Published:Updated:

“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை!

“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை!
பிரீமியம் ஸ்டோரி
“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை!

“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை!

“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை!

“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை!

Published:Updated:
“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை!
பிரீமியம் ஸ்டோரி
“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை!

புற்றுநோய் என்ற வார்த்தை இப்போதெல்லாம் தலைவலி, காய்ச்சல் போன்று சர்வசாதாரணமாக உச்சரிக்கப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் அதன் துயரம். வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு அது ஏற்படுத்தும் வலி கொஞ்ச நஞ்சமா... அப்படிப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் ஒரு நிமிட ஆறுதலும் கோடி புண்ணியத்தை உண்டாக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களே தங்களின் தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலால் மீண்டுவந்து, அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது, கேட்பவர்களுக்கு இன்னும் தன்னம்பிக்கை கூடும். அத்தகைய மகத்தான பணியைச் செய்பவர்களில் ஒருவர்தான், மும்பையைச் சேர்ந்த ரஷ்மி மெஹ்ரா குமார். ‘ஸ்மைல் வித் ரஷ்மி’ என்ற முகநூல் பக்கம் மூலம் அவரைப் பற்றி அறிந்து தொடர்புகொண்டோம். வார்த்தைகளில் உற்சாகம் பொங்க நம்மிடம் பேசினார்.

“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை!

“மகாராஷ்ட்ராவின் அவுரங்கபாத் எனது சொந்த ஊர். 2000-ம் ஆண்டில் மும்பைக்கு வந்துட்டோம். எம்.பி.ஏ படித்து முடித்த கையோடு கல்யாணமாகி செட்டிலானேன். என் கணவர் செளரப் குமார் நிதி நிறுவனம் நடத்திவருகிறார். எனக்கு இரண்டு குழந்தைகள். நானும் நிதி ஆலோசகராக இருந்தேன். எல்லாமே நல்லாத்தான் போயிட்டிருந்தது. 2016 ஜனவரியில் எனக்குள்ளே சோர்வை உணர்ந்தேன். பயங்கரமான முதுகுவலி வரும்; சாப்பிட்டதும் ஜீரணமாகாத மாதிரியே இருக்கும். ரொம்ப ஹெவியா ஃபீல் பண்ண ஆரம்பிச்சேன். மாதவிடாயும் சரியா வரலை. டாக்டர் சில மாத்திரைகள் எழுதிக்கொடுத்தார். ஆனால், என் உள்ளுணர்வு ‘சோனோகிராபி’ டெஸ்ட் (sonography) எடுத்துக்கச் சொல்லுச்சு. அதை டாக்டர்கிட்டே சொன்னேன். அந்த டெஸ்ட்டில் என் கருப்பையில் கட்டி இருப்பது தெரியவந்தது. கருப்பைப் புற்றுநோய், இந்த ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே நான் என்ன மாதிரியான சவாலை எதிர்கொள்ளப்போறேன்னு உணர்ந்துட்டேன்” என்கிற ரஷ்மியின் குரலில் இருக்கும் நிதானம், ஆச்சர்யப்படுத்தியது.

தொடர்ந்து பேசியவர், ‘‘புற்றுநோய் நிபுணரின் ஆலோசனை, கருப்பை நீக்கும் சர்ஜரி என அடுத்தடுத்த கட்டங்களைச் சந்திச்சேன். ஆரம்பத்தில் உடைஞ்சுபோய் அழுதாலும், கொஞ்சம் கொஞ்சமாக மனசைத் திடப்படுத்திக்கிட்டேன். ஏதோ ஒரு காரணத்துக்காக இறைவன் புற்றுநோயைக் கொடுத்திருக்கிறார்; அதைப் புரிஞ்சுப்போம்னு முடிவெடுத்தேன். ஆபரேஷனுக்குப் பிறகு மருத்துவமனையில இருந்த பத்து நாள் பெரும் வலியானது. அதுவரை என் குழந்தைகளை அவ்வளவு நாள் பிரிஞ்சு இருந்ததேயில்லை. எப்போ வீட்டுக்குப் போவேன்னு தவிச்சுட்டேன். அம்மாவும் அப்பாவும் கூடவே இருந்தாங்க. அப்பா எப்பவுமே எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் கையைப் பிடிச்சுக்கிட்டாலே போதும். பாசிட்டிவ் எனர்ஜி வந்துரும். நான் துவண்டுபோகும்பொதெல்லாம் என் கணவர் ஆறுதல்படுத்தினார்.

என் குழந்தைகளுக்கு இந்த விஷயத்தை எப்படிச் சொல்றதுன்னு யோசிச்சேன். அப்போ என் மகன் எட்டாம் வகுப்பு படிச்சுட்டிருந்தான். அவனுக்கு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கைப் பிடிக்கும். அவர் எழுதின ‘தி டெஸ்ட் ஆஃப் மை லைஃப்’ புத்தகத்தைப் படிக்கக்கொடுத்தேன். அவன் அதைப் படிச்சு முடிச்சதும், ‘அம்மாவுக்கு இப்படி ஒரு நோய் வந்திருக்கு. தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கிட்டா நான் குணமாயிடுவேன்’னு சொன்னேன். அதுக்கு அவன் ‘நீயும் யுவராஜ் சிங் மாதிரியே அமெரிக்காவுக்குப் போய் சிகிச்சை எடுத்துக்கோ’னு சொன்னான். இப்படி ஒரு பக்குவமான பதிலைக் கேட்டதும் சந்தோஷப்பட்டேன். ‘இங்கேயே சிகிச்சை எடுத்துக்கிறேன்’னு சொன்னேன். என் பொண்ணு ஐந்தாம் வகுப்பு படிச்சுட்டிருந்தாள். ‘அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைடா’னு மட்டும் சொன்னேன்” என்று அந்த நிமிடங்களைக் கண் முன்பு கொண்டுவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை!

“21 நாள்களுக்கு ஒருமுறை கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கணும். அதை வெள்ளிக்கிழமையில்தான் எடுத்துப்பேன். ஏன்னா, கீமோதெரபி செஞ்ச வலி மூன்று நாள்கள் இருக்கும். வெள்ளிக்கிழமை செஞ்சுக்கிட்டா, அடுத்துவரும் விடுமுறை நாள்களில் குடும்பம் சூழ இருந்து வலியை மறக்கலாமே. என் மகன், ‘உனக்கு என்ன வேணும்மா? நான் மசாஜ் பண்ணி விடவா?’னு கேட்கும்போது கண்கலங்கிடுவேன்’’ என்ற ரஷ்மியின் வார்த்தைகளில் அன்பை உணரமுடிகிறது.

நோயிலிருந்து மீண்ட பிறகு, ‘ஸ்மைல் வித் ரஷ்மி’ என்ற முகநூல் பக்கத்தைத் தொடங்கியிருக்கிறார் ரஷ்மி.

 ‘‘என்னை மாதிரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆரம்ப நிலையில் இருக்கிறவங்களோட பயத்தையும் சந்தேகங்களையும் போக்கும் நோக்கத்தோடு இதை ஆரம்பிச்சு நிறைய விஷயங்களைப் பதிவிட்டேன். பலரும் என்கிட்ட ஆலோசனை கேட்க வந்தாங்க. தொடர்ந்து, `கேன்சர் கோ’ (Cancer Go) என்கிற தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பிச்சேன். டெல்லி, மும்பை, கொல்கத்தா என இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குப் போய் இந்த நிகழ்ச்சிகளை நடத்திட்டிருக்கேன். அதையெல்லாம் என் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிடுகிறேன். வலிகளோடு இருக்கிறவர்களுக்கு நாம் சிந்தும் புன்னகை பெரும் தன்னம்பிக்கையைக் கொடுத்து நோயை விரட்டும். என்னாலான சின்ன சேவை இது’’ என்கிறார் ரஷ்மி.

புன்னகையால் புற்றுநோயை எதிர்கொண்டவரின் மயிலிறகுச் சேவை பரவட்டும்!

- ஷோபனா எம்.ஆர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism