Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

22 வயதுப் பெண்ணான நான் உணவு உண்ண அதிக நேரம் எடுத்துக்கொள்கிறேன். இதைப் பலர் தவறு என்கிறார்கள். வேகமாகவும் குறைந்த நேரத்திலும் என்னால் உணவு உண்ண முடியவில்லை. இதற்கு என்ன காரணம்? இதை எப்படிச் சரி செய்வது?

செளமியா, கம்பம்

கன்சல்ட்டிங் ரூம்

``பொதுவாக உணவு உண்ணும்போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அதில் ஒன்றும் தவறில்லை. இன்றைய அவசரக் காலத்தில் பலர் அரைகுறையாக உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். மெதுவாகச் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருப்பதற்குச் சோம்பேறித்தனம் ஒரு காரணமாக இருக்கலாம். சிலர் வேகமாகச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இன்னும் சிலர் ரசித்து ருசித்துச் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், நீங்கள் இப்படிச் சாப்பிடுவதால் பாதிப்பு ஏதும் இல்லை. அதேநேரத்தில் எப்போதுமே பொறுமையாகச் சாப்பிடுகிறீர் கள் என்றால், உங்கள் பழக்கத்தை மாற்ற வேண்டும்.

வேகமாக உணவு உண்ணக்கூடாது. அப்படி வேகமாகச் சாப்பிட்டால் உணவு சரியாக அரைபடாமல் செரிமானம் பாதிக்கப்படும்.  எனவே, பொறுமையாகச் சாப்பிடுங்கள். முக்கியமாக, எப்போது சாப்பிட்டாலும் பசித்த பிறகே சாப்பிட வேண்டும். அப்போது பொறுமையாகச் சாப்பிடுவதே நல்லது.’’

வெயில் காலங்களில் மொட்டை மாடியில் படுக்கலாமா? இதனால் உடலில் உஷ்ணம் ஏற்படுமா? ஆமாம் எனில், மாற்றுவழி என்ன?

பாஸ்கர், சிவகாசி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்சல்ட்டிங் ரூம்

``வெயில் காலத்தில் மொட்டை மாடியில் கண்டிப்பாகப் படுக்கக்கூடாது. பகல் முழுவதும் கொளுத்தும் வெயிலின் சூடு மொட்டை மாடியின் தரையில் பரவியிருக்கும். இரவில் நாம் மொட்டை மாடியில் படுக்கும்போது, அந்தச் சூடு நம் உடலில் ஏறி நமது உடல் உஷ்ணமாகிவிடும். இதனால் நீர்க் கடுப்பு உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படும். இதைத் தவிர்க்க, இரவு தூங்கச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரை மொட்டை மாடியில் தெளிக்கலாம். போர்வையைத் தரையில் விரித்துப் படுக்க வேண்டும். இல்லையென்றால், கயிற்றுக் கட்டில் பயன்படுத்தி மொட்டை மாடியில் உறங்கலாம். மேலும், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அதிலும், மண்பானைத் தண்ணீர் குடிப்பது உடல்சூட்டைக் குறைக்க உதவும். தர்பூசணிப் பழங்கள், பனை நுங்கு, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களைச் சாப்பிடுவதன்மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கலாம்.’’

எனக்கு 25 வயது. பொதுவாகவே, அதிக நேரம் விட்டத்தைப் பார்த்தாலோ, வானத்தைப் பார்த்தாலோ, பேருந்தில் செல்லும்போது குனிந்தபடி மொபைலையோ புத்தகத்தையோ பார்த்தால் தலைசுற்றுகிறது. இதற்கு என்ன காரணம்? இது ஏதேனும் நோயின் அறிகுறியா?

பிரதிபா, ஊட்டி

கன்சல்ட்டிங் ரூம்

``பேருந்தில் செல்லும்போது, மொபைலையோ புத்தகத்தையோ பார்க்கும்போது உடல் ஒரு நிலையில் இருக்கும். கண் அந்த ஒரு பொருளை மட்டுமே பார்க்கும். இவ்வாறு உடல் நிலையாக இருந்து கண், கழுத்து போன்ற பாகங்கள் நகர்தலில் இருக்கும்போது கண் மூலமாக மட்டும் வரும் அலைகள் மூளையை வந்தடையும். அப்போது, தலை சுற்றுவதுபோல இருக்கும். இதற்கு `மோஷன் சிக்னெஸ்’ என்று பெயர். இது நோயோ அல்லது நோய்க்கான அறிகுறியோ கிடையாது. இது வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் ஏற்படக்கூடியதும் அல்ல. இதுபோன்ற நேரங்களில் இடையிடையே வெளியே பார்க்க வேண்டும். இதனால் கண்ணும் நகர்தலில் இருக்கும். இல்லையென்றால், சூயிங்கம் போன்றவற்றைச் சாப்பிட்டு வந்தால், முகத் தசைகள் அனைத்துமே நகர்தலில் இருக்கும். அப்போது தலைச்சுற்றல் ஏற்படாது. இந்த நிகழ்வு பலருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். ஆனால், தலைவலி, தலைச்சுற்றல் அதிகமாக ஏற்படும் பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.’’

கன்சல்ட்டிங் ரூம்

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:

கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism