பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

பாயசம் செய்யும்போது திராட்சைப் பழங்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாகச் சேர்த்தால் தனிச்சுவையைத் தரும்.

- அ.பவானி, வயலூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

வேர்க்கடலையை வறுப்பதற்கு முன்பு லேசாக நனைத்துவிட்டு வறுக்கவும். இதனால் வேர்க்கடலையின் நிறம் ஒரே மாதிரி இருக்கும். தோலை உரிக்கவும் எளிதாக இருக்கும்.

- அமுதா அசோக்ராஜா, திருச்சி-15

டிப்ஸ்... டிப்ஸ்...

றுகாய் போடும்முன் கல் உப்பை வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து, பிறகு அதில் ஊறுகாய்க்கான காய்களைப் போட்டால், ஊறுகாய் நெடுநாள்கள் வரை கெடாமல் இருக்கும்.

- பா.குணா, வயலூர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு