பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

``எனக்கு 43 வயதாகிறது. தாம்பத்யத்தின்போது வலி ஏற்படுகிறது. என்ன காரணமாக இருக்கும்? மெனோபாஸ் சமயமாக இருக்குமோ எனில் அதனால் வலி ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?”

வி.அஞ்சலி, காஞ்சிபுரம்.

கன்சல்ட்டிங் ரூம்


 
``மாதவிடாயின் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவிலும் வெளியேறினால், கருப்பையின் எண்டோமெட்ரியோசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறும். எண்டோமெட்ரியோசிஸ் பிரச்னை இருந்தால் தாம்பத்யத்தின்போது வலி ஏற்படலாம். பிறப்புறுப்பு வறண்டுபோய் இருந்தாலும், உறவின்போது வலி ஏற்படலாம். அம்மாதிரியான சமயங்களில் கிரீம் தடவினால் சரியாகிவிடும். ஹார்மோன் பிரச்னையாலும் கர்ப்பப்பையில் சவ்வு ஒட்டி இருந்தாலும்கூட இந்தப் பிரச்னை ஏற்படலாம். பொதுவாக 51 வயதைத்தான் மெனோபாஸ் என்போம். சிலருக்கு முன்னதாகவே மெனோபாஸ் ஏற்படலாம். மகப்பேறு மருத்துவரை அணுகி இதில் உங்களுக்கு எந்தப் பிரச்னை எனக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.’’

கன்சல்ட்டிங் ரூம்

 “பிறந்த குழந்தையை எத்தனை நாள்களுக்கு ஒருமுறை குளிப்பாட்டலாம்? பேபி ஆயில் தடவிக் குளிப்பாட்டுவது அவசியமானதா?”

எம்.ஜெயராணி, தஞ்சாவூர்.

“எந்த ஆரோக்கியப் பிரச்னையுமின்றி இயல்பான எடையுடன் பிறந்த குழந்தையைத் தினமும் தலைக்குக் குளிக்க வைக்கலாம். எவ்விதப் பிரச்னையும் ஏற்படாது. பிறந்த குழந்தைக்குத் தொப்புள்கொடி விழும்வரை கவனமாகப் பார்த்துக்கொள்வது அவசியம். குளிக்க வைக்கும்போது அந்த இடத்தை உடனே துடைத்து ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. பேபி ஆயிலைத் தலைக்குத் தேய்க்காமல் உடலில் மட்டும் தேய்த்துக் குளிக்க வைக்கலாம். ஆயில் தடவி மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தைத் தூண்டும் என்பதால் குழந்தைக்கு நல்லது. ஆனால், தலைக்குத் தேய்க்கும்போது கண்களில் பட வாய்ப்புள்ளது என்பதால் தவிர்க்கவும்.’’

கன்சல்ட்டிங் ரூம்

``என் மகளுக்கு 15 வயதாகிறது. எப்போதும் சூயிங்கம் மென்றுகொண்டே இருக்கிறாள். அந்தப் பழக்கத்தை நிறுத்தச் சொன்னால், அது முகத்தசைகளுக்கான பயிற்சி என்று யாரோ சொன்னதாகச் சொல்கிறாள். சூயிங்கம் மெல்வது ஆரோக்கியமானதா? அந்தப் பழக்கத்தை நிறுத்த என்ன வழி?”

அ.ஐஸ்வர்யா,
சென்னை.

``மாடு அசைபோட்டுக்கொண்டே இருப்பது போல் சூயிங்கம் மென்றுகொண்டே இருப்பது இன்றைய தலைமுறையினரிடம் ஒரு பழக்கமாக வளர்ந்து வருகிறது. பெற்றோர் சிறுவயதிலிருந்தே குழந்தைளின் பழக்கங்களைக்  கவனிக்க வேண்டும். இந்த மாதிரியான பழக்கம் இருக்கும் குழந்தைகள் சூயிங்கம் வாங்க அடிக்கடி கடைக்குச் செல்வார்கள். அங்கு வேறு ஏதேனும் வாங்கிச் சாப்பிடுகிற பழக்கமும் தொற்றிக்கொள்ளும். ஆரோக்கிய ரீதியாகப் பேசும்போது, சூயிங்கம் மெல்வது முகத்தசைகளுக்கான பயிற்சி என்று எடுத்துக்கொள்ள முடியாது. அனைவரிடமும் நன்றாகப் பேசுவதும், வாய்விட்டுச் சிரிப்பதுமே முகத்தசைகளுக்கான நல்ல பயிற்சியாக அமையும். அதைச் செய்தாலே போதுமானது. ஒரு நாளைக்கு எத்தனை சூயிங்கம் சாப்பிடுகிறார்கள்? எப்பொழுதெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம், கொஞ்சமாக எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். சூயிங்கம் சாப்பிடுவதற்குப் பதிலாகப் பழங்கள், நட்ஸ் எனச் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கலாம். இப்படிப் படிப்படியாகக் குறைத்து, ஒரு கட்டத்தில் முழுமையாக இப்பழக்கத்தை கைவிடவைக்க வேண்டும். சுயக்கட்டுப்பாட்டோடு உங்கள் மகள் சூயிங்கம் மெல்லும் பழக்கத்திலிருந்து வெளிவர வலியுறுத்துங்கள்.”

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு