Published:Updated:

சின்னம்மை நோயை உருவாக்கும் வைரஸ்... பயோ வார் எச்சரிக்கை..!

சின்னம்மை நோயை உருவாக்கும் வைரஸ்... பயோ வார் எச்சரிக்கை..!
சின்னம்மை நோயை உருவாக்கும் வைரஸ்... பயோ வார் எச்சரிக்கை..!

சின்னம்மை நோயை உருவாக்கும் வைரஸ்... பயோ வார் எச்சரிக்கை..!

`பயோ வார்...' இதைச் சொல்லும்போதே `ஏழாம் அறிவு' படம் மண்டையில் `பளிச்'சென்று ஃப்ளாஷ் ஆகி நினைவுக்கு வந்துசெல்லும். அந்தப் படத்தின் வில்லன், `அம்மை' மாதிரியான ஒரு நோயின் வைரஸை தெருவில் நிற்கும் ஒரு நாயின் மூலம் பரப்பி விட்டுச் செல்வார். சில நாள்களில் நோய் பாதிக்கப்பட்டு கொத்துக் கொத்தாக மக்கள் இறந்து போவதுபோல் காட்டியிருப்பார்கள். 

`இதெல்லாம் சும்மா படத்துக்காகக் காட்டுறாங்க' என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால், உண்மையில் `பயோ வார் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. சமீபத்தில் அதற்கான ஓர் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்கிறது, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாக அமைப்பு (FDA - Food and Drug Administration)!

 வரிசெல்லா ஜோஸ்டர் (Varicella Zoster) என்ற வைரஸ் கிருமியால் பரவக்கூடிய தொற்று நோய், சின்னம்மை. இது குழந்தைகளையும் முதியவர்களையும்தான் அதிகமாகத் தாக்கும். ஐந்து முதல் பத்து நாள்கள் வரை உடலில் தங்கியிருந்து தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு மனிதரிடமிருந்து தும்மல், சளி, இருமல் வழியே மற்றொருவருக்குப் பரவும். உடலுக்குள் புகுந்த மூன்று வாரத்தில் வெரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ், தன்னுடை பாதிப்பைக் காட்ட ஆரம்பிக்கும். அதிகபட்சமாக, 102 டிகிரி பாரன்ஹீட் வரை காய்ச்சல் அடிக்கும். தொண்டை, நுரையீரலில், தோலில் புண்களை ஏற்படுத்தும். இது நரம்பியல் மண்டலத்தைத் தாக்க வாய்ப்புகள் உண்டு. மூளைக் காய்ச்சல், நிமோனியா மற்றும் சிறுமூளைப் பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் சின்னம்மை வந்துவிட்டாலே பலருக்கு பயம் தொற்றிக்கொள்ளும். அந்த அளவுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

20 -ம் நூற்றாண்டில் ஏறக்குறைய 300 மில்லியன் மக்கள் சின்னமை நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். உயிர்க்கொல்லி நோய் என்று சொல்லுமளவுக்கு உயிர்ப்பலி வாங்கியது. அதன்பிறகு தகுந்த சிகிச்சை முறை மற்றும் தடுப்பூசிகள் மூலம் 1980-ம் ஆண்டின் தொடக்கத்தில் சின்னம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட்டார்கள். ஆனாலும் அந்த வைரஸ் கிருமியின் சில சாம்பிள்கள் மட்டும் ஒரு சில ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக, பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

1980-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த யாருக்கும் சின்னம்மை நோய்க்கான தடுப்பூசிகள் போடப்படுவதில்லை. இந்தச் சூழ்நிலையில், ``இத்தகைய கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் தீவிரவாத இயக்கங்களின் பிடியில் சிக்கி `பயோ வார்' ஆயுதமாக (Bio-war Weapon) மாற வாய்ப்புள்ளது" என்று அமெரிக்காவின் எப்டிஏ (FDA) அமைப்பு பகீர் தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்காக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாக அமைப்பு கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி முதல்முறையாகச் சின்னம்மை நோயைக் குணப்படுத்துவதற்கான TPOXX என்ற மருந்துக்கு ஒப்புதல் தெரிவித்தது. அத்துடன் அதற்கான செலவுத் தொகையையும் ஒதுக்கியுள்ளது.

அத்துடன் அந்த மருந்தின் சிகிச்சைத் திறனையும் பாதுகாப்புத் தன்மையையும் தெரிந்துகொள்ள சின்னம்மை மாதிரியான வைரஸால் பாதிக்கப்பட்ட குரங்கு மற்றும் முயல்களுக்குச் சோதனை அடிப்படையில் பரிசோதனை செய்திருக்கிறார்கள். அதில் 90 சதவிகித விலங்குகள் உயிர் பிழைத்தன. இதுவே TPOXX மருந்துக்கான அசத்தலான வெற்றியாகும்.

இதன் மூலம் சின்னம்மை நோயின் வைரஸ், பயோ வாரில் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டாலும் மக்களைக் காக்க கூடுதல் வாய்ப்புள்ளதாக FDA நிர்வாகம் தெரிவித்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு