Published:Updated:

வகைதொகை இல்லாமல் வயிற்றில் போடலாமா?

வகைதொகை இல்லாமல் வயிற்றில் போடலாமா?
பிரீமியம் ஸ்டோரி
வகைதொகை இல்லாமல் வயிற்றில் போடலாமா?

சிவராம கண்ணன் , பொது மருத்துவர்

வகைதொகை இல்லாமல் வயிற்றில் போடலாமா?

சிவராம கண்ணன் , பொது மருத்துவர்

Published:Updated:
வகைதொகை இல்லாமல் வயிற்றில் போடலாமா?
பிரீமியம் ஸ்டோரி
வகைதொகை இல்லாமல் வயிற்றில் போடலாமா?

‘ஆற்றில் போட்டாலும் அளந்துபோடு’ என்பார்கள். நாம் வயிற்றில் போடுவதை வகைதொகை இல்லாமல் போட்டால், நோய்கள் ரவுண்டு கட்டி அடிப்பதைத் தவிர்க்கவே முடியாது. உணவுதான் உடலுக்கு ஆதாரம். உண்ணும் முன்பு, ‘இது ஆரோக்கியமானதா? எவ்வளவு சாப்பிட வேண்டும்? எப்படிச் சாப்பிட வேண்டும்?’ என்று  கேட்டுக்கொண்டாலே உணவின் மீதான கட்டுப்பாடு நமக்கு வந்துவிடும். ஆரோக்கியமான உணவுப் பழக்கமே பாதி நோய்களுக்கு ‘பை... பை’ சொல்லிவிடும். இதோ நீங்கள் அடிக்கடி உண்ணக்கூடாத, இயன்றவரைத் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்... இவை அடிக்கடி உங்கள் மெனுவில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

வகைதொகை இல்லாமல் வயிற்றில் போடலாமா?

நூடுல்ஸ்

பெரும்பாலான நூடுல்ஸ்கள் மைதாவால் செய்யப்படுகின்றன. மைதா என்பது உடலுக்குத் தேவையான எந்த ஊட்டச்சத்துகளும் அற்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருள். மேலும், நூடுல்ஸ்கள் நீண்ட நாள்கள் கெடாமலிருப்பதற்காக உயர் வெப்பநிலையில் தயாரிக்கப்படுகின்றன. இதனால், புற்றுநோயைத் தூண்டும்  கார்சினோஜென்கள் உருவாகின்றன. நூடுல்ஸில் உடலுக்குத் தீமை செய்யும் கெட்ட கொழுப்புகளான நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் ஃபேட்கள் நிறைந்துள்ளன. இதன் சோடியம் அளவும் மிக அதிகம். மோனோ சோடியம் குளுட்டமேட், Tertiary-butylhydroquinone -TBHQ எனப்படும் பெட்ரோலியப் பொருள்கள் உள்ளன. ஒருவர் தொடர்ந்து இவற்றை எடுத்துக்கொள்ளும்போது, செரிமானப் பிரச்னைகள், ஒபிஸிட்டி, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ்

வளர்ந்து வரும் ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தில் பீட்சா முதல் பிரியாணி வரை, எதைச் சாப்பிடுவதாக இருந்தாலும் அதற்கு முன்னால் நாம் வாங்கிச் சாப்பிடும் ஸ்நாக்ஸ், ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ்தான். ஆனால், இவை பதப்படுத்தி வைக்கப்பட்ட உருளைக்கிழங்குத் துண்டுகளில் இருந்து பொரிக்கப்படுகின்றன. எனவே, இதில் ட்ரான்ஸ் வகைக் கொழுப்பு, செயற்கையான சுவையூட்டிகள், மணமூட்டிகள், பதப்படுத்திகள் நிறைந்துள்ளன. மேலும், ஃப்ரெஞ்ச் ஃப்ரை போன்ற உயர் வெப்பநிலையில் பொரிக்கப்படும் உணவுகளில் அக்ரிலமைடு (Acrylamide) எனப்படும் உடலுக்குத் தீங்கு இழைக்கும் கார்சினோஜன்கள் உருவாகின்றன. கார்சினோஜன்கள் புற்றுநோய்ச் செல்களை உருவாக்குபவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ந்து இதைச் சாப்பிடும்போது, செரிமானப் பிரச்னைகள், ஒபிஸிட்டி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வகைதொகை இல்லாமல் வயிற்றில் போடலாமா?

ஸ்போர்ட்ஸ் டிரிங்க்ஸ்

(விளையாட்டுக் குளிர்பானங்கள்)


வியர்வையுடன், விளையாட்டை முடித்துவிட்டு வருபவர்கள் முதலில் கையில் எடுப்பது  ஸ்போர்ட்ஸ் ட்ரிங்கைத்தான். ஆனால், ஸ்போர்ட்ஸ் டிரிங்க்ஸ்களில் செயற்கையான சுவையூட்டிகள், இனிப்புகள், பதப்படுத்திகள் சேர்க்கப்படுகின்றன. இது கலோரியை அதிகரிக்கிறது. தொடர்ந்து கலோரியை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது ஒபிஸிட்டி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடலுக்குத் தேவையான புரோட்டின் கிடைக்கும் வகையில் பால் அல்லது மற்ற இயற்கை உணவை உண்ண வேண்டும்.

