Published:Updated:

தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01 - “நல்லா இருக்கீங்களா டாக்டர்?”

தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01 - “நல்லா இருக்கீங்களா டாக்டர்?”
பிரீமியம் ஸ்டோரி
தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01 - “நல்லா இருக்கீங்களா டாக்டர்?”

மருத்துவர் அறிவோம்!

தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01 - “நல்லா இருக்கீங்களா டாக்டர்?”

மருத்துவர் அறிவோம்!

Published:Updated:
தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01 - “நல்லா இருக்கீங்களா டாக்டர்?”
பிரீமியம் ஸ்டோரி
தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01 - “நல்லா இருக்கீங்களா டாக்டர்?”

ட்சத்திர நடிகர் நடித்த படம். திரையரங்கம் நிறைந்திருந்தது. அதில் ஒரு காட்சி. பணத்தைக் கட்டாமல் ஆபரேஷனைச் செய்ய முடியாது என மருத்துவர் சொல்கிறார். அதைக்கேட்டு ஹீரோவுக்கு ஆத்திரம் வருகிறது. மருத்துவரின் சட்டையைப் பிடித்து அடிக்கிறார்... புரட்டி எடுக்கிறார். மருத்துவர்மீது விழுகிற ஒவ்வோர் அடிக்கும் படம் பார்த்துக்கொண்டிருக்கும் மக்களெல்லாம் உற்சாகக் குரல் கொடுக்கிறார்கள். அவர்களே அந்த மருத்துவரைப் போட்டுப் புரட்டியெடுப்பதுபோலக் கற்பனை செய்து கொள்கிறார்கள். ``அந்த நாயைக் கொல்லுங்க’’ என்று ஒரு குரல் பின்னாலிருந்து ஒலிக்க, அதிர்ந்துபோனேன். அது ஒரு பெண்ணின் குரல்.

தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01 - “நல்லா இருக்கீங்களா டாக்டர்?”

இன்று மருத்துவர்கள் தாக்கப்படுகிற செய்திகளை ஊடகங்களில் அடிக்கடி காண்கிறோம். இன்னொரு மனிதர் தாக்கப்படு ம்போது நமக்கு இயல்பாக வருகிற பரிதாப உணர்ச்சிகூட மருத்துவர்கள் தாக்கப்பட்டால் வருவதில்லை. ‘நல்லா வேணும்’ என்கிற எண்ணமே மேலோங்குகிறது. காரணம், சமீபகாலமாக மருத்துவர்கள்மீது நமக்கு  உருவாகியிருக்கிற மிக அதிக வெறுப்பு. அவர்கள் குறித்து உருவாக்கி வைத்திருக்கும் மோசமான பிம்பம். அதனால்தான் அரசியல்வாதிகள், காவல்துறையினர் வரிசையில் மருத்துவர்களையும் மருத்துவச் சேவையையும் சேர்த்துவிட்டோம். மருத்துவர்களைக் கேலிக்குரியவர்களாக, கேவலமானவர்களாக, வில்லத்தனம் நிறைந்தவர்களாகக் காட்டுகிற வழக்கம் தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்கிறது. கடைசியாக ஒரு நல்ல மருத்துவரை இந்திய சினிமா எப்போது காட்சிப்படுத்தியது என்பது நினைவிருக்கிறதா? மருத்துவர்கள் பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள் என்கிற கருத்து, ஊடகங்களின் வழியாகத் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகள் அதிகரித்திருப்பது ஒருபுறம், அதையொட்டி நிகழும் பேய்த்தனமான வணிகம் மறுபுறம் என மருத்துவர்கள் மீதான மதிப்பு, கடந்த பதினைந்து ஆண்டுகளில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்ல, அரசு மருத்துவமனைகளும்கூட இந்த வெறுப்பு உணர்வுக்குத் தப்புவதில்லை. தனியார் மருத்துவமனைகளில் காசு பிடுங்குகிறார்கள் என்ற வெறுப்பு; அரசு மருத்துவமனைகள்மீதோ வேறுவகையான வெறுப்பு. அங்கே முறையான கவனிப்பு இருக்காது, அங்கே சரியான மருந்து மாத்திரைகள் தரமாட்டார்கள், அந்த டாக்டர்களுக்கு எதுவுமே தெரியாது, எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்குவார்கள் என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01 - “நல்லா இருக்கீங்களா டாக்டர்?”

சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வேதனையாகச் சொன்னார்... ``சார், வீட்டுக்குப் பக்கத்துல ஒரு ஹாஸ்பிடல் இருக்கு. அங்கதான் குழந்தைக்கு உடம்பு முடியலைன்னா போய்க் காட்டுவேன். ஆரம்பத்துல 300 ரூபாதான் வாங்கிட்டு இருந்தாங்க. அப்புறம், 500 ஆக்கினாங்க. நேத்து போனா 1,000-ம்னு சொல்றாங்க, அப்புறம் அந்த டெஸ்ட்டு இந்த டெஸ்ட்டுனு பிடுங்கறாங்க. மருந்து மாத்திரைக்குத் தனியா பணம் கட்டணும். பார்க்கிங்க்கு பத்து ரூபா வாங்குறாங்க. அநியாயமா காசு பிடுங்கறாங்க சார்’’ என்று அவர் சொல்லும்போதே அவ்வளவு கோபம். நியாயமான கோபம்தான் இல்லையா?

‘‘பையனுக்கு என்ன பிரச்னை’’ என்று விசாரித்தேன்.

‘‘சாதாரண காய்ச்சல்தான். அதுக்கு அவ்ளோ ஃபீஸ் வாங்குறாங்க’’ என்று குறைப்பட்டார். சாதாரண காய்ச்சலுக்கு ஏன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்? அருகில் இருக்கிற ஒரு க்ளினிக்லேயே மருத்துவரைப் பார்த்திருக்கலாமே? ஏன் நாம் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை?

காரணம், நமக்கு அச்சம் மிகமிக அதிகமாகிவிட்டது. சுற்றுச்சூழல் சரியில்லை... நோய்கள் அதிகரித்துவிட்டன... சாதாரண காய்ச்சல் வந்தாலும்கூட டெங்குவா, பன்றிக்காய்ச்சலா, பறவைக்காய்ச்சலா எனப் பீதிக்குள்ளாகிறோம். அதிலும், குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், நமக்கு அச்சம் உச்சம் தொடும். இன்னொருபுறம் சின்ன க்ளினிக்குகள் வைத்திருக்கிற மருத்துவர்கள் நன்றாக மருத்துவம் பார்க்க மாட்டார்கள் என்கிற எண்ணம்.

அதனால்தான் சின்னச் சின்ன  தொந்தரவுக ளுக்குக்கூட பெரிய மருத்துவமனைகளை நோக்கி ஓடுகிறோம். சின்ன தலைவலிக்கும் ஏராளமாகக் காசு செலவழிக்கிறோம். நமக்கு எல்லா நோய்களும் உடனுக்குடன் சரியாகிவிட வேண்டும். எல்லா வலிகளும் நொடிப்பொழுதில் மாயமாகிவிட வேண்டும். நோய் வந்தால் ஓய்வெடுப்பதும், அது சரியானபின் பணிக்குச் செல்வதும் அவுட் டேட்டட் ட்ரெண்ட் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் காய்ச்சல் என்றாலும், ஓர் ஊசியைப் போட்டுக்கொண்டு ஓடிப்போய் மீட்டிங்கில் உட்கார்ந்து கொள்வதுதான் நம்முடைய வாழ்க்கை முறை. பணம் இருந்தால் ஆரோக்கியத்தை விலைக்கு வாங்கிவிடலாம் என்கிற நினைப்பு!

‘‘பாப்பாவுக்குக் காய்ச்சல்னா மாத்திரைலாம் கொடுக்காதீங்க. கஷாயம் வெச்சுக்கொடுங்க. அங்கே இங்கே ஓடாம ரெஸ்ட் எடுக்க வைங்க.. ஆன்டி பயாடிக்குகளை சின்ன வயசுலயே கொடுத்துப் பழக்கக் கூடாது. இம்யூனிட்டி குறைஞ்சிடும்’’ என்று சொல்கிற ஒரு மருத்துவரை எனக்குத் தெரியும். இதே நகரத்தின் மூலையில் உட்கார்ந்துகொண்டு வெறும் ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டு மருத்துவம் பார்க்கிறார். ‘‘என்ன சார் டாக்டர் அவன்? மாத்திரை மருந்தே குடுக்க மாட்டேனென்கிறான்”’’ என்று அவரைப் பற்றி மோசமாகப் பேசிய ஆள்களையும் நேரடியாக அறிவேன். ஆனால், அவர் அப்படித் தான் பல ஆண்டுகளாக மருத்துவம் பார்க்கிறார்.

‘‘சளின்னா பால்ல மிளகுத் தூளும் மஞ்சள் தூளும் ஒரு சிட்டிகை கலந்து குடிங்க பாஸ்’’ என்றுதான் சொல்லி அனுப்புவார். தேவையில்லாமல் மாத்திரை மருந்துகளைக் கிறுக்கிக் கிறுக்கிக் கொடுக்க மாட்டார். ஆனால், நமக்கு அதிகமாகப் பணம் வாங்குகிற இடம்தான் நல்ல மருத்துவமனை; அதிகமான மாத்திரைகளை எழுதித் தருகிறவர்தான் நல்ல மருத்துவர். அதனாலேயே எளிய மருத்துவர்களை, எளிய மருத்துவ வசதிகள் உள்ள இடங்களைக் கண்டாலே நமக்குக் குமட்டுகிறது. அரசு மருத்துவமனை என்றாலே அருவருப்பு வந்துவிடுகிறது.

இப்போதும் நம்மைச் சுற்றி நல்ல மருத்துவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். கோவையைச் சேர்ந்த டாக்டர் வி.பாலசுப்ரமணியனைப் பலருக்கும் தெரிந்திருக்கும். தன் வாழ்நாள் எல்லாம் வெறும் 20 ரூபாயை மட்டுமே பெற்றுக்கொண்டு வைத்தியம் பார்த்தவர். சக மருத்துவர்களே அவருக்கு இடையூறுகளை உண்டாக்குகிற அளவுக்குப் பொறாமையைச் சந்தித்தவர். மருத்துவத்தைச் சேவையாகவே பார்த்தவர். விடுப்பே எடுக்காமல், ஒவ்வொரு நாளும் ஏழைகளைத் தேடிச்சென்றவர். ‘‘ஐயா என்கிட்ட இருபது ரூபாகூட இல்லைங்க’’ என்று வந்து நிற்கிற ஏழைக்கு மருந்துகளையும் இலவசமாகக் கொடுத்து அனுப்பியவர்.

அவர் இறந்துபோன நாளில் கோவை ஆவாரம்பாளையமே கண்ணீர் சிந்தியது. இத்தகைய மருத்துவர்களும் நம்மிடையேதான் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் யாரும் போஸ்டர் ஒட்டி விழா எடுப்பதில்லை.

தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01 - “நல்லா இருக்கீங்களா டாக்டர்?”

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒருநாள் இருந்து பார்த்தால் தெரியும்... அங்கிருக்கிற மருத்துவர்கள் எவ்வளவு சேவை மனோபாவம் கொண்டவர்கள் என்பது. சேலம் சிட்லிங்கிப் பகுதியில் வசித்துவரும் ரெஜி - ஜார்ஜ் என்கிற இரண்டு மருத்துவர்கள், தங்களுடைய சொந்த ஊரைவிட்டு வந்து இருபத்தைந்து ஆண்டுகளாக சிட்லிங்கிப் பகுதியிலேயே தங்கியிருந்து, பத்துக்கும் அதிகமான கிராம மக்களுக்கு மருத்துவச் சேவை செய்கிறார்கள். அத்துடன், அங்கே அழிந்துவரும் விவசாய நிலங்களைக் காக்க விவசாயிகளை ஒருங்கிணைத்துப் போராடுகிறார்கள். அவர்களும் நம்மிடையே இருக்கிற நல்ல மருத்துவர்கள்தாம்.

``நீ கவனிச்சிருக்கியா, எந்த டாக்டரும் நான் மருத்துவரா வேலை பார்க்கிறேன்னு சொல்லவே மாட்டாங்க. வாழ்க்கை முழுக்க பிராக்டீஸ் பண்றேன்னுதான் சொல்வாங்க. அது ஏன்னு தெரியுமா? எப்போதும் எல்லா வியாதிகளையும் 100 சதவிகிதம் குணப்படுத்திட முடியாது. நோய்களும் அதற்கான மருத்துவமும் காலத்துக்கேற்ப, சூழலுக்கேற்ப மாறிக்கிட்டேதான் இருக்கும். அதுக்கேத்த மாதிரி ஒவ்வொரு மருத்துவரும் தன்னை அப்டேட் பண்ணிக்கப் படிச்சிக்கிட்டே இருப்பாங்க. ஆனா, மக்கள் என்ன நினைக்கிறாங்க... டாக்டர்ங்கிறவர் எல்லா நோயையும் நொடில குணப்படுத்திடணும்; அதுவும், குறைஞ்ச செலவுல பண்ணணும்; உடனே பண்ணணும்... சிகிச்சை தோத்துப்போய்ட்டா அவ்வளவுதான். இப்பயெல்லாம் அடிக்கவே செய்றாங்க. ஹாஸ்பிடலையே உடைக்கிறாங்க’’ என்று வருத்தமாகப் பேசுவார் மருத்துவ நண்பர் ஒருவர்.

நம்முடைய அவசரமும் அச்சமும்தான் மருத்துவர்களையும் மருத்துவத்தின் போக்கையும் மாற்றியது. எளிமையை நோக்கி நகரும்போது, நாம் எளிய மருத்துவ முறைகளை நோக்கி முன்னேறும்போது, இங்கேயும் மருத்துவத்தின் முகம் மாறும். நாம்தான் மாற்ற வேண்டும்!

- அதிஷா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism