Published:Updated:

காய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை உண்டு!

காய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை உண்டு!
பிரீமியம் ஸ்டோரி
காய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை உண்டு!

காய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை உண்டு!

காய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை உண்டு!

காய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை உண்டு!

Published:Updated:
காய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை உண்டு!
பிரீமியம் ஸ்டோரி
காய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை உண்டு!

காய்கறிகள் - பழங்கள்... ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவை. ஆனால், இவற்றைக் கவனமாகக் கையாண்டால்தான் ஆரோக்கியம் நம்மை வந்துசேரும். இல்லையென்றால் அவதிப்பட வேண்டியிருக்கும். கடைகளிலிருந்து வாங்குவதில் தொடங்கி அவற்றைப் பாதுகாப்பாக வைப்பது, சரியாகக் கழுவுவது, சரியான முறையில் சமைப்பது என எல்லாவற்றிலும் அதீத கவனம் அவசியம்.
 
ஏன் கழுவ வேண்டும்?

பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலின் மேல் மண் ஒட்டியிருக்கும். அந்த மண்ணில் காணப்படும் ஈ.கோலை (E-Coli) என்னும் பாக்டீரியாதான் பல்வேறு உபாதைகளை அதிகளவில் நமக்கு ஏற்படுத்துகிறது. சரியாகக் கழுவாமல் சமைப்பதால் இந்தப் பாக்டீரியா நமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். முறையாகக் கழுவிவிட்டால் பிரச்னை ஏதுமில்லை.

காய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை உண்டு!

பூச்சிகளைக் கொல்வதற்காகப் பயன் படுத்தப்படும் மருந்துகள் அனைத்தும் தீங்கு ஏற்படுத்தும் உயிரிகளை மட்டுமல்ல, நம் உடலையும் சேர்த்தே அழிக்கின்றன. ஆகவே, பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாகத் தேய்த்துக் கழுவுவதன்மூலம் பூச்சிக் கொல்லிகளைப் பெரும்பாலும் நீக்க முடியும்.

எப்படிக் கழுவுவது?

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தின் தோற்றத்தைப் பொலிவுடன் காட்ட அதன்மீது மெழுகு பூசப்படுகிறது. கத்தியால் அந்த மெழுகைச் சுரண்டி எடுத்துவிட்டு, குழாயில் தண்ணீரைத் திறந்துவிட்டு, அதில் ஆப்பிளை நன்றாகத் தேய்த்துக் கழுவுவதன்மூலம் மெழுகு அகன்றுவிடும். தோலை நீக்கி ஆப்பிளைச் சாப்பிடுவது நல்லது. இதனால், தோலிலுள்ள சத்துகள் கிடைக்காமல் போகலாம். ஆனால், மெழுகு உடலில் சேராமல் தடுக்கப்படும்.

கிழங்குகள்

கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மண்ணுக்குக் கீழே விளையும் பொருள்களில் அதிகளவு மண் ஒட்டியிருக்கும். ஆகவே, நன்கு சுத்தமான பிரஷ்ஷால் தேய்த்து மண்ணை அகற்றிவிட்டு, பிறகு நீரில் கழுவலாம்.

காளான்

காளான்கள் மிகவும் மென்மையாக இருக்கு மென்பதால் தண்ணீரை அதிக வேகத்தில் திறந்து விட்டுக் கழுவக் கூடாது. மெலிதான பிரஷ்ஷைப் பயன்படுத்தி மேலேயுள்ள அழுக்கை நீக்கிவிட்டு, ஈரமான துண்டால் துடைத்து எடுக்கலாம்.

திராட்சை மற்றும் பெர்ரி வகைகள்

திராட்சை, பெர்ரி போன்ற பழவகைகளை அதிகநேரம் தண்ணீரில் மூழ்கச் செய்யக் கூடாது.

10 - 15 நிமிடங்கள் கல்லுப்பு போட்டு ஊறவைத்து, அவற்றைத் தனியாக எடுத்துக் குளிர்ந்த நீரை மெதுவாகத் திறந்துவிட்டு அதில் கழுவினாலே போதுமானது. கழுவியதும், உலர்ந்த துண்டின்மீது தனித்தனியாகச் சற்று நேரம் வைக்கலாம். இதனால், நசுங்கிய திராட்சையில் உள்ள கிருமிகள் மற்ற திராட்சைகளுக்குச் செல்லாமல் தடுக்க முடியும்.

கீரை வகைகள்

கீரையின் தேவையில்லாத அடிப்பகுதியை வெட்டிவிட்டு, மற்ற இலைகளைச் சிறிது மஞ்சள் கலந்து, குளிர்ந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்க வேண்டும். பின்னர், 4-5 முறை அலசி எடுக்கலாம்.

மூலிகை இலைகள்

துளசி, தூதுவளை போன்றவற்றை ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் இலைகளைப் போட்டு நன்றாக அலசி எடுக்கவும். காய்கறி, பழங்களைக் கழுவுவதற்காகக் கடைகளில் விற்கப்படும் எந்தவிதமான வெஜிடபிள் வாஷ்களை யும் வாங்கிப் பயன்படுத்த வேண்டாம். அவற்றில் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் உணவோடு சேர்ந்து உணவின் தன்மையையே மாற்றிவிடும். இது உடலுக்கு ஏற்றதல்ல.

தண்ணீரில் மட்டும் கழுவப் பிடிக்காதவர்கள், இரண்டு லிட்டர் தண்ணீரில், மூன்று டேபிள்ஸ்பூன்  அளவு ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, காய்கறி, பழங்களைக் கழுவலாம். ஆனால், வினிகரின் அளவு அதிகமானால், உணவின் சுவையில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தும். காய்கறிகளைக் கடைகளிலிருந்து வாங்கி வந்ததும், உடனே கழுவிவிட்டுப் பிறகு பத்திரப்படுத்த வேண்டாம். கழுவிய காய்கறிகளை அதிகநேரம் வைத்தால் அவை விரைவில் கெட்டுவிடும். எனவே சமைப்பதற்கு முன்னர் கழுவினால் போதுமானது. காய்கறிகளைக் கழுவுவதற்கு முன் உங்கள் கைகளைக் கழுவ மறக்காதீர்கள்!

- க.தனலட்சுமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism