`ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டும்’ என்பது பழமொழி. அதுபோல் சில எண்ணிக்கைகள்தான் நம் உடல் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. அவை...

ரோபோ மாதிரி ஒரே இடத்தில் அப்படியே உட்கார்ந்து வேலை செய்யக் கூடாது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது எழுந்து நிற்க வேண்டும். சிறிது தூரம் நடக்க வேண்டும். இது நமக்குத் தூக்கம் வராமல் காப்பாற்றுவதோடு நம் உடம்பில் உள்ள ரத்த அளவையும் கொலஸ்ட்ராலின் அளவையும்கூட சீராகப் பராமரிக்க உதவும்.

ஒரு நாளைக்கு நாம் குடிக்கும் மூன்று கப் காபி நமக்கு உற்சாகத்தைத் தரும். அதோடு நம் உயிரையும் காப்பாற்றுமாம். `காபியில் உள்ள உயிரியக்கச் சேர்மங்கள்’ (Bioactive Compounds) நம் உடலில் இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். சர்க்கரையின் மூலமாகவோ, நரம்பு தொடர்பான நோய்கள் மூலமாகவோ ஏற்படும் மரணங்களைத் தடுக்கும்’ என்கின்றன ஆய்வுகள்.

நம் ஆயுளை அதிகரிக்க தினமும் 25 நிமிடங்கள் நடந்தாலே போதும். அப்படி நடந்தால் நமக்கு ஏழு வருட வாழ்க்கை எக்ஸ்ட்ரா கிடைக்கும் என்று சொல்கிறது ஜெர்மன் ஆராய்ச்சி ஒன்று. 50 வயதுக்குமேல் உள்ளவர்கள் அவசியம் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் ஹார்ட் அட்டாக் மட்டும் அல்ல, எந்த அட்டாக்கும் ஒன்றும் பண்ண முடியாது.

`நொறுங்கத் தின்றால் நூறு வயது.’ ஒவ்வொரு வேளை உணவையும் குறைந்தது 40 முறையாவது மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.

ஒரு கஷ்டமான வேலையை மூளையைக் கசக்கிச் செய்து முடித்துவிட்டால், அடுத்தது நமக்குத் தேவை சிறிய ரெஸ்ட். 45 நிமிடங்களாவது குட்டித் தூக்கம் போட்டால், ஃப்ரெஷ்ஷாக அடுத்த வேலைக்குத் தயாராகலாம்.

`ரெண்டு வாரம் வாக்கிங் போனேன். அவ்ளோதான். அதுக்கப்புறம் போக முடியலை. அப்படியே விட்டுட்டேன் . என்ன பண்றதுன்னே தெரியலை...’ எனப் புலம்பவே வேண்டாம். எந்த ஒரு செயலாக இருந்தாலும் 66 நாள்கள் செய்யவேண்டுமாம். அப்போதுதான் அது பழக்கமாகும். ‘66’ ரொம்ப முக்கியம் பாஸ்.

நாம் ஓய்வாக இருக்கும் நேரத்தில் நம் இதயம் யாருக்காகத் துடித்தாலும் எதற்காகத் துடித்தாலும் நிமிடத்துக்கு 76 முறைதான் துடிக்க வேண்டும். அதிலும் பெண்களுக்கு அதிகமாகத் துடித்தாலும் 62 முறைக்குக் குறைவாகத் துடித்தாலும் அலெர்ட் ஆக வேண்டியது அவசியம்.

துவைக்காத சாக்ஸ் மட்டும் அல்ல... 800 கி.மீ தூரம் ஓடியதற்குப் பிறகு பயன்படுத்தும் ஷூக்களும் ஆபத்தானவைதான். `அதான் ஷூ புதுசு மாதிரியே இருக்கே’ என்று வைத்துக்கொள்ளக் கூடாது. கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும். அதற்கு ஆயுள் அவ்வளவுதான்.