பொம்மைகள் எந்தக் காலகட்டத்திலும் குழந்தைகள் விரும்பும் விளையாட்டுப் பொருள். பொம்மைகளோடு விளையாடுவது குழந்தைகளுக்குக் கற்பனையையும், புதிய சிந்தனைகளையும் உருவாக்கும். ஆனால், சில குழந்தைகள் பொம்மைகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குவர். இந்தப் பயம் சிலருக்கு குழந்தைப் பருவத்திலேயே சரியாகிவிடும். சிலருக்குப் பெரியவரான பிறகும் தொடரும். பொம்மைகள் மீதான பயத்தை ‘பீடியோபோபியா’ (Pediophobia) என்கிறார்கள்.

சிலர் அனைத்து வகையான பொம்மைகளுக்கும் பயப்படலாம். சிலர் குறிப்பிட்ட வகை (நடக்கும் அல்லது பேசும்) பொம்மைகளுக்கு மட்டும் பயப்படலாம். கடந்தகாலத்தில் அதிர்ச்சிகரமான பொம்மை குறித்த பாதிப்புகள் மூளையில் பதிந்துவிட்டதால் பொம்மைகளைப் பார்க்கும்போது அந்த நினைவுகளோடு தொடர்புபடுத்தி பயம் கொள்வர். சிலர் சிறு வயதில் பேய்ப்படங்களில் பொம்மைகளைப் பார்த்துவிட்டு அதனாலும் பயம் கொள்வதுண்டு. பொம்மைகள் மீதான பயம் ஏற்படுவதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவரின் மனதில் ஆழமான கொந்தளிப்பு இருக்கும். உடல் மற்றும் உணர்வு ரீதியான எழுச்சிகள் இருக்கும். பொம்மைகளைப் பற்றிய பயத்தால் பாதிக்கப்பட்டவரிடம் உலர்ந்த வாய், அதிகரிக்கப்பட்ட இதயத்துடிப்பு, மரண பயம், நடுக்கம், அழுகை போன்ற அறிகுறிகள் தென்படும்.

சிகிச்சை: பீடியோபோபியாவை எதிர்கொள்ள ஹிப்னாஸிஸ் மற்றும் அறிவாற்றல் நடத்தை ஆகிய இரண்டும் மிகச்சிறந்த வழிகள். நல்ல மருத்துவர் மூலமே இதைக் குணப்படுத்த வேண்டும். Gradual exposure therapy (மெதுவாக பயத்தைப் போக்குவது) இதற்கு நல்ல பலனைக் கொடுக்கும். முதலில் பொம்மை, பேய்களாக இல்லாத படங்களைப் பார்ப்பது, பிறகு பொம்மைகளைக் கையாள்வது போன்று படிப்படியான நிகழ்ச்சிகளை ஒரு சிகிச்சையாளரின் முன்னிலையில் செய்வர். அலட்சியப்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்பது மிகவும் சிரமம். எனவே, உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.

- இ.நிவேதா