ஒரு காலத்தில், தங்கத்துக்கு நிகராக நறுமணமூட்டிகளுக்கு மதிப்பு இருந்தது. நறுமணமூட்டிகளின் பயன்களைத் தெரிவிக்கும், கி.மு 2000 காலகட்டத்தைச் சேர்ந்த பழைமையான குறிப்புகள் கிடைத்துள்ளன. நோய்களின் தாக்குதல் நிறைந்த அவசரக் காலங்களில் மிளகு, பூண்டு, பெருங்காயம் போன்றவை தனி மருந்தாகப் பயன்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. மறைக்கப்பட்ட `நறுமணப் பொருள்களின் தீவு’ (Spices Island) ஒன்றைத் தேடி, கொலம்பஸ் பயணித்தபோதுதான் அமெரிக்காவைக் கண்டுபிடித்திருக்கிறார்.

வரலாற்றுப் பாதையில் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, பெருங்காயம், ஏலக்காய் போன்றவற்றில் இருந்து வரும் வாசனையின் காரணமாக, முதலில் அவற்றை நறுமணமூட்டிகளாக மட்டும் பார்த்தது மனித சமுதாயம். காலப்போக்கில் அவற்றில் உள்ள மருத்துவக் குணங்களைக் கருத்தில்கொண்டு, நோய் தீர்க்கும் மருந்துகளாகவும் பார்க்க ஆரம்பித்தது. பசி உணர்வைத் தூண்டுவதற்காகப் பயன்பட்ட சமையல் கலையும் அதன் நுணுக்கமும், விரைவில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காரணிகளாக உருவெடுத்தன. அதற்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த இயற்கை மசாலாப் பொருள்களும் முக்கியக் காரணம் என்பதில் சந்தேகமில்லை.

உணவை முழுமையடையச் செய்யும் இந்த இயற்கை சார்ந்த பொருள்கள், நெடுங்காலமாக நம் வாழ்க்கையில் இணைந்தே வருகின்றன. மொத்தமாக இவற்றை மசாலாப் பொருள்கள் என்று நாம் பெயர்சூட்டி அழைத்தாலும், அவை நோய்களை விரட்டும் ‘மருத்துவப் பொருள்கள்' என்பதே உண்மை. உணவே மருந்தாகப் பயன்படும் நம் முன்னோரின் தத்து வத்தின் அடிப்படையில் செயலாற்றுபவை.

இயற்கை மசாலாப் பொருள்களை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளை, பல நோய்கள் அண்டுவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகமாக மசாலாப் பொருள்களைப் பயன்படுத்தும் இந்தியர்களைவிட, அமெரிக்கர்களுக்கு மூன்று மடங்கு பெருங்குடல் புற்றுநோய் (Colon cancer) வருவதற்கான அபாயம் உண்டு. மஞ்சள், கிராம்பு, லவங்கப்பட்டை போன்றவை பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகின்றன. அல்சைமர் எனப்படும் மறதி நோயும் மற்ற நாடுகளைவிட நம் நாட்டில் மிகவும் குறைவு. அதேவேளையில் மசாலாப் பொருள்களின் பயன்பாடு அதிகம் உள்ள ஸ்பெயின், கிரேக்கம் போன்ற நாடுகளில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை அவ்வளவாக இல்லை. பாரம்பர்ய மருத்துவத்துக்கு முக்கியத்துவம் தரும் நம் நாட்டிலும் சீனாவிலும்தான், நறுமணமூட்டிகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவு தயாரிக்கப் பயன்படும் பொருள் கள் பற்றியும் அவற்றின் தன்மைகள் பற்றியும் நம்மிடமிருந்த விசாலமான பாரம்பர்ய அறிவு, இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. அசைவ உணவுகள் உள்ளிட்ட கடினமான உணவுகள் எளிதாகச் செரிமானமாக சீரகம் அல்லது ஓமம் சேர்ந்த குடிநீரை அருந்தினோம். இப்போது அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, வாயு நிரப்பிய பன்னாட்டுக் குளிர்பானங்களை அருந்துகிறோம். இயல்பாக நடக்கவேண்டிய செரிமானத்துக்கு, மாத்திரைகளின் துணை யைத் தேடுகிறோம். தண்ணீரில் சீரகத்தைக் காய்ச்சிப் பருகும் கேரள மாநிலத்தவரின் பழக்கத்தை, தென்னிந்திய பாரம்பர்யத்தின் மிச்சமாக மட்டுமே பார்க்க முடிகிறது.

மிளகில் உள்ள Piperine, Pinene, சீரகத்தில் உள்ள Cineole, Cymene, மஞ்சளில் உள்ள Curcumin என அவற்றில் உள்ள வேதிப்பொருள்கள் நோய் போக்கும் தன்மையைக்கொண்டுள்ளன. மற்ற பொருள்களில் இல்லாத குறிப்பிட்ட வேதிப்பொருள்கள், நறுமணமூட்டிகளில் இருப்பது சிறப்பு. `சீரகம் இல்லா வீடும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது…’, `பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம்…’, `சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை…’ என நறுமணமூட்டிகள் பற்றி புழக்கத்தில் இருக்கும் பழமொழிகள், அவை நம் மரபுடன் எவ்வளவு பிணைந்திருக்கின்றன என்பதை உணர்த்துகின்றன.

முன்பு சமையலறையில் நீங்கா இடம்பிடித்த அஞ்சறைப் பெட்டியில், அங்கம்வகித்த மருந்துப் பொருள்களை இன்றைய சமையலறைகளில் அவ்வளவாகப் பார்க்க முடிவதில்லை. ரசப்பொடி, சாம்பார் பொடி, இஞ்சி-பூண்டு விழுது என அனைத்துமே ’இன்ஸ்டன்ட்’ ஆகிவிட்டன. அதிவேக உலகில் நேரமின்மையை ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லி ரெடிமேட் மசாலாக்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். அவற்றின் தரம், கலப்படம் பற்றி நம்மால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

சாப்பிடும்போது நாவுக்குச் சுவை அள்ளித் தருவது மட்டுமே சிறப்பான உணவல்ல. சுவையுடன் சேர்த்து உடலுக்கு ஊட்டம் கொடுத்து, நோய்கள் உண்டாகாமல் பாதுகாக்கும் அரணாகவும் பயன்படுவதே முழுமையான உணவு. அப்படிப்பட்ட முழுமையான, திருப்திகரமான உணவை உருவாக்க மசாலாப் பொருள்கள் பயன்படுகின்றன. அவற்றின் பயன்களைப் பற்றித் தெரிந்துகொண்டு, பல்வேறு நாடுகள் பயன்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கின்றன. ஆகவே, நம்முடன் பின்னிப் பிணைந்த இயற்கையான மசாலாப் பொருள்களை முறையாகப் பயன்படுத்தி நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கலாம்.

வாசனைப் பொருள்களின் சரித்திரம், அதன் மருத்துவப் பயன்கள், உணவுப் பொருள்களின் அடிப்படை, அறமற்ற கலப்படம், நமது மரபு சார்ந்த தொடர்ச்சி போன்றவை பற்றித் தெரிந்துகொள்ள, தொடர்ந்து நறுமணப் பொருள்களின் தீவுக்குள் பயணிப்போம்!

சுவையுடன் சேர்த்து உடலுக்கு ஊட்டம் கொடுக்கவும், நோய்கள் உண்டாகாமல் பாதுகாக்கும் அரணாகவும் பயன்படுவதே முழுமையான உணவு.