Published:Updated:

சுவாசமே...வாசமே! - மாசு தவிர்க்க மாஸ்க் அணியுங்கள்!

சுவாசமே...வாசமே! - மாசு தவிர்க்க மாஸ்க் அணியுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சுவாசமே...வாசமே! - மாசு தவிர்க்க மாஸ்க் அணியுங்கள்!

முருகன், காது, மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவர்

சுவாசமே...வாசமே! - மாசு தவிர்க்க மாஸ்க் அணியுங்கள்!

முருகன், காது, மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவர்

Published:Updated:
சுவாசமே...வாசமே! - மாசு தவிர்க்க மாஸ்க் அணியுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சுவாசமே...வாசமே! - மாசு தவிர்க்க மாஸ்க் அணியுங்கள்!

சுவாசம்... இதில் ‘வாசம்’ என்ற சொல் இடம்பெற்றிருப்பதால் அது மாசற்றதாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆனால், இன்றைக்கு வாகனக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு மனித உடலுக்குள் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆம், மாசு நிறைந்த காற்றைச் சுவாசிப்பதால் மூக்கின் வாசனைத்திறனே குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதைப் பற்றிப் பார்ப்போமா...

சுவாசமே...வாசமே! - மாசு தவிர்க்க மாஸ்க் அணியுங்கள்!

மூக்கின் உள்ளே

மூக்கின் அளவு, நெற்றியைவிட நீளமானது. நெற்றி எலும்போடு மூக்கு சேரும் இடத்தில் லட்சக்கணக்கான நரம்புகள் காணப்படும். காற்றில் கலந்திருக்கும் நச்சுக்கிருமிகள், தூசு மற்றும் மாசுகள் என அனைத்துமே சுவாசத்தின்போது, நரம்புகளைச் சென்றடையும். இதை எண்டோஸ்கோபி மூலம் பரிசோதித்தால் தான் தெரியவரும். இத்தகைய சூழலில் ஏற்படும் பாதிப்பு, அடைப்பாக மாறும். அந்தப் பிரச்னை பெரிதாகும்போது, மூக்கில் இருக்கும் நுகர்வுத்தன்மைக்கான அணுக்கள் அனைத்தும் பாதிப்படையத் துவங்கும். இது, நாளடைவில் நுகரும் தன்மையைக் குறைத்துவிடும். அப்படிப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் வாசனைத்திறனை இழக்கத் துவங்குவர்.

பகையாகும் சூழல் புகை

போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் மாஸ்க் (அ) மூக்கில் முகமூடி (அ) ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவருக்கு, வாகனங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஸ்-ஆக்ஸைடு, நைட்ரஜன், ஹைட்ரஜன்-சல்ஃபைடு போன்ற எரிவாயுக்கள், மூக்கில் உள்ள மெல்லிய நாசிகளைத் தாக்கி பிரச்னைகளை ஏற்படுத்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுவாசமே...வாசமே! - மாசு தவிர்க்க மாஸ்க் அணியுங்கள்!

அறிகுறிகள்

மூக்கின் உள்ளே இருக்கும் நுகர்வு நரம்புகள் (Olfactory nerves) பாதிப்படையும்போது, அவை பாதிப்படைந்த அளவைப் பொறுத்துச் சிகிச்சை அளிக்கப்படும். பாதிப்பைப் பொறுத்தே அதன் அறிகுறிகளும் அமையும். பெரும்பாலும், மூன்று வகையாக இந்தப் பாதிப்பின் அளவுகோல்கள் இருக்கும். 50 சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்டவர் களால் பூவின் மணம், உணவிலிருந்து வரும் மசாலா வாசனை, பெட்ரோல் வாசனை போன்ற  விஷயங்களைக்கூட உணர முடியாது.

50 முதல் 60 சதவிகிதம் வரையிலான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மூக்கிலிருந்து பக்குகள் (அடை போன்று காய்ந்து காணப்படும்) வந்த வண்ணம் இருக்கும். தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்குகள் வரும். சிறிது நேரம் விட்டால்கூட மூக்கில் அடைப்பு ஏற்பட்டு, அது மெல்லிசான செல்களைக் காயப்படுத்தி, மூக்கிலிருந்து ரத்தம் வழியத் துவங்கும். இது, அட்ரோஃபிக் ரைனைட்டிஸ் (Atrophic rhinitis) என்று கூறப்படும்.

60 சதவிகிதத்துக்குமேல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மூக்கிலிருந்து துர்நாற்றம் வரத் துவங்கும். ஆனாலும், அருகில் இருப்பவர் கூறித்தான் தனது மூக்கில் ஏற்படும் நாற்றம் அவர்களுக்குத் தெரியவரும். பாதிக்கப் பட்டவர்களுக்கு எந்தச் சூழலிலும் அந்த நாற்றம் தெரியாது. இத்தகைய அறிகுறி காணப்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

யாருக்கு வரும்?

மூக்கின் எதிர்ப்புச் சக்தியான, இம்யூனோகுளோபுலின்ஸ் (Immunoglobulins) குறைவாக இருப்பவர்களே இந்த நோயால் பெரிதும் பாதிக்கப்படுவர். உதாரணமாக, தீப்பெட்டித் தொழிற்சாலையில் தினமும் வேலைபார்க்கும் ஒருவருக்கு எந்த அளவு பாதிப்பு ஏற்படுகிறதோ அதேபோல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பவருக்கும் ஏற்படக்கூடும். எனவே, யார் ஒருவருக்கு இம்யூனோகுளோபுலின்ஸ் குறைவாகச் சுரக்கிறதோ, அவர்களுக்கு வாசனைத்திறனில் கண்டிப்பாகப் பாதிப்புகள் வரும்.

இரண்டு மூன்று வருடங்களாக ஒருவர் தொடர்ந்து ஹெல்மெட்/ மாஸ்க் அணியாமல் வாகனங்களில் நெரிசலான இடங்களுக்குப் பயணம் செய்வதைத் தொடர்ந்தால் நிச்சயமாக இந்தப் பாதிப்பு அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். மணல் குவிக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகே உள்ளவர்களுக்கு, இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். மணலில் இருந்து வெளிப்படும் சிலிக்கா (silica) என்ற கெமிக்கல், புற்றுநோயையும் ஏற்படுத்தும்.

எதனால் ஏற்படுகிறது?

மூக்குக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக இன்றைய சமூகத்தில் இருப்பது, மாசுபடுத்தப்பட்ட சுற்றுச்சூழலே. பைக், லாரி போன்ற வாகனங்கள் வெளிப்படுத்தும் கார்பன்-மோனாக்சைடு ஏற்படுத்தக்கூடிய தீங்கு மிகவும் கொடியது. அதுவும் கோடைக்காலத்தில், வறண்டு கிடக்கும் இடங்களிலிருந்து கிளம்பும் நச்சுக்காற்று மிகவும் ஆபத்தானது.

சுவாசமே...வாசமே! - மாசு தவிர்க்க மாஸ்க் அணியுங்கள்!

சிகிச்சை உண்டா?

எண்டோஸ்கோபி செய்து பார்த்து, பாதிப்பின் அளவு கண்டறியப்படும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம், வேறு ஏதாவது செல்களின் வளர்ச்சி இருக்கிறதா என்பதும் பார்க்கப்படும். அதன் பின்னர், பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.  இதுபோன்ற நோய் பாதிப்புகள் வராமலிருக்கச் சில தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. அதாவது, பெருநகரங்களில் வசிக்கும் மக்கள், மாஸ்க் அணியாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.  இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வெளியே செல்ல வேண்டும்.

மாஸ்க் இல்லாவிட்டாலும், வாகன நெரிசல் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் நிற்கும்போது, கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். அவ்வாறான இக்கட்டான சூழலில் திடீரென மாட்டிக்கொள்பவர்கள், சில நொடிகளுக்கு மூச்சுவிடாமல் இருப்பதோடு அந்தக் காற்றைச் சுவாசிக்காமல் இருப்பதும் நல்லது.  தினமும் அதிகாலையில் எழுந்து சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டும். கடற்கரை, மொட்டைமாடி, தோட்டம் எனச் சுத்தமான காற்று உள்ள இடங்களில் நின்று கீழ்க்காணும் மூச்சுப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

1. மூச்சை வாய்வழியாக நன்றாக உள்ளிழுத்து, மூக்கின் வழியாக வேகமாக வெளிவிடுவது.

2. மூக்கின் இரு துவாரங்களில், ஒன்றின்மூலம் மூச்சை உள்ளிழுத்து, மற்றொன்றின்மூலம் வெளிவிடுவது.

இதுபோன்ற பயிற்சிகளைத் தினமும் காலையில் செய்யலாம். இவ்வாறு செய்யும்போது, முந்தைய தினத்தில் ஏற்பட்ட மாசு முழுவதுமாக வெளியேறி மூக்கு சுத்தமாகிவிடும். பாதிப்பு ஏற்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

- ஜெ.நிவேதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism