Published:Updated:

ஃபிட்னஸ் முக்கியம்தான்.. உடலை வருத்திக்க வேணாமே! - பிரியா பவானி சங்கரின் ஸ்லிம் சீக்ரெட்

ஃபிட்னஸ் முக்கியம்தான்.. உடலை வருத்திக்க வேணாமே! - பிரியா பவானி சங்கரின் ஸ்லிம் சீக்ரெட்

``நல்லாச் சாப்பிடுவேன்... அதுக்கேத்தமாதிரி ஒர்க் அவுட் பண்ணுவேன்!’’ - பிரியா பவானி சங்கரின் ஸ்லிம் ரகசியம்

ஃபிட்னஸ் முக்கியம்தான்.. உடலை வருத்திக்க வேணாமே! - பிரியா பவானி சங்கரின் ஸ்லிம் சீக்ரெட்

``நல்லாச் சாப்பிடுவேன்... அதுக்கேத்தமாதிரி ஒர்க் அவுட் பண்ணுவேன்!’’ - பிரியா பவானி சங்கரின் ஸ்லிம் ரகசியம்

Published:Updated:
ஃபிட்னஸ் முக்கியம்தான்.. உடலை வருத்திக்க வேணாமே! - பிரியா பவானி சங்கரின் ஸ்லிம் சீக்ரெட்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான `கல்யாணம் முதல் காதல் வரை’ நெடுந்தொடரில் நடித்து, ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் நடிகை பிரியா பவானி சங்கர். அப்படியே, பெரிய திரைக்குள் வந்து `மேயாத மான்' படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தும் பெற்றார். தொடர்ச்சியாக அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் அவற்றையெல்லாம் தவிர்த்தார்.

‘கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்’ என்று அதற்கு விளக்கமும் அளித்து வந்தார். இந்த நிலையில், கார்த்தியுடன் `கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தார். தற்போது எஸ்.ஜே.சூர்யா, உதயநிதி உள்ளிட்டோரின் படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய ஃபிட்னெஸ் சீக்ரெட் குறித்து இங்கே பகிர்ந்துகொள்கிறார்..

``தினமும் ஜிம்மிக்குப் போய் ஒரு மணி நேரம் வரை வொர்க் அவுட் செய்வேன். இதில், ‘கார்டியோ எக்சர்சைஸ்’, ‘ஃப்ளோர் எக்சர்சைஸ்’, ‘ஸ்ட்ரென்த் எக்சர்சைஸ்’ நிச்சயமாக இருக்கும். விடுமுறையைக் கொண்டாட வெளியூர் செல்லும்போது ‘டிரக்கிங்’ போவேன். அழகான சாலைகளில் ஏழு கிலோ மீட்டர் வரை ‘சைக்கிளிங்’ போவது ரொம்பப் பிடிக்கும். வனப்பகுதியில் தனியாக நடப்பது என்றால் எனக்கு அவ்ளோ இஷ்டம். ‘சம்பாதிப்பதே சாப்பிடுவதுக்குத்தானே’ என்ற லாஜிக்கை நம்புறேன். அதனால, சாப்பிட்டதுக்கு ஏற்ப வொர்க் அவுட் செய்தால் போதும் என நினைப்பேன். கூடுமானவரை உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வேன். மற்றபடி, ஜிம்மில் தவம் கிடப்பது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. 

சென்னையைத் தவிர்த்து, வெளியூர் படப்பிடிப்புக்குச் செல்லும்போது வெஜிடேரியன், நான்வெஜிடேரியன், சைனீஸ் வகை உணவுகளை நிறைய சாப்பிடுவேன். ஹெல்த் டிரிங்ஸ் எடுத்துக்க மாட்டேன். என்னுடைய ஃபேவரைட் உணவு, பாசுமதி அரிசியில் செய்யப்பட்ட செட்டிநாடு மட்டன் பிரியாணிதான். சிலநாள்களாக வெஜிடேரியனாக இருக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கிறேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு பொண்ணு அழகா, ஒல்லியா இருக்கணும். வெயிட் போடக்கூடாது. இதுலல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நம்முடைய கண்ணுக்கு நாம அழகா தெரிஞ்சா போதும். உடலை ஆரோக்கியமா வெச்சுக்கணும். அதுதான் முக்கியமே தவிர, உடம்பை வருத்திக்கிறதுல இல்லை..” அழகாகச் சொல்கிறார் பிரியா பவானி சங்கர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism