Published:Updated:

‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்?

 ‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்?
பிரீமியம் ஸ்டோரி
‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்?

எம். பாலமுருகன், நரம்பியல் மருத்துவர்

‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்?

எம். பாலமுருகன், நரம்பியல் மருத்துவர்

Published:Updated:
 ‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்?
பிரீமியம் ஸ்டோரி
‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்?

நீங்கள் என்றாவது உங்கள் வீட்டுக் கதவின் கைப்பிடியை வலது கையால் திறக்கும்போது, இதே கதவை  இடது கைப்பழக்கமுள்ள ஒருவர் எப்படிச் சிரமமில்லாமல் திறக்கிறார் என்று சிந்தித்திருக்கிறீர்களா?

 ‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்?

என்றாவது கருத்தரங்குகளில் இருக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மேசையைப் பார்த்து இது இடது கைப்பழக்கமுள்ள ஒருவருக்கு மிகவும் சிரமமான ஒன்றாயிற்றே என்று கவலை அடைந்திருக்கிறீர்களா?  அவர்கள் மொத்த மக்கள் தொகையில் வெறும் 10% மட்டுமே என்றாலும், வாகனம் ஓட்டுதல் தொடங்கி, கணினியின் விசைப்பலகை வரை நாம் உருவாக்கிய பெரும்பாலான விஷயங்கள் வலது கைக்காரர்களுக்கு மட்டுமே வசதியான விதத்தில் அமைந்துள்ளன. வலது கைப்பழக்கமுடையோர் உருவாக்கிய உலகில் சிரமத்துடனேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இந்த கைப்பழக்கமுள்ளவர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்?

இடது கைப்பழக்கத்துக்கு என்ன காரணம்?

இதற்கு முக்கியக் காரணம், முன்பே அவர்கள் பரம்பரையில் யாரேனும் ஒருவருக்கு இடது கைப்பழக்கம் இருந்திருக்கலாம். வெகு சிலருக்கு இயல்பாகவே வந்தாலும், பெரும்பாலும் இது பெற்றோர் அல்லது மூதாதையர்களிடமிருந்து குழந்தைகளுக்கு வருகின்ற ஒரு பழக்கமாகவே இருக்கிறது. மேலும், பெண்களைவிட ஆண்களில் இடது கைப்பழக்கமுள்ளோர்  23% அதிகமாகக் காணப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
யாரெல்லாம் இடது கைப்பழக்கமுள்ளவர்கள்?

மிகச் சாதாரண கேள்வியாகத் தோன்றினாலும், இது நாம் அறிந்திராத பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை ஒருவர் இடது கையால் எழுதினாலே அவர் இடது கைப்பழக்க முள்ளவர் என்று எடுத்துக்கொள்வோம். ஆனால், தர்க்கரீதியாக இதை அணுகினால், எழுதப் பயன்படுத்தும் கை மட்டும் இதைத் தீர்மானிப்பதில்லை! எழுதுவது தொடங்கி, சாதாரண செய்கைகள், விளையாட்டுகள் மற்றும் கைகளால் செய்யப்படும் சின்னச் சின்ன வேலைகள் வரை, பெரும்பாலும் ஒருவர் எந்தக் கையைப் பயன்படுத்துகிறார் என்பதற்கு விடை ‘இடது’ என்றால், நிச்சயம் அவர் இடது கைப்பழக்க முள்ளவர்தான்! தன்னை அறியமாலே இடக்கையை நீட்டுவது, இயல்பாகவே இடக்கை தான் தன் பலம் என நினைத்துக் கொள்பவர் வரை அனைவருமே இடது கைப்பழக்க முள்ளவர்கள் தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

 ‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்?

இடது என்றாலே ஜீனியஸ்தானா?

“ஏய்! லெஃப்ட் ஹேண்டா நீ?” என ஆச்சர்யம் தொடங்கி “டேய்! அவன் லெஃப்டுடா!” என்ற கேலி, கிண்டல் வரை அனைத்தையும் பார்த்திருப்பார்கள் இடது கைப்பழக்கமுள்ளவர்கள். ‘லெஃப்ட்’ என்றால் ‘ஜீனியஸ்’ என்ற பரவலான ஒரு கருத்தும் நிலவிவருகிறது. அதனை ஏற்றுக்கொள்ள வைக்கும் விதமாகப் பல்வேறு செய்திகளும் ஆராய்ச்சி முடிவுகளும் அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளன. ஆனால், இயல்பில் அவர்களும் வலது கைக்காரர்களைப் போலத்தான்! கைப்பழக்கம் மட்டுமே இங்கே மாறுகிறது, மற்றபடி வலது கைக்காரர் களின் குணாதிசயங்கள் தான் இடது கைக்காரர்களுக்கும் இருக்கும் என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்கள் நரம்பியல் நிபுணர்கள்.

இடது கையில் எழுதப் பழகும் குழந்தைகளை வலது கைப் பழக்கத்துக்கு மாற்றலாமா?

இடது கைப்பழக்கத்தை மாற்ற முயற்சி செய்தால் மனரீதியாக நிறைய பாதிப்புகள் வரும் என்றொரு பொதுவான கருத்து இருக்கிறது. ஆனால், நிஜத்தில்  அதற்கான  வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள். பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இடது கைப்பழக்கத்தை மாற்ற முயற்சி செய்வதற்கு ஒரே காரணம், இது வலது கைக்காரர்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட உலகம் என்பதுதான்! பின்னாளில், இயல்பான வாழ்க்கை வாழ்வது அவர்களுக்குச் சிரமமாகிவிடக்கூடாது என்பதே அவர்களின் கவலை.

நாங்கள் லெஃப்ட்தான்; ஆனா, எப்பவுமே ரைட்!

எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பதால் இடது கைக்காரர்களை நாம் இன்றும் ஆச்சர்யமாகப் பார்க்கிறோம். அதனாலேயே அவர்கள் ஸ்பெஷலாகி விடுகிறார்கள்! உலகெங்கிலும் உள்ள இடது கைப்பழக்கம் கொண்டவர் களைக் கொண்டாடும் விதமாக வருடந் தோறும் ஆகஸ்ட் 13 ‘சர்வதேச இடது கைப்பழக்க முடையோர் தின’மாக அனுசரிக்கப்படுகிறது. இடது கைப்பழக்கம் ஒன்றும் நோயோ பெரிய சிக்கலோ இல்லை என்பதை அறிவுறுத்தும் விதமாகவும் இது குறித்து ஒரு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப் படுகிறது. நிச்சயம் உங்கள் குடும்பத்திலோ அல்லது நண்பர்கள் வட்டாரத்திலோ இடது கைப்பழக்கம் கொண்டவர்கள் இருக்கலாம். அவர்களுக்கு மறக்காமல் வாழ்த்துச் சொல்லி ஊக்கப்படுத்துங்கள். ஒருவேளை,  நீங்களே இடது கைப்பழக்கம் கொண்டவர் என்றால், கையைக் கொடுங்கள். (அட! இடது கையைத்தான்!) நீங்கள் என்றுமே ஸ்பெஷல் என்று உணர்ந்துகொள்ளும் நாள் இது!

- ர. சீனிவாசன்

இடது கைப் பிரபலங்கள்

நடிகர் சார்லி சாப்ளின், விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மாவீரர் அலெக்ஸாண்டர், தத்துவ மேதை அரிஸ்டாட்டில், மகாத்மா காந்தி, மேரி கியூரி, அமெரிக்க அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஒபாமா, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அவரின் மகன் அபிஷேக் பச்சன், கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், எழுத்தாளர்கள் H.G.வெல்ஸ், லீவிஸ் கரோல் என எல்லாத் துறைகளிலும் இடதுகைப்பழக்கம் உள்ளவர்கள் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism