நோய், வியாதி அல்லது பிணி என்பது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படக்கூடிய அசாதாரண நிலைகளைக் குறிக்கக்கூடியது. குறிப்பாகச் சொல்வதென்றால், உடலிலுள்ள ஏதேனும் ஓர் உறுப்பிலோ, ஒரு பாகத்திலோ ஏற்படும் வீக்கம், தொற்று அல்லது மரபு சார்ந்த மாற்றங்கள் மற்றும் சில அறிகுறிகளே, `நோய்’ எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நோயை அல்லது பொதுவாக ஏற்படும் சில நோய்களை நம் உடலே எதிர்த்துப் போராடும். அதற்காக வெளியிலிருந்து சிகிச்சைகளோ, மருந்துகளோ கொடுக்கவேண்டிய அவசியமில்லை. அப்படி உடலிலேயே இயல்பாக இருக்கும் தடுப்பாற்றல், `நோய் எதிர்ப்பு சக்தி’ எனக் கூறப்படுகிறது.

நம் உடலில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட் என மூன்று வகையான செல்கள் இருக்கின்றன. இதில், ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 4,500 - 11,000 ஆக இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையின் அளவு குறைந்தால், கிருமிகளுக்கு எதிராகப் போராடும் நம் உடலின் ஆற்றல் குறைந்துவிடும். இதனால், ஒருவருக்கு அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம் போன்ற தொற்றுகள் ஏற்படுகின்றன. அவர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது என அர்த்தம். ஒவ்வொரு வயதிலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வேறுபடுகிறது. பிறந்த குழந்தைக்கு, அனைத்துவிதமான நோய் எதிர்ப்பு ஆற்றல்களும் தாய்ப்பாலில் கிடைக்கின்றன. பிறகு, முறையான உணவு, ஊட்டச்சத்துகள்,

உடற்பயிற்சிகள் எனச் சீரான ஒரு வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். வயதானவர் களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதால், அவர்களுக்குத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

வைட்டமின் சி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வைட்டமின் சி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்றாடம் நம் உணவில், எலுமிச்சை, ஆரஞ்சு, குடமிளகாய், பப்பாளி, நெல்லிக்காய், கொய்யாப்பழம் போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் இ

வைட்டமின் இ சிறந்ததோர் ஆன்டிஆக்ஸிடன்ட். தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. பாதாம், வேர்க்கடலை, கீரை, புரோக்கோலி ஆகிய உணவுகளில் வைட்டமின் இ நிறைந்துள்ளது.

வைட்டமின் பி 6

நம் உடலில் ஏற்படும் ஏறத்தாழ 200 உயிர்வேதியியல் எதிர்வினைகளுக்கு (Biochemical reactions) இந்த வைட்டமின் உறுதுணையாக இருப்பதோடு, நம் உடலின் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். வாழைப்பழம், சூரை மீன், வேகவைத்த உருளைக்கிழங்கு, கொண்டைக் கடலை போன்றவற்றில் வைட்டமின் பி 6 நிறைந்திருக்கிறது.

வைட்டமின் ஏ

கலர்ஃபுல் உணவுகளில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கும். வைட்டமின் ஏ பார்வை சம்பந்தமான குறைபாடுகளைக் குணப்படுத்துவதோடு, பார்வைக்கோளாறுகள் வராமல் தடுக்கக்கூடியது. கேரட், தக்காளி, கீரை வகைகள்... முக்கியமாகப் பொன்னாங்கண்ணி, அகத்திக்கீரை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பூசணி, பால், வெண்ணெய், நெய் ஆகிய உணவுகளில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது.

வைட்டமின் டி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் வைட்டமின் டி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு, காளான், மீன் வகைகள், பால் ஆகியவற்றில் வைட்டமின் டி காணப்பட்டாலும், வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், மருத்துவரை அணுகி மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஃபோலிக் ஆசிட்

தினசரி உணவில் அதிகளவு பச்சைப் பட்டாணி, பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் தேவைப்பட்டால் மருந்துகளையும் சாப்பிடலாம்.

இரும்புச்சத்து

நம் உடலில் ஆக்சிஜனை அனைத்து செல்களுக்கும் கொண்டு செல்வதற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். ஆகவே, நம் தினசரி உணவில் கீரை, பேரீச்சைப்பழம், கறிவேப்பிலை, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

துத்தநாகம்

உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குணப்படுத்து வதற்கும் வீக்கம் ஏற்படாமல் இருப்பதற்கும் துத்தநாகம் (Zinc) மிகவும் அவசியம். ஆகவே, நண்டு, தயிர், கடலை, கோழி போன்ற துத்தநாகம் அதிகமாக உள்ள உணவுகளை உண்ணவேண்டியது அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் அறிகுறிகள் என்னென்ன?

* முதலில் ஏற்படுவது சோர்வு. சிறு வேலைகளைச் செய்தாலும் உடல் சோர்வாவதை உணரலாம். அதுமட்டுமல்லாமல், வானிலையில் மாற்றம் ஏற்பட்டால், தலைச்சுற்றல், வாந்தி வருவது போன்றவை குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியின் அறிகுறிகளாகும்.

* அடிக்கடி தொற்று ஏற்படுவதும் மிக முக்கியமான அறிகுறி. சிறுநீரகத்தில் ஏற்படும் சிறு தொற்றுகள், அடிக்கடி வயிற்றுப் போக்கு, ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தம் கசிவது.

* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஜலதோஷம், காய்ச்சல் வருவது இயல்பு. ஆனால், மாதத்துக்கு ஒருமுறை என்றால் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். வெள்ளை அணுக்கள் குறைந்தி ருந்தால்தான், மாதம் ஒருமுறை அல்லது இருமுறை காய்ச்சல், ஜலதோஷம் வரும்.

* அடிக்கடி ஒவ்வாமை ஏற்படுவது.

* காயங்கள் ஆற நீண்ட நாள்கள் ஆவது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

* அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

* தினசரி ஒரு வண்ணக் காய்கறி, ஒரு வண்ணப் பழம் எனச் சாப்பிடலாம்.

* உணவில் தேவையான அளவுக்கு மட்டுமே சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* நாட்டுச்சர்க்கரை, தேன், வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றைச் சர்க்கரைக்குப் பதிலாக உட்கொள்வது மிகவும் நல்லது.

* தினசரி கொதிக்கவைத்து ஆறவைத்த குடிநீரைப் பருகுவது நல்லது. 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருகுவது அவசியம்.

* 8 முதல் 10 மணி நேரம் வரை உறங்க வேண்டும்.

* சுத்தமாக இருக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னர் கை கழுவ வேண்டும். சாப்பிட்ட பின்னர், பல் துலக்க வேண்டும். வெளியில் சென்று வந்ததும், கைகால்களைக் கழுவ வேண்டும். வெளியே அணிந்து சென்ற செருப்பை வீட்டுக்குள் அணிந்துவரக் கூடாது.

* காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைக் கழுவிவிட்டுத்தான் சாப்பிட வேண்டும்.

* காய்கறிகளை நறுக்கிவிட்டுக் கழுவக் கூடாது. கழுவிவிட்டுத்தான் நறுக்க வேண்டும். கீரையைச் சமைப்பதற்கு முன்னர், மூன்று முறை நன்றாகக் கழுவ வேண்டும்.

* மன அழுத்தம் ஏற்பட்டால், வீட்டிலோ நண்பர்களிடமோ பேசலாம். அப்படி முடியாதபட்சத்தில், மனநல மருத்துவரிடமோ ஆலோசகரிடமோ சொல்லலாம். தனிமையில் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். அதனால், முடிந்தவரைத் தனிமையைத் தவிர்க்கலாம்.

* பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பாலே போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்துவிடும்.

* கோடைக்காலத்தில் உப்பு சேர்த்த மோர், தர்பூசணி, வாழைத்தண்டு ஆகிய உணவுகளை உட்கொள்ளலாம்.

* ஏதேனும் ஓர் உடற்பயிற்சி, விளையாட்டில் ஈடுபடுவது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி, உடலைச் சீராக வைத்திருப்ப தோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* நடைப்பயிற்சி, ஜாகிங், நீச்சல், சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்சிகள் நமது இதயத்தையும் நுரையீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

* மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மசாலா தூள்கள் ஆகியவற்றை வீட்டிலேயே தயாரிப்பது சிறந்தது.

* மண் பாத்திரங்களில் சமையல் செய்வது, ஆர்கானிக் காய்கறிகள், பழங்களைப் பயன்படுத்துவது போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

* உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து கிடைக்கிறது. இது தோல் நோய்கள் உள்பட பல்வேறு பிரச்னைகளிலிருந்து காக்கிறது. தினமும் குறைந்தது 15-20 நிமிடங்களாவது வெயில் உடலில் படும்படி இருப்பது மிகவும் நல்லது.

* நடப்பது உடலுக்கு மிகவும் நல்லது. லிஃப்ட்டைப் பயன்படுத்தாமல், படிகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான பழக்கம்.

* புகைபிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றைத் தவிர்ப்பது மற்றும் முற்றிலுமாக நிறுத்துவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான விஷயமாகும்.

* சராசரியாக ஒரு நாளைக்கு நம் உடலுக்கு 50 மி.கி முதல் 60 மி.கி புரதச்சத்து அவசியம். பருப்பு மற்றும் பயறு வகைகள், மாமிச உணவுகள், சோயா பீன்ஸ், கறுப்பு உளுந்து, கொள்ளு, பச்சைப் பயறு, பட்டாணி, ராஜ்மா, கடலைப் பருப்பு ஆகியவற்றில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் உட்கொள்ளலாம்.

* மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், ஏலக்காய் போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

- ந.ஆசிபா பாத்திமா பாவா

படம் மற்றும் அட்டைப்படம்: அம்ரிதா சமந்த்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணங்கள்

* தூக்கமின்மை.

* உணவில் அதிகளவு சர்க்கரையைச் சேர்த்துக்கொள்வது.

* அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்.

* மன அழுத்தம்.

* உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது.

* சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போடாமல் இருப்பது.

* கார்பனேட்டட் பானங்களைப் பருகுவது.

* உடல் பருமன்.

* சரியாக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது.

* அதிகமாக மருந்து மாத்திரைகளை உட்கொள்வது.

* புறஊதாக் கதிர்கள் மற்றும் கதிரியக்கம் நிறைந்த சூழலில் அதிக நேரம் வேலை பார்ப்பது.

* புகைபிடித்தல்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

பருப்பு அடை, காய்கறி தோசை, ராகி அடை, வெண் பொங்கல், சாம்பார், வெந்தயக்களியுடன் கருப்பட்டி, நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிடலாம்

கொத்தமல்லி, நெல்லிக்காய்த் துவையல், பருப்புத் துவையல், வேப்பம்பூ ரசம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தி தரும்.

தயிர், மோர், வெண்ணெய், நெய், சத்துமாவுக் கஞ்சி, முருங்கைக்கீரை, காளான் சூப், காய்கறி சூப், நாட்டுக்கோழி சூப் நல்லது. நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்த தேநீர், சுண்டை வற்றல் குழம்பு சேர்த்துக்கொள்ளலாம்.

கேக், பன், பிரெட், நூடுல்ஸ், ஜங்க் ஃபுட்ஸ், குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைத்த சிப்ஸ், சாக்லேட் போன்ற பேக்கரி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

பழச்சாறுகள் அருந்துவதாலும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.