Published:Updated:

ஈட்டிங் டிஸ்ஆர்டர் - தடுக்க... தவிர்க்க!

ஈட்டிங் டிஸ்ஆர்டர் - தடுக்க... தவிர்க்க!
பிரீமியம் ஸ்டோரி
ஈட்டிங் டிஸ்ஆர்டர் - தடுக்க... தவிர்க்க!

ராஜ்குமார், குடல் இரைப்பை நிபுணர்

ஈட்டிங் டிஸ்ஆர்டர் - தடுக்க... தவிர்க்க!

ராஜ்குமார், குடல் இரைப்பை நிபுணர்

Published:Updated:
ஈட்டிங் டிஸ்ஆர்டர் - தடுக்க... தவிர்க்க!
பிரீமியம் ஸ்டோரி
ஈட்டிங் டிஸ்ஆர்டர் - தடுக்க... தவிர்க்க!

`சத்தான ஆகாரம், வளமான வாழ்வைத் தரும்’ என்று உணவின் முக்கியத்துவத்தை நம் முன்னோர் அவ்வப்போது கூறி வந்தனர். ஆனால், தற்போது உணவை எடுத்துக்கொள்ளும் முறையிலேயே நமது கவனமும் அக்கறையும் அதிகம் தேவைப்படுகின்றன. ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ என்று மருத்துவர்கள் கூறுவதை அடிக்கடி நாம் கேட்டிருப்போம். இது உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பல பிரச்னைகளைத் தரக்கூடியது.

ஈட்டிங் டிஸ்ஆர்டர் - தடுக்க... தவிர்க்க!ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்றால் என்ன?

உடல் எடை அல்லது உடல் வடிவம் பற்றிக் கவலை கொண்டவர்களுக்கு ஏற்படுவதுதான் ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் என்கிற இந்தக் குறைபாடு (ஈட்டிங் டிஸ்ஆர்டர்). போதிய அளவு உணவை எடுத்துக்கொள்ளாமலும் அதிகப்படியான உணவை உட்கொள்ளும்போதும் நமது உடல்நிலை பாதிப்படைகிறது. தற்போது பெரும்பாலான மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் அதிகப்படியாக இந்தக் குறைபாடு காணப்படுகிறது.

ஈட்டிங் டிஸ்ஆர்டர் வகை

அனொரெக்சியா நெர்வோசா
(Anorexia Nervosa)


இந்த வகையைச் சார்ந்தவர்கள் குறைந்த எடையை உடையவர்களாக இருந்தாலும், எங்கே எடை கூடிவிடுவோமோ என்னும் பயத்தில் குறைந்த அளவு உணவையே சாப்பிடுவார்கள். இதனால் மூளைப் பாதிப்பு, எலும்புத் தேய்மானம், இதயக் கோளாறுகள் போன்றவை ஏற்படவும் வாய்ப்புண்டு.

புலிமியா நெர்வோசா (Bulimia nervosa)

இந்த வகையைச் சார்ந்தவர்கள் கட்டுப்பாடின்றி அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்வார்கள். தங்களின் உடல் எடை அதிகமாகிவிடும் என்ற பயத்தில் சாப்பிட்டவுடன் வலுக்கட்டாயமாக வாந்தி எடுப்பது, அதிகமாக உடற்பயிற்சி செய்வது என இருப்பார்கள். இதனால் இரைப்பைப் பிரச்னைகள், வயிற்றுக் கோளாறுகள் மற்றும் இதயக் கோளாறுகளால் அவதிப்படுவார்கள்.

ஈட்டிங் டிஸ்ஆர்டர் - தடுக்க... தவிர்க்க!

பின்ஞ் ஈட்டிங் டிஸ்ஆர்டர்
(Binge eating disorder)


இவர்களின் உணவுப் பழக்கவழக்கம் நேர்எதிர். இவர்கள் நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள்.  இல்லையென்றால் நாள் முழுவதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் உடல் எடை ஒரு நிலையில் இல்லாமல் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். உடல் எடையைக் குறைக்க நினைக்கும் பத்தில் மூன்று பேர் சந்திக்கும் பிரச்னைதான் இது.

காரணங்கள்

ஒரு மனிதனுக்கு ஏற்படும் உடல், உளவியல் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான இயல்பு மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணங்களாக அமையும்.

ஹார்மோன் குறைபாடு, மரபியல் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற காரணங்கள்.

உடல் வடிவத்தால் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள், தாழ்வுமனப்பான்மை, மனஅழுத்தம், பதற்றம் போன்ற உளவியல் காரணங்கள்.

தொழில்ரீதியாக ஸ்லிம்மாக இருக்கவேண்டிய கட்டாயம், நண்பர்கள் மற்றும் சக தொழிலாளர்கள் மத்தியில் உண்டாகும் அழுத்தம், அதிக வேலைப் பளு, வாழ்வியல் முறை மாற்றங்கள் போன்ற சுற்றுச்சூழல்களும் இதற்கு ஒரு காரணம்.

சிலர் உணவு உண்டதும்  ‘I feel uncomfortable’ என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் கோபமான மனநிலையில் உணவை உண்பார்கள். இதனால் வேகஸ் (Vagus) நரம்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் உணவு உண்டதும் சிலர் தூங்கி விடுவார்கள். இதனாலும் இந்த ஈட்டிங் டிஸ்ஆர்டர் பிரச்னை ஏற்படலாம்.

மருத்துவ முறை

முதலில், இந்த ஈட்டிங் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவர் 24 மணி நேர டெஸ்ட் செய்வதற்கு உட்படுத்தப்படுவார். அவரது இரைப்பையின் கீழ்ப் பகுதியில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு அவரது உடலிலுள்ள அமிலத்தின் அளவு கணக்கிடப்படும். அந்த அளவைக்கொண்டு அவருக்கு அடுத்த பரிசோதனை தொடங்கப்படும். தற்போதைய நவீன காலத்தில் எண்டோஸ்கோபி மூலமாக இதைச் சரி செய்ய முடியும்.

நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல் போன்றவை இந்த ஈட்டிங் டிஸ்ஆர்டரால் ஏற்படக்கூடியவை. இவை சில நேரங்களில் தொண்டைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், தக்க சமயத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

ஈட்டிங் டிஸ்ஆர்டரைப் பொறுத்தவரை வெறும் மருந்துகளால் மட்டும் முழுப் பலனையும் அடைய முடியாது. மனநல ஆலோசகர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகளும் தேவை.

ஒருவரின் வாழ்வியல் முறை என்ன? அவர்களின் உடம்பு எத்தகைய உணவுகள் ஏற்றுக்கொள்ளும், அவர்களின் உடலின் தன்மை என்ன என்பனவற்றை ஆராய்ந்து அதற்குத் தகுந்தாற்போல் ஊட்டச்சத்து நிபுணர் உணவைப் பரிந்துரைப்பார்.

மனரீதியான பிரச்னைகளால் ஈட்டிங் டிஸ்ஆர்டர் ஏற்படுகிறதா என்பதை அறிந்து அதற்கான தீர்வுகள் மற்றும் சிகிச்சையை மனநல ஆலோசகர் அளிப்பார். ஏனெனில் மனஅழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், தனிமையில் இருப்பவர்கள் பலரும் தாங்கள் என்ன உண்கின்றோம், எவ்வளவு உண்கின்றோம் என்பதை அறியாமல் இருப்பார்கள். அவர்கள் ஆழ்மனதில் இருக்கும் பிரச்னைகளைப் பேசித் தீர்வு காண்பதற்கு இது மிகவும் அவசியம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சீரான வாழ்வியல் முறையோடு ஆரோக்கியமான உணவு வகைகள், உடற்பயிற்சி, தியானம் இவையனைத்தையும் ஒழுங்காகப் பின்பற்றினால் இந்தக் குறைபாட்டைச் சரி செய்து விடலாம்.

தடுக்கும் வழிமுறைகள்

டீ, காபி உட்கொள்வதைக் குறைக்க வேண்டும்.

உணவு உண்டதும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளி விட்டுப் பின்னர் உறங்கச் செல்ல வேண்டும்.

படுத்துக்கொண்டே உணவு உண்ணக் கூடாது. அப்போதுதான் நெஞ்செரிச்சல் ஏற்படாமல் இருக்கும்.

உணவு உண்ணும்போது அடிக்கடி தண்ணீர் அருந்தக் கூடாது.

சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதைத் கடைப்பிடிக்க வேண்டும்.

- கி. சிந்தூரி, பா.பிரியதர்ஷினி

ஈட்டிங் டிஸ்ஆர்டர் - தடுக்க... தவிர்க்க!

அறிகுறிகள்

* வாந்தி

மயக்கம்

அடிக்கடி உண்டாகும் மனஅழுத்தம் மற்றும் மந்தமான நிலை.

உடல் எடை மற்றும் தன்னம்பிக்கையின்மை காரணமாக யாரிடமும் பேசாமல், தனியாகவே இருக்கும் மனரீதியான பிரச்னைகள்.

நேரம் காலம் இல்லாமல் பசி இல்லாதபோதும் கிடைப்பதை எல்லாம் உண்பது போன்ற பழக்கங்கள்.

சீராக எடையைப் பராமரிக்கத் தவறுவது.

டயட் இருந்து உடல் எடையைக் குறைப்பது.

இதன் பாதிப்புள்ளவர்கள் மற்றவர்களுக்குச் சமைத்துத் தருவதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், இவர்கள் எதுவும் சாப்பிட மாட்டார்கள்.