கார்பனேட்டட் பானங்கள்

அதீத அழுத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயுவைத் தண்ணீரில் செலுத்துவதன் மூலம் கார்பனேட்டட் பானங்கள் உருவாக்கப்படுகின்றன. கோலா பானங்கள், பழச்சோடா (Fruits Soda), பன்னீர் சோடா, ஜிஞ்ஜர் சோடா எனப் பலவகைகளில் இவை கிடைக்கின்றன. இவை அனைத்திலும் கார்பன் டை ஆக்சைடு உள்ளது. இந்த கார்பன் டை ஆக்சைடு நமது செரிமான மண்டலத்தைப் பாதிக்கிறது. மேலும், இவற்றில் இனிப்புச் சுவையைச் சேர்ப்பதற்காக, சாக்கரின் சேர்க்கப்படுகிறது; அளவுக்கு அதிகமான சர்க்கரை அல்லது செயற்கை  இனிப்பூட்டிகள்  சேர்க்கப்படுகின்றன. இதனால், கலோரி அதிகமாகிறது. ஒபிஸிட்டி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் ஏற்படுகின்றன. மேலும், இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது இது பற்களையும் எலும்புகளையும் பாதித்து, ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற எலும்பு நோய்களையும் ஏற்படுத்தும்.  

வகைதொகை இல்லாமல் வயிற்றில் போடலாமா?

சீஸ் சேர்க்கப்பட்ட உணவுகள்

சீஸ் என்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. இதில் கொழுப்புச்சத்து அதிகம். ஒரு துண்டு சீஸில் 10 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. ஆனால், நம் தேவை ஒரு நாளைக்கு 18 கிராம் மட்டுமே. மேலும், இதில் சோடியத்தின் அளவும் அதிகமாக உள்ளது. நிறைவுற்ற கொழுப்பு, சோடியம் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்வதால், இதயநோய்கள் உருவாகும். குறிப்பாக, மார்க்ரைன் மற்றும் மயோனைஸ் போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.

பழங்களின் ஃப்ளேவர் உள்ள உணவுப்பொருள்கள்

சூயிங்கம் முதல் குளிர்பானங்கள் வரை அனைத்திலும் பலவகையான பழ ஃப்ளேவர்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், இவை அனைத்தும் செயற்கையானவைதான். பழங்களில் உள்ள சத்துக்கள் அவற்றில் இல்லை. மேலும், சுவைக்காகவும் நிறத்துக்காகவும் செயற்கையான வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இவை, செரிமானத்தைப் பாதிக்கும். மேலும், இவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது சர்க்கரை நோய், இதய நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும். இயற்கையான காய்கறிகள், பழங்கள் உண்பதே நல்லது.

தக்காளி சாஸ்

தக்காளியில் வைட்டமின் சத்துகளும் இரும்புச்சத்துக்களும் உள்ளன. ஆனால், சாஸில் இவை இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். சாஸில் பதப் படுத்தப்பட்ட சர்க்கரை, செயற்கையான இனிப்புப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும், மணமூட்டிகளும் சுவையூட்டிகளும் சேர்க்கப்படுகின்றனை. இவை செரிமானத்தைப் பாதிக்கின்றன.  எனவே, தக்காளியின் சத்து கிடைக்க நேரடியாகத் தக்காளியை உட்கொள்வதே நல்லது.

வகைதொகை இல்லாமல் வயிற்றில் போடலாமா?

பி.டி கத்திரிக்காய்

பி.டி கத்திரிக்காய் என்பவை, விளைச்சலின் பொருட்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட செயற்கையான காய்கறிகள் வகையைச் சேர்ந்தது. இப்படி மரபணு மாற்றம் செய்யப்படும்போது, வேறு தாவரங்களில் மட்டும் அல்ல மிருகங்களிடம் இருந்தும் மரபணுக்கள் எடுக்கப்படுகின்றன. இவற்றில் கார்சினோஜன்கள் உள்ளன. இவை உடலில் ப்ரீரேடிக்கல்ஸை அதிகரித்து புற்றுநோய்ச் செல்களை உருவாக்கும். மேலும், இதில் உள்ள ஆக்சிலேட்கள் சிறுநீரகப் பிரச்னைகளை உருவாக்கும். உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கும். வளரும் குழந்தைகள் பி.டி கத்திரிக்காயைத் தொடர்ந்து சாப்பிடும்போது, அவர்களின் வளர்ச்சி தடைப்படுகிறது.
 
- இளங்கோ கிருஷ்ணன், ம.சக்கர ராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism