Published:Updated:

டாக்டர் டவுட் - குடல் அழற்சி நோய்

டாக்டர் டவுட் - குடல் அழற்சி நோய்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் டவுட் - குடல் அழற்சி நோய்

அனிதா சூர்ய நாராயணன், நோய்க் குறியியல் மருத்துவர்

டாக்டர் டவுட் - குடல் அழற்சி நோய்

அனிதா சூர்ய நாராயணன், நோய்க் குறியியல் மருத்துவர்

Published:Updated:
டாக்டர் டவுட் - குடல் அழற்சி நோய்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் டவுட் - குடல் அழற்சி நோய்

‘அன்னாசிப் பழமும் ஆப்பிள் பழமும் வேண்டாம். ஒரு பாக்கெட் சிப்ஸ், சாக்லேட் போதும் மம்மி.’ என்று செல்லமாய்ச் சிணுங்கும் குழந்தைகளையே அதிகம் காணமுடிகிறது. ஆரோக்கியம் தரும் கீரை, காய்கறிகளைவிட நொறுக்குத்தீனிகளையே அதிகம் விரும்புகிறார்கள், குழந்தைகள்.

வயிற்றுவலியைக் காரணம் காட்டி அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் குழந்தைகளை வீட்டுக்குவீடு பார்க்கலாம்.

டாக்டர் டவுட் - குடல் அழற்சி நோய்

பள்ளிக்கூடம் செல்வதைத் தவிர்க்கப் பிள்ளைகள் சொல்லும் பொய்களில் இதுவும் ஒன்று என்று பல பெற்றோரும் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி அனுப்பிவைப்பதும் உண்டு.

குழந்தைகள் சொல்கிற வயிற்றுவலி எப்போதும் பொய்யானதாகவே இருக்க வேண்டும் என்றில்லை. அதன் பின்னணியில் குடல் அழற்சி நோய் என்கிற பிரச்னைகூடக் காரணமாக இருக்கலாம். இன்ஃப்ளேமட்டரி பவல் டிசீஸ் (Inflammatory Bowel Disease) எனப்படுகிற அந்தப் பிரச்னைக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் எனச் சகலத்தையும் பற்றித் தெரிந்துகொள்வோமா?

குடல் அழற்சி நோய் என்றால் என்ன?

சில குழந்தைகள் பேப்பர், டிஷ்யூ, ஃபெவிக்கால் மற்றும் மண் போன்றவற்றைச் சாப்பிட்டு விடுவார்கள். இதனால் காய்ச்சல், வாந்தி, அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு அவதிப் படுவார்கள். அதைக் கண்டுகொள்ளாமல் விட்டால் உங்கள் குழந்தை இன்ஃப்ளேமட்டரி பவல் டிசீஸ்  எனும் குடல் அழற்சி நோயால் அவதிப்பட நேரலாம்.

குடல் அழற்சி நோய் என்ன செய்யும்?

இது மிக முக்கியமாக வயிறு, சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் உள்ளிட்ட ஜீரணப்பாதையின் உட்புறப்பகுதியில் நீண்டகால வீக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜீரண மண்டலச் செயல்பாட்டைத் தீவிர பாதிப்புக்குள்ளாக்குகிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் உறிஞ்சப் படுவதைத் தடுக்கிறது. இதனால் அவர்களது வளர்ச்சி தடைப்படுகிறது.

சிலருக்கு வயிற்றில் பிடிப்புடன் கூடிய வலி தீவிரமாவது, விரைவான எடை இழப்பு, சோர்வு, திரும்பத் திரும்ப வயிற்றுப்போக்கு, மலத்தில் ரத்தம், மலக்குடலில் வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் ரத்தச்சோகை போன்றவையும் ஏற்படும். மேலும், இது ஜீரண மண்டலத்துக்கு வெளியே ஆரோக்கியப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் டவுட் - குடல் அழற்சி நோய்

குடல் அழற்சி நோய் ஏன் ஏற்படுகிறது?

 இது அல்சர் நிறைந்த கோலிடிஸ் (Colitis) மற்றும் க்ரோன்ஸ் டிசீஸ் (Crohn’s disease) என்ற  இரண்டு நீண்டகால நோய்களாக வெளிப்படலாம். முக்கியமாக நொறுக்குத்தீனிகளை உண்பது அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவதால் ஏற்படலாம். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதின் காரணமாகவும் இந்நோய் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

குழந்தைகளின் வயிற்று வலிக்கான காரணங்கள் என்னென்ன?

