
எலும்புகளின் உறுதி... நமக்கான ஊன்றுகோல்... எலும்புகளை வலிமையாக வைத்திருக்கச் சில பிரத்யேக பயிற்சிகள் உள்ளன. அப்படிச் சிலவற்றைப் பார்ப்போம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
* ஜிம்மிற்குக் கூட போகவேண்டிய அவசியமில்லை. படிக்கட்டுகளில் ஏறிஇறங்குவதும்கூட நம்முடைய உடலைக் கட்டுடலாக மாற்றும்.

* நேரம் கிடைக்கும்போது சைக்கிள் ஓட்டலாம். இது உடல்நலத்தோடு மனநலத்தையும் மேம்படுத்தும்.

* தகுந்த நிபுணரின் ஆலோசனையுடன் எலும்புகளுக்கான யோகாசனங்களைச் செய்யலாம்.

* வாக்கிங், ரன்னிங், மெது ஓட்டம் மூன்றுமே எலும்புகளை உறுதியாக்குபவை.

* கயிற்றை வைத்துச் செய்யும் ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகள் எலும்புகளுக்கும் தசைகளுக்கும் சிறந்தவை.

* ஏரோபிக்ஸ் செய்யலாம். கிட்டத்தட்ட நடனம்போல இருப்பதால் போர் அடிக்காது.

* ஜூம்பா பயிற்சியை உடல் பருமனான குழந்தைகள், இளம் பருவத்தினர் செய்யலாம்.

* நீச்சல் பயிற்சி எலும்புகளை மட்டுமின்றி, உடல் முழுவதையும் உறுதியாக்கக் கூடியது.
- ப்ரீத்தி