகத் தேய்வதன்மூலம் அதற்கு அடியில் உள்ள எலும்பு வெளிப்பட்டு ஒரு எலும்புடன் மற்றொரு எலும்பு உராய ஆரம்பிக்கிறது. இதனால் நடக்கும்போது சத்தம்வர ஆரம்பிக்கிறது. மூட்டின் உள்பக்கத்தில் வலி ஏற்படுகிறது. தேய்மானம் மோசமான நிலையை எட்டும்போது, சிறிது தூரம் நடப்பதற்கே கடினமாக இருக்கும். முழங்கால் மூட்டில் அதிக வளைவு ஏற்படும்.

முழுமையான தீர்வு உண்டா?

கார்டிலேஜ் எனப்படும் குருத்தெலும்புப் பகுதி ஒருமுறை பாதிக்கப்பட்டுவிட்டால் அது மீண்டும் வளராது. அதேவேளையில், குருத்தெலும்பை மீண்டும் வளரச்செய்யும் மருத்துவமுறைகள் இதுவரை கண்டறியப் படவில்லை. எனவே, முழங்கால் மூட்டுவலியின் பாதிப்புகளைத்தான் குறைக்கமுடியும்; முழுமையாகக் குணப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறைவு.

முதல்கட்ட சிகிச்சை


முழங்கால் மூட்டில் வலி ஏற்பட்டதும் எலும்பியல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியமாகும். அவர் பரிசோதித்தபிறகு எக்ஸ்ரே (X-ray) எடுக்கப் பரிந்துரை செய்வார். அதன்மூலம் எந்த அளவுக்கு மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது என்று கண்டறிய முடியும். பொதுவாக, மூட்டுத் தேய்மானத்துக்கு உடல்பருமன் காரணமாக இருக்கும்பட்சத்தில் எடை குறைப்புக்கான வழிமுறைகள் பரிந்துரைக்கப் படும். முதலில் இயன்முறை பயிற்சிகள் (Physiotherapy) அளிக்கப்படும். இதன்மூலம் மூட்டினைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுப்பெறும். சைனோவியல் ஃப்ளூயிட்டில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டைச் சரிசெய்ய சைனோவியல் நீரை மூட்டில் செயற்கையாகச் செலுத்தும் ஊசி போட்டுக்கொள்ளலாம். இது தேய்மானத்தின் ஆரம்பக் காலங்களில் வலியைக் குறைக்க உதவும். இதைத் தவிர வலி நிவாரணிகளும் பரிந்துரைக்கப் படும். வலி நிவாரணிகள், சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. மிகக் கடுமையான வலி ஏற்படும்பட்சத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை வரும்.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு