Published:Updated:

சிக்ஸ் பேக் - சைஸ் ஜீரோ!

சிக்ஸ் பேக் - சைஸ் ஜீரோ!
பிரீமியம் ஸ்டோரி
சிக்ஸ் பேக் - சைஸ் ஜீரோ!

அழகுக்குப் பின்னே ஆபத்து!

சிக்ஸ் பேக் - சைஸ் ஜீரோ!

அழகுக்குப் பின்னே ஆபத்து!

Published:Updated:
சிக்ஸ் பேக் - சைஸ் ஜீரோ!
பிரீமியம் ஸ்டோரி
சிக்ஸ் பேக் - சைஸ் ஜீரோ!

`சிக்ஸ் பேக்’... ஹாலிவுட்டின் அன்றைய ஹீரோ அர்னால்ட் தொடங்கி நம்ம ஊரின் இன்றைய ஹீரோ அஜீத் உள்ளிட்டோரை உதாரணமாகச் சொல்லலாம். இன்றைய பரபரப்பான உலகில் பெரும்பாலானோர் தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும்  வைத்திருக்க முனைப்புடன் செயல்படுகிறார்கள். வாக்கிங், ஜாகிங், யோகா, உணவுப் பழக்கங்கள் என உடல் ஆரோக்கியத்துக்குப் பல வழிமுறைகள் இருந்தாலும் சாமானியர்கள் மத்தியிலும்கூட `சிக்ஸ் பேக்’, சைஸ் ஜீரோ’ மோகம் அதிகரித்து வருகிறது. இந்த மாற்றம் சரிதானா? இதிலுள்ள நல்லது கெட்டது பற்றி அலசுவோம்...

சிக்ஸ் பேக் - சைஸ் ஜீரோ!

`சிக்ஸ் பேக்’

நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் மூலம் உடலில் சேரும் தேவையில்லாத கொழுப்புகள் நமது அன்றாடச் செயல்பாடுகளின் மூலம் பெரும்பாலும் கரைந்து விடுகின்றன. ஆனால், கரையாத சில கொழுப்புகள் உடலில் ஆங்காங்கே தங்கிவிடும். அவ்வாறு தங்கும் கொழுப்புகளை முறையான பயிற்சியின் மூலம் தசைகளாக மாற்றுவதுதான் `சிக்ஸ் பேக்’.

சிக்ஸ் பேக் - சைஸ் ஜீரோ!பயிற்சிகள்

உடலிலுள்ள தேவையில்லாத கொழுப்பைக் கரைத்து `சிக்ஸ் பேக்’ உடலமைப்பைக் கொண்டுவர, வியர்வை உடலை விட்டு வெளியேற்ற, கடினமான பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால் தோலில் உள்ள செல்லுலாய்ட் கொழுப்பு வேகமாகச் சிதையும். வெய்ட் லிஃப்டிங் போன்ற பயிற்சிகள், உடல் கட்டமைப்பை வலுப்படுத்தும். இத்தகைய பயிற்சிகள் மூலம் கொழுப்பு கரைந்தவுடன் சிக்ஸ்பேக் வயிற்றுடன் உடலைக் கட்டமைக்கத் தசைகளை வலுப்பெறச் செய்ய வேண்டும். இது மட்டுமல்லாமல் சைக்கிளிங், ஸ்விம்மிங் உள்ளிட்ட கூடுதல் பயிற்சிகளும் அளிக்கப்படும். `சிக்ஸ் பேக்’ உடலமைப்பு கொண்டுவர குறைந்தபட்சம் ஆறு மாதம் தேவைப்படும். உணவு உண்பதில் கண்டிப்பான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும் என்பதால் 18 வயதுக்கு மேல் `சிக்ஸ் பேக்’ முயற்சி செய்யலாம்.

பக்க விளைவுகள்

பயிற்சிகள் இவ்வாறு இருக்க, சரியான ஆலோசனை இல்லாமல் செய்யும் முறையற்ற பயிற்சிகளால் குடலிறக்கம், வயிற்றுவலி, உடல்வலி போன்றவை வர வாய்ப்புள்ளது. சிலர் ஸ்டீராய்டு போன்ற ஊக்க மருந்துகளை எடுத்துக்கொள்வதால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள், உடல் எடை கூடுதல், ஆண்மைக் குறைவு போன்ற கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும்.`சிக்ஸ் பேக்’ ஆசாமிகள் உடலில் உள்ள கொழுப்பை 9 சதவிகிதமாகவும், நீரின் அளவை 40 சதவிதிகமாகவும் குறைக்க வேண்டியது அவசியமாகும். புரதச்சத்தை மட்டுமே அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் கல்லீரலும் சிறுநீரகமும் கடும் பாதிப்புக்குள்ளா வதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், அதிக அளவிலான உடற்பயிற்சிகளைச் செய்யும்போது உடலின் வெப்பம் அதிகரிக்கும்.

`சைஸ் ஜீரோ’

`சைஸ் ஜீரோ’ என்பது உடலில் உள்ள கொழுப்பை பெருமளவு குறைத்து, உடலை அழகான வடிவத்துக்குக் கொண்டு வருவதாகும். இதில் அவர்களுக்கு வழக்கமான உணவு வகைகளைத் தவிர்த்து சூப், காய்கறிகள், ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். கார்டியோ ஆக்ட்டிவிட்டிஸ் எனப்படும் வாக்கிங், ஜாகிங், ஸ்விம்மிங் முதலான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் உடலிலுள்ள கொழுப்பு 18 சதவிகிதம் குறைவாகும்.

சிக்ஸ் பேக் - சைஸ் ஜீரோ!

பக்க விளைவுகள்

`சைஸ் ஜீரோ’ ஆவதற்கான பயிற்சிகளை மேற்கொள்வதன்மூலம் முடி உதிர்தல், மனஅழுத்தம், உடல் பலவீனமடைதல், ஒழுங்கற்ற மாதவிடாய், எலும்பு அடர்த்திக் குறைதல், கருத்தரிப்பதில் பிரச்னை, நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், ஹார்மோன் சுரப்பதில் கோளாறு, செக்ஸில் ஆர்வம் குறைதல் போன்ற பிரச்னைகள் எட்டிப் பார்க்கும்.

சிக்ஸ் பேக் - சைஸ் ஜீரோ!

மேலும் `இம்யூனிட்டி’ எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால் பல்வேறு நோய்களுக்கான நுழைவு வாசலாக அது அமையும். உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்க, காஸ்மெட்டிக் தொடர்பான ஹாஸ்பிடலை நாடிச் சென்று சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் இதில் உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- ச. ஆனந்தப்பிரியா

உணவுகள்

* `சிக்ஸ் பேக் கொண்டுவர வழக்கமான உணவு வகைகளைத் தவிர்த்து, கட்டுப்பாடான உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

காலை 6 மணி – டீ.

9 மணி – ஓட்ஸ் மற்றும் எட்டு முட்டைகளின் வெள்ளைக்கரு.

11 மணி – பப்பாளிப்பழம், சர்க்கரை இல்லா புரதச்சத்து நிறைந்த பானம்.

மதியம் 1 மணி – அரைக் கிலோ சிக்கன், எண்ணெய் சேர்க்காத கோதுமை ரொட்டி.

மாலை 5 மற்றும் 7.30 மணி – மீண்டும் புரதச்சத்துப் பானம்.

இரவு 9 மணி – 8 முட்டைகளின் வெள்ளைக்கரு, ஒரு ஆப்பிள்.

மேலும் மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச் சத்து அடங்கிய உணவுப்பொருட்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அத்துடன் தண்ணீரின் அளவை படிப்படியாகக் குறைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சர்க்கரை, உப்பு, தண்ணீர் மூன்றையும்  உடலைவிட்டு அறவே நீக்க வேண்டும்.