குழந்தைகளின் வயிற்றுவலிக்கான சில முக்கியக் காரணங்கள் மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் பாக்டீரியாவின் விளைவாக ஏற்படும் வீக்கம் போன்றவையே ஆகும். குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு என்னென்ன அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் எத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன என்றும் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியின் காரணத்தை அவர்களால் சொல்லமுடியவில்லை என்றால் அவர்களது நடவடிக்கைகளைக் கவனித்து உணர்ந்துகொள்ளவேண்டும்.

வேறு என்ன காரணங்களால் வயிற்றுவலி வரலாம்?

* வைரஸ், அஜீரணம், வாய்வுக்கோளாறு காரணமாகப் வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும்போதும் வலி உண்டாகும்.

பிடிப்பு போன்ற வலி, வாய்வு மற்றும் உப்புசம் காரணமாகவும் வலி உண்டாகக் கூடும். இது தொடர்ந்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் என்றாலும் தீவிரமாக இருக்காது.

வயிற்றின் ஒரு பகுதியில் மட்டும் சிலருக்கு வலி ஏற்படலாம். அப்பென்டிக்ஸ், பித்தப்பை, குடலிறக்கம், கருமுட்டைகள், வயிறு (வயிற்றும் புண்கள்) தொடர்பான பிரச்னைகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம்.

சிலருக்கு விட்டு விட்டு வயிற்றுவலி வரும். வேறு சிலருக்குத் திடீரென்று வயிற்றுவலி தொடங்கிக் காணாமல் போகும், சிலருக்கு அடிக்கடி தீவிரத்தன்மையுடன் காணப்படும்.
 
பரிசோதனைகள் என்ன?

மூட்டுகள், கண்கள், சருமம் மற்றும் கல்லீரல் போன்றவற்றில் வீக்கம் எனப் பாதிப்பு ஏற்பட்டு முதல்முறையாகச் சந்தேகம் ஏற்படும்போதே குழந்தையை உங்கள் மருத்துவரிடம் அழைத்துச்செல்வதுடன் உங்கள் குழந்தைக்கு ஒழுங்கான சிகிச்சை பெறுவதை உறுதி செய்து கொள்ளவும். குடல் அழற்சியின் அளவைக் கண்டறிவதற்கு Faecal calprotectin பரிசோதனை யை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

டாக்டர் டவுட் - குடல் அழற்சி நோய்

இந்தப் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில், உடல் உறுப்புகள், திசுக்கள் மற்றும் வயிற்றில் உள்ள மற்ற அமைப்புகளைப் பார்த்துக் குடல் பாதிப்பின் தீவிரத்தை மருத்துவர் கண்டுபிடிப்பார். அதன் அடிப்படையில் மருத்துவர் கொலோனோஸ்கோபி, என்டோஸ்கோபி அல்லது அப்பர் ஜி ஐ (Upper GI) என்றழைக்கப்படும் ஒரு எக்ஸ்-ரே எடுக்கவும் பரிந்துரைக்கலாம். பின்னர் சோதனைகளின் முடிவுகளுக்கேற்ப சிகிச்சை அளிப்பார்.

வராமல் தடுக்க வழிகள் உண்டா?

அனைத்து வகையான வயிற்றுவலிகளும் தடுக்கக்கூடியவை அல்ல என்றாலும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துதல், மலச்சிக்கலைத் தடுக்கத் தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்வது, சாப்பிட்டவுடன் படுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் வயிற்றில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம். உங்கள் குழந்தை உண்மையிலேயே குடல் அழற்சி நோயால் அவதிப்பட்டால், அவருடைய உணவைப் பிரத்யேகமாகக் கண்காணிக்க வேண்டும். வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து இழப்பு மற்றும் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் போன்ற அனைத்தும் இதற்கு வழிவகுக்கும். அதனால் குழந்தையைப் போதிய கலோரிகளுடன் ஒழுங்கான சமச்சீர் உணவைச் சாப்பிடச் செய்வது முக்கியமானது. நாள் முழுவதும் சிறு அளவிலான உணவுகளைச் சாப்பிட நீங்கள் உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்தலாம். பள்ளிக்குச் செல்லும் சற்று பெரிய குழந்தைகளுக்கு, ஆரோக்கியமான உணவுகளை அளிப்பதையோ அல்லது ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ்கள் அல்லது மதிய உணவுகளைக் கொண்டு செல்வதையோ உறுதி செய்துகொள்ளவும். இல்லையென்றால், அவர் குடல் அழற்சி நோய் அறிகுறிகளைத் தீவிரப்படுத்தக்கூடிய உப்பும் அதிக க் கொழுப்பும்  நிறைந்த நொறுக்குத்தீனிகளைச் சாப்பிட நேரிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism