Published:Updated:

கணக்கு கசப்பதேன்?

கணக்கு கசப்பதேன்?
பிரீமியம் ஸ்டோரி
கணக்கு கசப்பதேன்?

கணக்கு கசப்பதேன்?

கணக்கு கசப்பதேன்?

கணக்கு கசப்பதேன்?

Published:Updated:
கணக்கு கசப்பதேன்?
பிரீமியம் ஸ்டோரி
கணக்கு கசப்பதேன்?

ந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுமி லீனா. ஆங்கிலம், தமிழ், அறிவியல்... என அனைத்துப் பாடங்களிலும் படுசுட்டி. ஆனால், அவளிடம் யாராவது ``எயிட் ப்ளஸ் ஃபைவ் இஸ் ஈக்வல் டு?’’ என்று கேட்டால் இரண்டு நிமிடங்கள் யோசித்துவிட்டு, “லெவன்” என்பாள். ``இரண்டையும் மூன்றையும் கூட்டினால் எவ்வளவு வரும்?’’ என்று கேட்டாலும் சற்று யோசித்துவிட்டுத் தவறான ஒரு விடையைத்தான் கூறுவாள்.
 
எளிமையான கூட்டல், கழித்தல் கணக்கு போடக்கூடச்  சிரமப்படுவாள் லீனா. ஆனால்,  எந்தத் தலைப்பு கொடுத்தாலும் பிழையின்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரை எழுதும் அளவுக்குத் திறமை படைத்தவள்.  

கணக்கு கசப்பதேன்?

ஒவ்வொரு கணக்குத் தேர்வுக்கும் புத்தகத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பாள். புத்தகத்தில் உள்ள எண்களைச் சரியாக அடையாளம் காண முடியாமல் தடுமாறுவாள். `21’ என்று இருந்தால் அதை `12’ என்று படிப்பாள். அவளின் நிலை அவள் பெற்றோருக்குப் பரிதவிப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு நாளும் கணக்குப் புத்தகத்தோடு அவள் போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்க அவர்களால் முடியவில்லை.

வீட்டில் அம்மாவும் பள்ளியில் கணக்கு ஆசிரியையும்  லீனாவுக்குப் பலமுறை சொல்லிக் கொடுத்துப் பார்த்து ஓய்ந்துபோய்விட்டார்கள். ஆனாலும், அவளால் கற்றுக்கொள்ள முடியவில்லை. மற்ற பாடங்கள் லீனாவுக்கு எளிமையாக இருக்க, கணக்கு மட்டும் ஏன் கசக்கிறது... இதற்குத் தீர்வுதான் என்ன? 

டிஸ்கால்குலியா (Dyscalculia) எனும் எண் மயக்கம்!

லீனாவுக்கு ஏற்பட்டுள்ளது `டிஸ்கால்குலியா’ எனும் எண் மயக்கக் குறைபாடு. இது நோய் அல்ல... ஒரு கற்றல் குறைபாடு. இதைக் ‘குறிப்பிட்ட கற்றல் இயலாமை’ (Specific Learning Disability-SLD) என்கிறோம்.

உலகத்தில் ஆறு சதவிகிதக் குழந்தைகளுக்கு  ‘டிஸ்கால்குலியா’ என்கிற கற்றல் குறைபாடு இருக்கிறது. இந்தியாவில் 12 சதவிகிதக் குழந்தைகளுக்கு இது இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணக்கு கசப்பதேன்?

அனைவருக்குமே கணிதக் கோட்பாடுகளைக் கற்றுக்கொள்ள நேரமும் பயிற்சியும் தேவை. ஆனால், ஒரு குழந்தைக்குப் போதுமான நேரமும் கூடுதல் பயிற்சியும் தரப்பட்ட பிறகும்கூட அந்தக் குழந்தை கணக்குப்போடச் சிரமப்படுகிறதா... கணிதக் கோட்பாடுகளைப்  புரிந்துகொள்வதில் தாமதம் ஏற்படுகிறதா... அப்படியானால், அந்தக் குழந்தைக்கு ‘டிஸ்கால்குலியா’ பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது எனப் புரிந்துகொள்ளலாம்.

கணிதப் பாடத்தில் மட்டுமே இவர்களுக்குக் கற்றல் குறைபாடு இருக்கும். மற்றபடி தனிப்பட்ட கலைத்திறன், விளையாட்டு, திட்டமிடுதல், முடிவெடுத்தல் எனப் பல விஷயங்களிலும் சுறுசுறுப்பான, புத்திசாலியான குழந்தைகளாகவே இருப்பார்கள். இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. மருத்துவத்தால் இதைத் தீர்க்கவும் முடியாது. சரியான பயிற்சிகள் மூலமாகத்தான் சரிசெய்ய முடியும்.

இந்தக் குறைபாடு ஏன் உண்டாகிறது?

பொதுவாக, குழந்தைகளை  மூன்று வகையான கற்றல் குறைபாடுகள் பாதிக்கின்றன.

‘டிஸ்லெக்ஸியா’ (Dyslexia)... இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எழுத்துகளை அடையாளம் காண முடியாமல் தடுமாறுவார்கள்.

‘டிஸ்பிரெக்ஸியா’ (Dyspraxia)... இந்தக் குறைபாடு இருந்தால் தாங்கள் எழுத நினைப்பது நினைவில் இருந்தாலும், குழந்தைகளால் கோவையாக எழுத முடியாது.

‘டிஸ்கால்குலியா’ (Dyscalculia)... கணக்கில் தடுமாற்றம், எண்களில் குழப்பம். இது ஏற்படுவதற்கான காரணம் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், `மரபணுக்கள் மற்றும் மரபுவழியாக இந்தக் கற்றல் குறைபாடு ஏற்படலாம்’ என்கிறார்கள் மருத்துவர்களும் ஆய்வாளர்களும்.

இது நரம்பியல் சார்ந்தும் உளவியல் சார்ந்தும் ஏற்படலாம். திருமண வயது கடந்த பின்னர் மணம் முடிப்பதாலும், மது அருந்திய பின்னர் உடலுறவு கொள்வதாலும், கர்ப்பம் தரிப்பதற்காக அதிக மருந்துகளை உட்கொள்வதாலும், கர்ப்பக் காலத்தில் அதிக மருந்துகள் எடுத்துக் கொள்வதாலும் இது ஏற்படுவற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை வரும் முன்னே தடுக்க முடியாது என்பதே உண்மை.
டிஸ்கால்குலியாவைப்  போக்குவதற்கான வழிகள்...

எளிய பயிற்சிகள்

இந்தப் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு நாம் வழக்கமாகக் கற்றுக் கொடுப்பதைப்போல் கற்றுக்கொடுத்தால், அவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. எனவே, அவர்களுக்கு ‘மல்டி சென்சரி’ (Multi Sensory) அணுகுமுறையில் கற்றுக்கொடுக்க வேண்டும்.

அதாவது கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, கையால் தொட்டு உணரவைத்துக் கற்றுக் கொடுக்கும் முறைக்கு ‘மல்டி சென்சரி’ என்று பெயர். இந்த முறையில் கற்றுக் கொடுத்தால், அவர்களால் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். மேலும்,  ‘மேனிபுலேட்டிவ்’ (Manipulative)  எனும் ஒரு வழிமுறையும் உண்டு. பொருள்களுடன் எண்களை இணைத்து எண்ணுவதற்குக் கற்றுக்கொடுக்கும் முறை.
உதாரணமாக, `3 மாம்பழங்கள், 5 பென்சில்கள்’ என்று சொல்லும்போது அந்தப் பொருள்களைக் கையில் கொடுத்துக் கற்றுக்கொடுக்க வேண்டும். இப்படிக் கற்றுக் கொடுப்பது அவர்களுக்கு எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.

முந்தைய காலங்களில் குழந்தைகளின் விரல் பிடித்து மணல் - அரிசியில் எழுதக் கற்றுக் கொடுத்தார்கள். இது போன்ற பயிற்சிகள், `நுண் நரம்பியல் பயிற்சிகள்’ எனப்படும். இதேபோல சார்ட்டில் எழுதியும் குழந்தைகளுக்கு விளக்கலாம். ‘அபாகஸ்’ மணிச் சட்டங்கள் மூலமாகச் சொல்லித் தரலாம்.  காணொலிக் காட்சிகள் மூலமாகவும் சொல்லிக்கொடுக்கலாம்.

குழந்தைகளை மனதளவில் தயார் செய்வது எப்படி?

பெற்றோர் தங்கள் குழந்தைகளின் தனித்திறன் களைக் கண்டறிந்து ஊக்கம் தர வேண்டும். இது குழந்தையின் சுயமதிப்பை மேம்படுத்தும், தன்னம்பிக்கையை  அதிகரிக்கச் செய்யும். பெற்றோர் பாராட்டினால் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கும். குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டுபிடிப்பதில் ஆசிரியர்களின் பங்கும் முக்கியமானது.

கணக்கு கசப்பதேன்?

ஆசிரியர்கள்  ஒரு குழந்தையிடம் இதுபோன்ற குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தால்,  உடனே பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும். கல்வித்திறன் குறைவாக உள்ள குழந்தைகளை, `இவர்கள் புத்திசாலிகள் அல்ல, மக்குகள்’ என ஆசிரியர்கள் முடிவுசெய்துவிடக் கூடாது. அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுக்கும் ஊக்கமும் எளிமையான பயிற்சிகளும் இருந்தால், இந்தக் குறைபாட்டிலிருந்து குழந்தைகளை எளிதாக மீட்டெடுத்துவிட முடியும்.

20-ம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், கற்றல் குறைபாடு உடைய குழந்தைதான். ஆனால், அவரின் சாதனைகள் மகத்தானவை. அதேபோல சரியான பயிற்சியும் ஊக்கமும் கொடுப்பது இந்தக் கற்றல் குறைபாட்டில் இருந்து குழந்தைகளை மீட்பதோடு, பல்வேறு சாதனைகளையும் படைக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

- அஷ்வினி சிவலிங்கம், ஆர். செந்தில் குமார்

படங்கள்: ப.சரவணக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism