Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

கடந்த சில வருடங்களாக, தொடர்ந்து தினமும் உடற்பயிற்சி செய்துவருகிறேன். சமீபகாலமாக என்னால் அதைத் தொடர முடியவில்லை. சில நாள்கள் இடைவெளி விட்டுச் செய்கிறேன். தினசரி

கன்சல்ட்டிங் ரூம்

உடற்பயிற்சி செய்துவிட்டுத் திடீரென விட்டுவிட்டால் உடல் ஆரோக்கியம் குறையும் என்கிறார்கள் சிலர். இது உண்மையா? விட்டு விட்டு உடற்பயிற்சி செய்வதால் பலன்கள் கிடைக்குமா? இதற்கு மாற்று வழி உண்டா?

கே.சவிதா, சென்னை


முதலில் தினமும் உடற்பயிற்சி செய்து வந்ததற்காக உங்களைப் பாராட்டுகிறேன். ஆனால், இப்போது இடைவெளி விட்டு உடற்பயிற்சி செய்வதால் கண்டிப்பாகப் பிரச்னை ஏற்படும். உடற்பயிற்சி செய்வதால் உங்கள் தசைகள் எல்லாம் இறுகி வலுவான நிலைக்கு வந்துவிடும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாமல் விடுவதால் தசைகள் மீண்டும் இலகுவாக மாற நேரிடும். பிறகு, அந்தத் தசைகள் எல்லாம் இலகுவாகி உடலுக்குத் தொந்தரவுகள் கொடுக்கும். அதன்பின் உடற்பயிற்சியைத் தொடர்ந்தும் பயனில்லை. நாள்கள் விட்டு விட்டுச் செய்வதும் எவ்விதப் பலனையும் கொடுக்காது. தசைகளின் நெகிழ்திறன் (elasticity) குறைந்துவிடும். எனவே, குறைந்தது அரைமணி நேரம் நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கையில் உடலுழைப்பு இருந்தால் உடற்பயிற்சிக்கு அவசியமேயில்லை. ஆனால், இந்தக் காலகட்டத்தில் கட்டாயம் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு, மனஉறுதியுடன் தினமும் உடற்பயிற்சி செய்து வருவது நல்லது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்சல்ட்டிங் ரூம்

கேன் வாட்டரைச் சூடாக்கிக் குடிக்கலாமா? காய்ச்சல் என்றால் சில மருந்துகள் உட்கொள்ளும்போது குடிநீரைச் சூடாக்கிப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் கேன் வாட்டரைச் சூடாக்கிப் பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள். இன்னும் சிலரோ கேன் வாட்டரைச் சூடு செய்தால் அது சாதாரணக் குடிநீர்போல் மாறிவிடும் என்கிறார்கள். இவை என்னை மிகவும் குழப்புகின்றன. கேன் வாட்டரைச் சூடு செய்யலாமா?

கன்சல்ட்டிங் ரூம்

எஸ். மேக்டலின் மேரி, திருச்சி

தண்ணீரைக் கொதிக்க வைப்பதால் எந்த ஒரு பிரச்னையும் வராது. தண்ணீரைச் சூடாக்குவதால் அதிலிருக்கும் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டுச் சுத்தமான, பாதுகாப்பான தண்ணீராகக் கிடைக்கும். அதேபோல்தான் கேன் வாட்டரைச் சூடு செய்யும்போதும், அதில் ஏதேனும் கிருமிகள் இருந்தால் அழிக்கப்பட்டுவிடும். இருப்பினும் அதிலிருக்கும் மினரல்களும் சேர்ந்து அழிந்துவிடுவதால், சாதாரண நீரைப்போல மாறிவிடுகிறது. இதனால், எவ்விதப் பிரச்னையும் வந்துவிடாது. மாத்திரை சாப்பிடுவதற்காக, நீரைச் சூடு செய்து குடிக்கலாம். அதில் கிடைக்கும் மினரல்களுக்குப் பதிலாகக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொண்டாலே சத்துகளைச் சமன் செய்துகொள்ள முடியும். மேலும், மினரல் வாட்டரைச் சூடு செய்வதற்குப் பதிலாகச் சாதாரணத் தண்ணீரையே சூடு செய்து பயன்படுத்தலாம். இரண்டும் ஒரே பயன் தரக்கூடியவை என்பதால் வீண் செலவும் குறையும்.

எனக்குச் சிறுவயதிலிருந்தே நகம் கடிக்கும் பழக்கம் உள்ளது. அதை நிறுத்த பல வழிகளில் முயற்சி செய்தும் முடியவில்லை. இந்தப் பழக்கம் எதனால் ஏற்படுகிறது என்றும் தெரியவில்லை. அதை நிறுத்த வழிகள் உள்ளனவா?

பி.சங்கீத், மதுரை


நகம் கடிக்கும் பழக்கம் என்பது இயல்பான ஒன்றுதான். ஒரு சிலர் சில நேரங்களில் மட்டுமே நகம்

கன்சல்ட்டிங் ரூம்

கடிப்பார்கள். ஒரு சிலர் இதையே பொழுதுபோக்காக வைத்திருப்பர். அப்படிப் பொழுதுபோக்காக வைத்திருப்பவர்களுக்குத்தான் அதிகப் பிரச்னைகள் ஏற்படும். இந்தப் பழக்கத்துக்கு மனஅழுத்தமே காரணம் என்று சொல்லலாம். குறிப்பாக, தனிமையில் இருக்கும்போது ஏதோ ஒன்றை யோசித்துக்கொண்டு தன்னை அறியாமலேயே நகம் கடித்துக் கொண்டிருப்பார்கள். சிறு வயதிலேயே இதைக் கட்டுப்படுத்தாவிடில் இதிலிருந்து மீள்வது கொஞ்சம் கடினமே.

நகத்தை மிகுதியாகக் கடித்துவிட்டால் அந்த இடத்தில் புண்கள் ஏற்பட்டு ரத்தம் கசியும். அதனால் வலி உண்டாகும். அந்த வலியால் பாதிக்கப்பட்ட சிலர் அதன்பிறகு கையை, வாய் பக்கம் கொண்டு செல்லவே தயங்குவார்கள். அப்படி இருந்தும் அந்தப் பழக்கத்தைக் கைவிடவில்லை என்றால் நகங்களின் துணுக்குகள் வயிற்றுக்குள் சென்று வாந்தி, வயிற்றுவலி, குடற்புழு போன்றவற்றை ஏற்படுத்தும். குறிப்பாக, ஈ.கோலி (E.coli Bacteria) கிருமிதான் இதைச் செய்யும்.  பின்னர், மருத்துவரை அணுகினால், அதற்கேற்ப மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

மனஅழுத்தத்தாலும் சினம் கொள்ளும்போதும் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்தான் அதிகம். எனவே ஆரம்பத்திலேயே மனநல ஆலோசகரை அணுகித் தீர்வு காண்பது நல்லது.

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:

கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism