பிரீமியம் ஸ்டோரி
பிஎம்ஐ அறிவோமா?

டலைக்  கட்டுக்கோப்பாக   வைத்துக்கொள்ள நாம் பல முயற்சிகள் எடுக்கிறோம். அவற்றின் பலன்களை உறுதிசெய்ய உதவுவது  பிஎம்ஐ  எனப்படுகிற ‘பாடி மாஸ் இன்டெக்ஸ்’ (BMI - Body Mass Index) அளவீடு.

பாடி மாஸ் இன்டெக்ஸ் ஒருவரின் உடல் எடை மற்றும் உயரத்தை ஒப்பிட்டு, உடலின் கொழுப்பின் அளவைக் கணக்கிட உதவும்.

உங்கள் பிஎம்ஐ அளவு சரியாக இருக்கிறதா?


* 18.5-க்கும் குறைவாக இருந்தால் குறை எடை.

* 18.5 - 24.9 அளவுக்குள் இருந்தால் சரியான அளவு.

* 25.0 - 29.9 என்ற அளவுக்குள் இருந்தால் அதிக எடை.

* 30-க்கு மேல் அதிகமாக இருந்தால் உடல் பருமன்.

பிஎம்ஐ அறிவோமா?

பிஎம்ஐ அதிகரித்தால் வரக்கூடிய பிரச்னைகள்

* இதய நோய்.

* உயர் ரத்த அழுத்தம்.

*  எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரித்தல்.

* ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்பு குறைதல்.

* டைப் 2 சர்க்கரை நோய்.

* சுவாசக் கோளாறு.

* பித்தநீர்க்கட்டி.

* கல்லீரல் பாதிப்பு.

* ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் (Osteoarthritis) (முழங்கால் மூட்டு வலி).

* ஸ்லீப் ஆப்னியா (Sleep Apnea).

* பல்வேறுவிதமான புற்றுநோய்கள்.

பிஎம்ஐ சரியாக வைத்துக்கொள்ள:

நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், புரதம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு குறைவாக உள்ள பால் பொருள்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெயில் வறுத்த உணவுகள், முட்டை, கொழுப்பு நிறைந்த உணவுகள், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

சாக்லேட், பீட்ஸா, பர்கர், ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

- ச. மோகனப்பிரியா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு