Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்
கன்சல்ட்டிங் ரூம்

குமார், மதுரை.

நான் அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்க வேண்டியுள்ளது. அப்படி அமர்வதால் தொடர்ந்து கால் ஆட்டும் பழக்கம் வந்துவிட்டது. இந்தப் பழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. இப்படி கால் ஆட்டும் பழக்கம் நல்லதா, கெட்டதா? இதை எப்படித் தவிர்க்கலாம்?

கன்சல்ட்டிங் ரூம்தமிழ்முத்து, பொது மருத்துவர், தர்மபுரி

அமர்ந்திருக்கும்போது கால்களை ஆட்டுவதென்பது ஒருவிதமான பழக்கம்தான். ஒரு வேலையைச் செய்யும்போது கவனம் வேறு திசையில் சிதறினால் இப்படிக் கால்களை ஆட்டும் பழக்கம் வந்துவிடும். மனஅழுத்தம், நிலைத்தன்மை (Stability) சரியாக இல்லாமல் போவது போன்றவை இதற்கான காரணங்கள். ஓர் அளவோடு இருக்கும்வரை இதனைக் கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆனால், அதிக நேரம் கால் ஆட்டினாலோ ஒரு கட்டத்தை மீறும்போதோ பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்.

இந்தப் பழக்கத்தை நிறுத்த, காலை 5.30 - 6.30 மணிக்குள்  நடைப்பயிற்சி செய்யலாம். இந்த நேரத்தில் ஆக்ஸிஜன் சீராகக் கிடைக்கும். கால் ஆட்டக்கூடாது என்று பேப்பரில் எழுதி, நீங்கள் உட்காரும் இடத்தில் ஒட்டி வையுங்கள். அதுபோல அருகில் உள்ள நண்பரிடமும் நீங்கள் கால் ஆட்டினால் கவனித்துச் சொல்லும்படி சொல்லுங்கள். நீங்களே முயற்சி செய்தால் நிச்சயம் இதை நிறுத்த முடியும். முடியாத தருணத்தில் மனநல மருத்துவரின் ஆலோசனை பெற்று, இதிலிருந்து திசைத் திருப்பும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஜெனிஃபர், ஓசூர்.

உடல் முழுவதையும் கவர் செய்யும்விதமாக உடைகள் போட்டாலும் கை மற்றும் கால், முட்டிகளில் கருமை படிகிறது. இப்படியான கை, கால்களில் உள்ள கறுப்பை இயற்கை முறையில் எப்படி நீக்கலாம்?

கன்சல்ட்டிங் ரூம்ஜெய வெங்கடேஷ்
, சித்த மருத்துவர், மதுரை

கை, கால் பகுதிகளில் அதிகளவு எண்ணெய்ப் பிசுக்கு சேர்வது, சூரியக்கதிர் படிவது உள்ளிட்ட காரணங்களால் கருமை படிகிறது. வைட்டமின் இ அதிகம் உள்ள வெந்தயம், கொத்தமல்லி, சீரகம், புதினா, நல்லெண்ணெய் போன்றவற்றை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொண்டால் கருமை படிவதைத் தவிர்க்க முடியும். செஞ்சந்தனத்தை உரசி, அதனைப் பன்னீருடன் கலந்து 20 - 40 நாள்கள் வரை தொடர்ந்து பூசி வர கருமை நிறம் மறையும். மேலும் சீமை அகத்தி, அறுகம்புல், குப்பைமேனி, பூவரசம்பட்டை போன்றவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து 20 - 40 நாள்கள் வரை கருமை உள்ள இடங்களில் பூசி வர அந்த நிறம் விரைவில் மறையும். கற்றாழைச் சதைப்பகுதியை எடுத்து கை, கால் மற்றும் முட்டிப் பகுதிகளில் தேய்த்து வர கருமை நிறம் மறையும்.

ராணி, மேடவாக்கம்.

கன்சல்ட்டிங் ரூம்

எங்களுடைய இருப்பிடப் பகுதியில் நிலத்தடி நீர் மிகவும் உப்பாக இருக்கிறது. எங்களுக்குக் கேன் தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தும் அளவுக்கு வசதி இல்லை. இந்த நிலத்தடி நீரைக் காய்ச்சிக் குடிப்பதால் ஆரோக்கியப் பாதிப்பு ஏற்படுமா? அதிக அளவு உப்பு உள்ள நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது சரியா?

கன்சல்ட்டிங் ரூம்ஜீவகன்
, பொது மருத்துவர், தேனி.

பொதுவாக, நிலத்தடி நீரில் உள்ள தாதுக்களில் கால்சியம், மக்னீசியம் போன்றவை அதிகமாக இருக்கும். காரணம், நிலத்துக்கு அடியில் இருக்கும் பாறைகளில் இவை அதிகஅளவில் இருப்பதே. அதில் தண்ணீர் படிவதால் தாதுக்களும் தண்ணீரில் கலந்துவிடும். இந்தத் தாதுக்கள் 250 மி.கி/லி (mg/litre)-க்குள் இருந்தால், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், தாதுக்கள் அளவுக்கு  அதிகமாக இருந்தால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். சருமம் வறட்சியாகும். அந்த நீரைக் குடிக்கும்போது, சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்பு பெருமளவில் இருக்கிறது. அந்த தாதுக்கள்   250 மி.கி/லி - க்குக் கீழ் இருந்தால் அந்த நீரைக் காய்ச்சிக் குடிக்கும்போது, அவை அழிந்துவிடும். ஆனால், அந்த அளவைத் தாண்டும்போது, தாதுக்கள் வண்டல் போலப் படியும். ஆக, அதன் அளவை குடிநீர் வடிகால் வாரியத்தில் கொடுத்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதைச் சரி செய்ய முடியுமா என்பதைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் வாட்டரில் (Reverse Osmosis Water) இந்தத் தாதுக்களின் அளவு சமன் செய்யப்படுகிறது. அதனால், இந்த நீரைக் குடித்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.